Saturday, April 19, 2008

நிகழ்காலக் கண்ணகிகள்

சங்ககாலக் கண்ணகி சிலைக்கு ஆட்சியாளர்கள் கொடுத்த முக்கியத்துவத்தில் சிறிதளவேனும் குப்பையில் தன் அன்றாட வாழ்வைத்தேடிக்கொண்டிருக்கும் நிகழ்காலக் கண்ணகிகளுக்கும் கிடைக்கும் என்று நம்புவோம்.

Saturday, March 15, 2008

இந்திய ஊடகங்களைக்(Media) குறித்து சாய்நாத்

Excerpts:

" Conventional journalism is about Service to power..and lot of what we call, journalism is really stenography to the powerful".

" You do not have a single correspondent in the national press who's full time job it is to cover poverty.And the country which has largest number of poor people in the planet,newspapers and channels do not think it is important to treat poverty as a beat"

"I'm saying if you are not talking to 70% of your population, how can you reflect what you are asking them to reflect?"

Saturday, October 27, 2007

என் வீட்டுத்தோட்டத்தில்!

எங்கூர்ல இப்ப வசந்தகாலமுங்க. வீட்ட சுத்தியும் பூவாதான் தெரியுது.

Macro உபயோகப்படுத்தினால் நீங்களும் இந்த மாதிரி க்ளிக்கலாம்.









தேன்,தேன் தித்திக்கும் தேன்!

Tuesday, August 07, 2007

போர்ட்ரெய்ட் புகைப்படப் போட்டிக்கு



பாப்பாக்கு தோசை-வடை காம்பினேசன் தான் பிடிச்சிருக்காம் :)

சாமி சத்தியமா சொல்றேன்..பே வாட்சோ, பேஷன் டீவியோ பார்க்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல இது :)

Friday, August 03, 2007

புத்தக விமர்சனம்- ” Plain Speaking: A Sudra’s Story “


தமிழக அரசியலை ஓரளவாவது பின்தொடர்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை எழுதியவரை அறிமுகம் எதுவும் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன்..இவர் கொடுத்த அறிக்கையின் ஒரு பகுதியை செயல்படுத்திய எம்.ஜி.ஆர் அடுத்து வந்த நாடளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் Collectorate of Salt Revenue and Central Excise(1942-44) இருந்தபோது உருவாக்கிய எக்ஸைஸ் வரிவிதிப்பு முறை இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது…தற்போது ஒரு ஐந்தாறு வருடங்களாக அரசியலில் அதிகம் புழங்கப்படும் வார்த்தையான {Not Pseudo-Secular :) } Creamy Layer என்ற வார்த்தையை 1969 களில் Upper Crust என்ற பதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைத் தலைவராக இருந்தபோது அவர் சமர்ப்பித்த அறிக்கையில் பயன்படுத்தியுள்ளார் (Tamil Nadu Backward Classes Commission). இவர் பெயர் சட்டநாதன்.

தென்தமிழ்நாட்டில் செங்கோட்டை என்னும் ஊரில்..வறுமைவாய்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட படையாச்சி என்னும் சாதியில் பிறந்த சட்டநாதன் அவர்களால் ஒரு குயர் நோட்டில், 48 வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்திருந்த அவரது சிறுவயது வாழ்க்கைக் குறிப்புகள்தான்(Memoirs) இந்தப் புத்தகம். இதைத்தான் அவருடைய பேத்தி உத்ரா நடராஜன் அவர்கள் Plain Speaking: A Sudra’s Story என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். விமர்சனத்தை இங்கே எழுதியுள்ளேன். படிச்சு பார்த்துட்டு கருத்து எதுனா இருந்துச்சுனா சொல்லுங்க. :)

Tuesday, July 31, 2007

பாம்பு என்றால் படையும் நடுங்குமா?

என்னத்த சொல்றதுனு தெரிலீங்கோவ்..:)

Tuesday, July 17, 2007

வானவில்..

இன்று மதியம் இங்கே ஒரே பனிக்கட்டி மழை... அலுவல் முடிந்து வீட்டுக்குப் போக ஆபிஸ் வாசல் தான்டி வெளியே வந்து ரோடு க்ராஸ் பண்ணி வானத்தைப் பார்த்தால் இந்த வானவில்..4 டிகிரி குளிர்ல வேலையின் களைப்பையும் மீறி மனதிற்கு மகிழ்ச்சி அழித்தது இந்த வானவில்..என் கைத்தொலைபேசியில் உள்ள

கேமிராவைக் கொண்டு எடுத்த படம்...படம் தெளிவாக இல்லை என்றாலும் இந்தக் காட்சி மனதில் அப்படியே பதிந்துவிட்டது.



















