
"An economist is an expert who will know tomorrow why the things he predicted yesterday didn't happen today."- Laurence J. Peter
கடந்த சில மாதங்களாக எந்த செய்தித்தாளை எடுத்தாலும் அதில் உலகப் பொருளாதார நிதி நெருக்கடியைப் பற்றிய செய்திகளும், அதையொட்டிய சில கட்டுரைகளும் இல்லாமல் இருப்பதில்லை. தற்போதைய நிதி நெருக்கடி(Credit Crunch) முதலாளித்துவத்தை முச்சந்தியில் தள்ளிவிட்டது என்றும், இது முதலாளித்துவத்தின் முடிவு என்றும் சொல்கிறார்கள்.இதை நான் நம்பவில்லை. இன்னும் சிலர் புதியபொருளாதாரக் கோட்பாடு வேண்டும் என்றும், இந்த நிதி நெருக்கடி உண்மையான மாற்றத்திற்கான சந்தர்ப்பம் என்றும் அறைகூவல் விடுக்கின்றனர். Joseph Stiglitz , உலகில் இப்போது அனைவருமே Keynesian's என்கிறார்.
தற்போதைய மற்றும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளாக பொருளாதார அறிஞர்கள் முன்வைக்கும் முக்கியக் கொள்கைகளை(The Standard Keynesian approach, The Conservative approach, The Heterodox approach) சுருக்கமாக இயன்றவரை தமிழில் எழுதிப்பழகவே பொருளாதாரக் குறிப்புகள் என்னும் இந்தத் தொடர்பதிவு. அடுத்த பதிவிலிருந்து ஒவ்வொரு கொள்கையாக எழுதமுயற்சிக்கிறேன்.