இந்த போஸ்ட்ல நான் குறிப்பிட்ட குழந்தைகள் இவங்கதான்.. I mean..இவங்கள மாதிரிதான் :)

Saturday, June 23, 2007

ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition )



2005-06ஆம் ஆன்டுக்கான இந்தியக் குடும்ப நல (National Family Health Survey)சர்வேயின் படி தற்போது இந்தியாவில் இருக்கும் மூன்று வயதுக்குக்கீழுள்ள குழந்தைகளில் 46% பேர் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்களாம்.உலகத்திலேயெ இந்தியாவில்தான் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள் என்று BBC இனையதளத்தில் படித்தபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஏழைகள் அதிகம் என்பது தெரிந்ததே, ஆனால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியர்கள் மொத்த மக்கள்தொகையில் 26% பேர், அப்படி இருக்கையில் எப்படி 46% குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்கள்? இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் 26% மக்களின் குழந்தைகள்தான் இந்த 46% ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளா? வறுமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படுமா என்றெல்லாம் யோசித்துவிட்டு அந்த விஷயத்தை அப்படியே மறந்துவிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் ஏழ்மை காரணமாக அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு போதிய உணவு அளிக்கமுடிவதில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அது முற்றிலும் தவறு என்று நேற்றும், இன்றும் இந்துபத்திரிக்கையில் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் பற்றி ஏ.கே சிவக்குமார் என்பவர் விபரமாக எழுதியிருந்ததைப் படித்தவுடன் தெரிந்தது..

Why are levels of child malnutrition high?

Why are child malnutrition levels not improving?

"Why are levels of child malnutrition so high in India? Several misconceptions cloud public opinion. Many believe, for instance, that India’s low per capita income is the major underlying cause. This is not entirely true. A majority of the countries in Sub-Saharan Africa report lower levels of per capita income than India — and most of them report lower rates of child malnutrition as well. Again, within India, we find that Gujarat and Uttar Pradesh report the same proportion — 47 per cent — of underweight children even though the per capita income in Gujarat is several times higher than in Uttar Pradesh".


குழந்தைகள் ஊட்டச்சத்தின்மைக்கு நான்கு காரணங்களைச் சொல்கிறார்,

1. கருவில் இருக்கும்போதே தாயின் மூலம் குழந்தைகள் பெறும் ஊட்டச்சத்தின்மை.இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 20% லிருந்து 30% குழந்தைகள் 2500 கிராமிற்கும் குறைவான எடையுடனே பிறக்கின்றனர்.

2. பொதுசுகாதார மைய வசதி இல்லாமை மற்றும் அவைகளின் செய்திகள் பெற்றோர்களைச் சென்று சேராமை. இதில் அவர் கூறும் மற்றொரு புள்ளிவிவரம் கவலையளிக்கிறது..2005-06ல் இந்தியாவில் பிறந்த குழந்தைகளில் 48% குழந்தைகளின் பிரசவங்கள் மட்டுமே Ttrained birth attendant(which includes a doctor, nurse, woman health worker, auxiliary nurse midwife, and other health personnel)
உதவியுடன் நடந்தததாம்.(இனிமேல் இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சியடைந்தது,9% வளர்ச்சியடைந்தது என்று யாரவது பெருமைப் பட்டால் இந்த புள்ளிவிவரத்தை அவர்களிடம் சொல்லலாம் என்றிருக்கிறேன்).

3. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகள்.

4.பெண் கல்வி,அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் விழிப்புணர்வு.

இதைப் படித்தவுடன் எனக்கு நிஜமாகவே பயமாக இருக்கிறது.. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கானும் அதே நேரத்தில் இந்தியாவை வல்லரசாக மாற்றப் போகும் தலைமுறையின் உடல் நலத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

Sunday, March 04, 2007

உய்யுமோ... உயர்கல்வி?

ஒரு நாட்டின் வளர்ச்சியின்மைக்குப் பல காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றின் கூட்டுவிளைவால் வளர்ச்சிப் பாதையிலிருந்து பின்னோக்கி இழுக்கப்படுகிறது நமது நாடு. குறிப்பாக, கல்வியின்மையின் அளவு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது (35 சதவீதம்) கவலைக்குரியது. இதுவே வளர்ந்த நாடுகளில் 5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.


நமது நாட்டின் மக்கள்தொகை ஏறத்தாழ 60 சதவீதம் அளவுக்கு இளைஞர்களைக் கொண்டிருக்கிறது என்பதால் உலகிலேயே மிக இளமையான நாடு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்குரிய கல்வியையும், வேலை வாய்ப்பையும் தர முடியாததால் அதுவே பெரும் சுமையாக உருவாகி இருக்கிறது... இருக்கப் போகிறது!
அரசியலமைப்புச் சட்டத்தின்படி 6 - 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்க வேண்டியதன் பெரும்பகுதி வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. அதிலும் 3 - 6 வயதுடைய குழந்தைகள் சுமார் 7 கோடிக்கு மேல் இருப்பினும், அவர்களுக்கு கல்வியறிவை அளிக்காமல் இருப்பது நமது நாட்டுக்குப் பெருத்த இழப்பைத்தான் ஏற்படுத்தும்.


தொடக்கக் கல்வியில் அரசுகள் எடுத்துக்கொண்ட அக்கறை மிகமிகத் தாமதமானது என்பது ஒருபுறமிருக்க, எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை என்பதே உண்மை! (முடிந்தவரை சுமையை மாநில அரசுகளின் மீது இறக்கி வைக்கவே மத்திய அரசு முயல்கிறது). இன்னமும் 40 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் கட்டடங்கள் இன்மையாலும், 20 சதவீதம் பள்ளிகள் ஒரே ஒரு அறை கொண்டதாகவும், 39 சதவீதம் பள்ளிகள் கரும்பலகை கூட இல்லாததாகவும், 35 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும் உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.


முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்கான மொத்த பட்ஜெட்டின் பங்கீட்டில் தொடக்கக் கல்விக்கான பங்கு 58 சதவீதமாக இருந்தது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலம் வரை இந்த ஒதுக்கீடு மெல்ல மெல்ல குறைந்து, பின்பு மீண்டும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 66 சதவீதமாக வளர்ச்சி பெற்றது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 9.5 சதவீதமாக இருந்தது.

இதே காலகட்டத்தில் 5-ம் வகுப்பிற்குப் பிறகு 35 சதவீதம், 8-ம் வகுப்பிற்குப் பிறகு 53 சதவீதம், 10-ம் வகுப்பிற்குப் பிறகு 63 சதவீதம் என பள்ளியை விட்டு மாணவர்கள் இடையிலேயே வெளியேறும் விகிதம் உயர்ந்தது.
பெண் குழந்தைகளின் இவ்விகிதம் இன்னும் சற்று அதிகமாகும். இவ்விகிதங்களைக் கட்டுப்படுத்த இன்றைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மூலபலம் போதிய அளவில் ஒதுக்கப்படும் நிதி அளவாக மட்டுமே இருக்க முடியும்! ஆனால் இன்றளவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே கல்விக்கான ஒதுக்கீடு இருந்து வருகிறது. கல்விக்கான பிரத்யேகமான வரிவிதிப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இருந்தாலும் அது முழுமையாகச் செலவழிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

உயர்கல்விக்கு போதியஅளவு நிதி ஒதுக்கப்பட்டால்தான், "அனைவருக்கும் கல்வி'', "உரிய அளவில் உயர்கல்வி'' என்ற முழக்கங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இன்றைய நிலையில், உயர்கல்வி மாணவன் ஒருவனுக்காக சராசரியாக ரூ. 18,270/-மட்டுமே நமது நாட்டில் செலவிடப்படுகிறது. இது மிகமிகக் குறைந்த செலவினமாகும். இந்தோனேஷியாவில் ரூ. 30 ஆயிரம் மலேசியாவில் ரூ. 53 ஆயிரம் பிலிப்பின்சில் ரூ. 28 ஆயிரம், சீனாவில் ரூ. 1.22 லட்சம், பிரேசிலில் ரூ. 1.79 லட்சம், ஜப்பானில் ரூ. 2.17 லட்சம், பிரிட்டனில் ரூ. 3.82 லட்சம், அமெரிக்காவில் ரூ. 4.33 லட்சம் என்ற அளவில் உயர் கல்விக்கு செலவிடும் நிலை ஒப்பு நோக்கத்தக்கது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் உழைப்பதற்குத் தயார் நிலையிலுள்ள உழைப்பாளிகளை போதிய பயிற்சியின்மை மற்றும் கல்வித் தகுதியின்மை என்ற நிலைகளில் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இது நமது நாட்டைப் பொறுத்தவரை கண்கூடு. மனித வளர்ச்சிக் குறியீட்டில் உலகின் 174 நாடுகளின் தர வரிசையில் 124-வது இடத்தைப் பிடித்துள்ள (2004-ஆம் ஆண்டு கணிப்பு) நாம், மேலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்படும் அவலம் உள்ளது. எனவே 14-23 வயதிற்குட்பட்ட பெரும்பாலானோர்க்கு உரிய தொழிற்பயிற்சி அல்லது உயர்கல்வி தரப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்.

இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் ஒதுக்கீட்டிற்காக, மத்திய அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்., போன்ற சுமார் 20 நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களை அதிகரிப்பதற்கு மட்டுமே அடுத்த மூன்றாண்டுகளில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் கல்வி' திட்டத்தை மேலெடுத்துச் செல்லத் தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவும் அவசியமும் இதிலிருந்து ஓரளவிற்குப் புலனாகும்!

உயர் கல்விக்கான வயது வரம்பான 17 - 23-ல் இன்று உயர் கல்வி பெறுவோரின் அளவு சுமார் 8 சதவீதம் மட்டுமே! தேசிய வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் எந்தவொரு நாட்டிலும் இவ்விகிதம் 13 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டியது அவசியம். நமது நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால் இவ்விகிதம் குறைந்தபட்சம் 20 சதவீதம் என்றாவது அமைய வேண்டும் என்கின்றனர் பொருளாதார மேதைகள்.


சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் கடும் போட்டியால் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க, நம் நாட்டில் உயர்கல்வியைத் திட்டமிட்டு உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது! 112 கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 105 லட்சம் மாணவர்களே உயர்கல்வியை எட்டுவதும், 1.4 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வதும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய மக்கள்தொகைப் பெருக்க நெருக்கடியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
உயர்கல்வி முற்றிலுமாகத் தனியாருக்கே தாரை வார்க்கப்படுகிற நிலை; 8 சதவீதமாக உள்ள உயர்கல்விக்கான மாணவர் விகிதம் கட்டாயமாக உயர்ந்தே ஆக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் கடைபரப்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அணிவகுப்பு; உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் முறைகேடுகள்; பல்கலைக்கழக ஆட்சிமுறை நிர்வாக கோணல்கள்; அரசுகளின் பாரா முகம் போன்ற பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்திருக்கும் நமது உயர்கல்வி, வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு ஆருடம் தேவையில்லை!

1.நால்வரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கும் கீழே உழன்று கொண்டு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இல்லாத நிலையில், அனைவருக்கும் கல்வியை அளிக்கப் போகிறோமா?

2.உரிய வயதில் உள்ள ஐவரில் ஒருவருக்காவது உயர்கல்வியைச் சுவைக்கும் வாய்ப்பை அளிக்கப் போகிறோமா?

3.கல்விக்கான செலவினம் நாட்டின் வருங்காலத்திற்கான முதலீடு என்ற உணர்வுடன் 2020-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதார வல்லரசாக உயரப் போகிறோமா?

இத்தகைய எண்ணற்ற வினாக்களுக்கு விரைவில் விடை காணத்தானே வேண்டும் நாம்!

நன்றி-தினமணி

Friday, December 29, 2006

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்- 2007

நண்பர்களே,

எல்லாருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



Monday, October 02, 2006

Curse On Humanity!

இந்த வீடியோவ பார்த்துட்டு, நம்ம நாடு உருப்படுமானு சொல்லுங்க.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உழிழ்ந்துவிடு பாப்பா.

-மகாகவி பாரதியார்

Thursday, August 24, 2006

கல்விக்குக் குறைந்த நிதி!


மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையிலான குழு பரிந்துரைத்த "கல்வி உரிமை வரைவு மசோதாவை'ச் சட்டமாக்கி அமல்படுத்தினால் கூடுதல் நிதி நெருக்கடி ஏற்படும் என்ற கருத்தின் அடிப்படையில் சட்டமியற்றி நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் 86-வது அரசியல் சாசனத் திருத்தம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படைக் கல்வி உரிமையை மறுத்து இந்த நாட்டின் கோடானு கோடி மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது.

கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 10 சதவீதமாகவும், மாநில அரசின் ஒதுக்கீடு 30 சதவீதமாகவும் உயர வேண்டுமெனத் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக் கோரிக்கைகளின் நியாயங்கள் இன்னும் உணர்ந்து கொள்ளப்படாமலே உள்ளன.

ராணுவச் செலவுக்குத் தன்னுடைய பட்ஜெட்டில் 15 சதவீதத்திற்கும் மேல் பணம் ஒதுக்கித் தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம், எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவீதத்தைத்தான் ஒதுக்குகிறது. இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதியைக் காட்டிலும் ஒட்டுமொத்த கல்விக்காக ஒதுக்கும் நிதி குறைவு.

இதனால் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இதிலும் பள்ளிப்படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.

1951-ல் இருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கேற்ப கல்விக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப்பள்ளிகளாவது இந்தியாவில் தற்பொழுது இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதன் எண்ணிக்கை 2005-ல் சுமார் 5,81,000 மட்டுமே.
விளைவு, தற்பொழுது நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை (கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அல்ல) 65 சதவீதமாகத்தான் உள்ளது. அதாவது உலகில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளனர்.

"கல்வி பற்றிப் பேசும்பொழுது ஒரு சமுதாயத்தின் முழு கட்டமைப்பைப் பற்றியும் அதன் முழுத்திட்ட அமைப்புகளைப் பற்றியும் பேசுகிறோம்' என்ற லத்தீன் அமெரிக்க சிந்தனையாளரான பவுலோ ஃபிரைடேவின் வார்த்தைகளில் உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொண்டால்தான் இளந்தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடு என்ற பார்வை நமக்கு வரும்.

இவையெல்லாம் உணரப்பட்டு கல்வியறிவு இல்லாத மக்களை நாட்டின் சுமைகளாகக் கருதி அதை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யாதவரை 9 சதவீத அல்லது 10 சதவீத வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்கும்.

நன்றி- தினமணி.

Sunday, August 06, 2006

விலகாத காரிருள்!

உலக மக்கள் மறக்க முடியாத; மறக்கக் கூடாத நாள் ஆகஸ்ட் 6, 1945. அன்றைய தினம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது ஒரு கோடி சூரியன்கள் தோன்றியதாகத் தோற்றம் காட்டி 2 லட்சம் உயிர்களைக் குடித்த அமெரிக்க அணுகுண்டு தாக்குதல் பின்னர் அந் நகரில் இருளை உருவாக்கியது. அக் காரிருள் இன்று உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கிறது.

ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9ம் தேதி வீசப்பட்ட மற்றோர் அணுகுண்டுக்கு இதுவரை பலியானோர் 1.40 லட்சம். இக் குண்டு வெடிப்புகளில் உடல் தீப்பற்றி எரிந்து, நுரையீரல்கள் வெடித்து இறந்தவர்கள் மட்டுமன்றி கதிரியக்கத்தால் புற்றுநோய், மூளைக் கட்டிகள் ஏற்பட்டு தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பலர் இறந்தனர்.
இறந்தவர்களைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு கதிரியக்கத்துடன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் சொல்லொணா துயரம் தாங்கினர். இத் துயரத்தைக் கண்ணுற்ற பிறகும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக்கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகும் உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன.
அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவில் 10,104 அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷியா - 16,000, இங்கிலாந்து - 200, பிரான்ஸ் - 350, சீனா - 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இவை தவிர அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் நிலையில் உள்ள புளுட்டோனியம் அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளது. 1945 முதல் இதுவரை 2,051 அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 528 வான்வெளியில் நடத்தப்பட்டவை. இதன் மூலம் வெளியிடப்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மெகா டன் அணு ஆயுத சோதனைக்கும் 10,000 பேர் இறப்பர் என சோவியத் விஞ்ஞானி ஆந்ரேய் சகாரவ் கணக்கிட்டுள்ளார்.
கார்பன் 14 என்ற கதிரியக்கப் பொருளை சுவாசிப்பதன் மூலம் ஏற்படும் புற்றுநோய், சாவுக்கு காரணமாக இருக்கும். இதன்படி அடுத்த சில நூறு ஆண்டுகளில் 50 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் 5 அணுஆயுத நாடுகள் நடத்திய வான்வெளி சோதனையின் வெடிப்புத் திறன் 545 மெகா டன். இந் நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றம் முழுமையான அணுவெடிப்புச் சோதனை தடை ஒப்பந்தத்துக்கு (CTBT) இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 1998ம் ஆண்டு அணுவெடிப்புச் சோதனை நடத்திய இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேயில்லை.

இப் பின்னணியில் தான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணுஆயுதங்களின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு வழிவகுக்கும் என சமாதான இயக்கங்களைச் சேர்ந்தோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் தயாரிப்பு, அணு ஆயுதம் ஏந்தும் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது, கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அணு ஆயுதத் திட்டத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இதே அளவு நிதியைத்தான் தொடக்கக் கல்விக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது.
இந் நிலையில்தான், நிதிச்சுமையைக் காரணம் காட்டி, கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்கிறது; இப் பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தும் வகையில் மாதிரி சட்ட முன்வடிவை சட்டமாக்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும்.
"அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ, போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.'

ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்கு விடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை (Neuclear Weapons Convention) "அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது' ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை "முற்றிலும் ஒழிப்பது' ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது குறித்த பலதரப்பு பேச்சுவார்தையை முடிவுக்கு கொண்டு வந்து உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது அவசர அவசியத் தேவையாகும்.

நன்றி- தினமணி


அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். :)

Saturday, July 22, 2006

என்னத்த சொல்றது?

இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.

அப்படினு அய்யன் வள்ளுவன் அறிந்து சொன்னதுனால, முதல்ல ஒரு இனிமையான விஷயம் சொல்லி பதிவை தொடங்குகிறேன். நம்ம நண்பியும்,சக வலைபதிவாளினியுமான மருதம் இருக்காங்களே அவுங்க இனிமையான ஒரு பாடல்(யமுனை ஆற்றிலே)பாடி நாம எல்லாரும் கேட்கறமாதிரி அவுங்க பதிவில் லிங்க் குடுத்திருக்காங்க,கேட்டுப் பாருங்க.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்ததா இந்த மும்பாய் குண்டு வெடிப்பு சம்பவம். முதலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது நிலவும் பீதி,மரனபயம்,கூச்சல்,குழப்பம் இதெல்லாம் நான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது நேர்ல பார்த்திருக்கேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும்,பல்வேறு இன, மொழி,மதம் சார்ந்த மக்கள் அதிக அளவில் வாழும் நம் நாட்டில், மதத்தின் பெயரால் சன்டைகள் நடந்துவரும் இந்த நூற்றான்டில் இது போன்ற குண்டு வெடிப்புகள் தவிர்க்க முடியாதவை என்றே எனக்குத் தோன்றுகிறது.இது போன்ற குண்டு வெடிப்புகள் இந்தியாவில் நிறுத்தப் படவேண்டும் என்றால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கானவேண்டும், இருவேரு மதக்குழுக்களிடயே ஒற்றுமை நிலவ வேண்டும்,மசூதியை இடித்த காட்டுமிரான்டிக் கூட்டம் திரும்பவும் மசூதியை கட்டித்தர முன்வரவேண்டும்,மசூதிக்காகப் போராடுகிறவர்கள் ராமருக்குக் கோவில் கட்ட முன்வரவேண்டும்,சிறுபான்மை இனமக்களின் ஒட்டு வங்கியை குறிவைத்து நடத்தும் அரசியல் முற்றிலும் நிறுத்தப் படவேண்டும்.இதெல்லாம் சர்வ நிச்சயமாக நடக்கப்போவதில்லை என்பதனால் இதன் மூலம் பாதிக்கப்பட்ட அதிருப்திக் குழுக்கள் மூலமாக இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தே தீரும் என்பது என் கருத்து. சில மாதம் முன்னால் Gartner என்ற Consulting firm நடத்திய Conference கு போன போது அங்க வந்த ஒரு கம்பனியோட பெரிய தலை lunch சாப்பிடும் போது சொன்னாரு, If i have the power to implement three things in the world then I can make this world very peaceful.

1. Abolish all religion.
2. Change American foreign policy.
3.No Testosterone.

அப்பறம் இந்த டாவின்சி கோட் படம். நம்ம ஊர்ல என்னடான்னா இந்த படம் கிருஸ்தவர்களின் மத உனர்வுகளை பாதிக்கிறதுனு சொல்லி தடைவிதிக்கறாங்க. கோர்ட்டுகெல்லாம் போய், இப்பதான் படம் ஒருவழியா வெளி வந்திருக்குது. இங்க ஆஸ்திரேலியால கிருஸ்தவர்கள்தான் அதிகம் ஆனா இங்க Devinci Code bag, toys nu எல்லாம் செஞ்சு விக்கறாங்க. (போன வாரம் Shopping போன போது super market ல இந்த படத்த பார்த்தேன். ப்ளாக்ல போடலாம்னு என்னோட Mobile la கிளிக் கிட்டேன்).நாம பாட்டுக்கு இந்தியா வல்லரசாகும்,வேற்றுமையில் ஒற்றுமை,சகிப்புத்தன்மைனு பேசிக்கறோம் ஆனா ஒரு சினிமாவ சகிச்சுக்க முடியலை.என்னத்த சொல்றது?(Note: I have the e-book of Davin Ci Code.let me know if you guys want it.)

இன்னோரு முக்கியமான விஷயம், நம்ம ஊருல Blogspot தடை செஞ்சாங்க. அதுக்கு என்ன காரனம்னு இப்ப சொல்றேன் கேளுங்க. எனக்கும்,என் குருவுக்கும் ஆப்பு வைக்கிறேன்னு சில மக்கள் கெளம்பிருக்கறாங்க ;).என் குருகிட்ட இதை பற்றி கேட்டேன்,அவரும் பெருந்தன்மையோட அறியாப் பெண்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து விடலாம்னு சொன்னாரு.என்ன இருந்தாலும் என் குருவுக்கு ஆப்பு வைக்க நினைத்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாதுனு சொல்லி இந்த தடைக்கு ஏற்பாடு செய்தேன்.என் குருதான் தடையயை நீக்க சொல்லி சொன்னார்.என் குருவின் நல்ல மனச புரிஞ்சுக்கங்கப்பா ;).

Saturday, July 08, 2006

குரு போட சொன்ன ஆறு!

அணு அணுவாக பூக்களைப் பற்றி ஆராய்ந்து பதிவுகள் போடும் அனுசுயா அவர்களும், நம்ம பரத்(இவருக்கு எழுத்தாளர் சுஜாதா மேல ரொம்ப லவ்ஸ்) அவர்களும்,கல்லிடைக் குறிச்சியின் கட்டித் தங்கமும், கெட்டிச் சட்னியுமான( ஹி...ஹி,ஒரு எதுகை மோனையா இருக்கட்டுமேனுதான்)திருநெல்வேலி அல்வாவுக்கே கேசரி கிண்டி குடுக்கும் திறமைகளைக் தன்னகத்தே கொண்டுள்ள,எங்கள் தென்பான்டிச் சிங்கம்,தமிழர் குலக்கொழுந்து,கொள்கைச் செம்மல்,வீருகொன்ட வேங்கை,வெற்றித் திலகம்,தியாகத்தின் திருஉருவம், நடிகை அஸினின் தம்பியாம்
,எங்கள் அம்பி அவர்களும், ஆறு பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள்.ஆறு கேள்வியும்,பிடித்த ஆறு மனிதர்களைப் பற்றியும் எழுதவேன்டும்.

ஆறு கேள்விகள்.

1. எதுக்கு தமிழ் சினிமா நடிகைகள் மட்டும் வெட்கப்படும்போது "ச்சீய்ய்" சொல்றாங்க?மத்த state la எல்லாம் என்ன சொல்றாங்க?

2. "ஒரு பொண்ணோட மனசு இன்னோரு பொண்ணுக்கு தான் தெரியும்" ,"பதினெட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து பன்றவன்", " நீ இல்லாம ஒரு வாழ்க்கைய என்னால் கனவுல கூட நெனச்சுப் பார்க்க முடியாது" இது மாதிரி மொக்கை டயலாக் எழுதினவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்? (Grrrr)

3. சில பொண்ணுங்க அவுங்களோட kerchiefa ஏன் இறுக்கமா,கசக்கி(காக்கா வலிப்பு வந்தவன் கொத்துச்சாவிய புடிச்சிட்டிருக்கற மாதிரி) வெச்சிருக்காங்க.


4. மத்தியானம் 2 மணிக்கு "சுள்"னு அடிக்கற கத்திரிவெய்யில்ல,கொதிக்கும் மெரினா பீச் மனலில் இந்த காதலிக்கற மக்கள் மட்டும் எப்படி ஜாலியா சொரனையே இல்லாம சிரிச்சு பேசிட்டு இருக்காங்க?அட காதலுக்கு கன்னு இல்ல,சரி,சொரனையுமா இல்ல?

5.தற்போதைய சர்வேயின் படி நம்ம தமிழ்நாட்டில் 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் இருக்காங்களாம். கருவிலேயெ பெண் சிசுக்களைக் கொல்வது, கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போன்ற கொடூர கொலைக் குற்றங்களை எல்லாம் தான்டி, 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் என்ற 93% சம நிலை இருக்கிறது.இதற்கு யார் காரனம்?

6.எந்த கேள்வியெல்லாம் பரிட்சைக்கு வாராதுனு நெனச்சு படிக்காம விடரமோ,அதே கேள்விதான் அடுத்த நாள் வந்து தொலைக்கும். ஏன் இப்படி?


எனக்கு பிடித்த ஆறு பேர்.

1.இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.

என்று இரண்டே வரிகளில் உலகப் பொருளாதாரத்தை சொன்ன திருவள்ளூவர்.


2.எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;

எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதை படிப்பேன்.பாரதி இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ்ந்திருக்கக் கூடாதா?


3. இளையராஜா. How to Name It &" செந்தூரப்பூவே" கேட்டிருக்கீங்களா? சாதனைகள் முறியடிக்கப் படுவதற்கே என்றாலும்,இவர் செய்த சாதனைகளை இன்னோருவரால் முறியடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.




4.அருந்ததி ராய். இவங்க விஷயத்தை சொல்லும் விதம்.சொல்லும் கருத்துக்களுக்கு தகுந்த வார்த்தை பிரயோகத்திற்கு பெயர் பெற்றவர்.இவரது சில கட்டுரைகளை ஜார்ஜ் புஷ் முன் வாய்விட்டுப் படிப்பதும்,அவரை செருப்பால் அடிப்பதும் ஒன்றுதான். God of Small things என்ற தனது முதல் கதைக்கு புக்கர் பரிசு வென்றவர். I've the ebook of God of Small Things.Let me know if anyone wants it.




5.சச்சின் டெண்டுல்கர். இவரை பற்றி புதுசா சொல்ல என்ன இருக்கு?அவருடைய இந்த படம் நான் எடுத்ததுதான்.



6.Roger Federer.டென்னிஸ் என்ற பெயருக்கு பதிலாக இவரது பெயரைகூட சொல்லலாம்.











பின் குறிப்பு: அம்பி குருவே,அஸின் கைவிட்டு போனத நெனச்சு வருத்தப்படாதீங்க.குருவா,சமத்தா,வீட்டுல அம்மா பார்கற பொண்ண மட்டும் நெனச்சுட்டு இருங்க போதும். இனிமேலும் பொலம்பினா கோபிகா, கொளுந்தியாளாகவும், நயன்தாரா, நாத்தனாராகவும் மாற்றப் படுவார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை படித்துவிட்டு கோபம் கொள்ள வேன்டாம் குருவே,ஏனெனில் "ஆறுவது சினம்";).

I would like to Tag.

Sendhil,Marudham,Veda,KRK.

Monday, June 26, 2006

Never Argue with a Woman!

One morning the husband returns after several
hours of fishing and decides to take a nap. Although not familiar with the lake, the wife decides to take the boat out. She motors out a short distance, anchors, and reads her book.
Along comes a Game Warden in his boat. He
pulls up alongside the woman and
says,

"Good morning, Ma'am. What are
you doing?"

Reading a book," she replies,
(thinking, "Isn't that obvious?")

You're in a Restricted Fishing Area,"
he informs her.

I'm sorry, officer, but I'm not fishing.
I'm reading."

Yes, but you have all the equipment.
For all I know you could start at any
moment. I'll have to take you in and write
you up."

If you do that, I'll have to charge
you with sexual assault," says the
woman.

But I haven't even touched you,"
says the game warden.

That's true, but you have all the equipment.
For all I know you could start
at any moment."

Have a nice day ma'am," and he
left.

MORAL: Never argue with a woman who reads.
It's likely she can also think.

Picture Speak-Mens Life



Before Marriage.















After Marriage.





Is it true? experienced folks,Please throw some light on this ;).

Saturday, June 17, 2006

என் வீட்டுத் தோட்டத்தில்!

போன Ferengi's Rules of acquisition பதிவுல நீளமான லிஸ்ட்ட போட்டு வலையுலக நண்பர்களோட பொறுமைய சோதிச்சுட்டேன், அதனால அடுத்த பதிவு மென்மையான பதிவா போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் (மென்மைனு சொன்னாவே எங்கம்மா சுடும் இட்லி தான் நியாபகத்துக்கு வருது ஹி...ஹி..).மென்மையான இந்தப் பதிவுக்கான ஜடியாவ இவுங்க கிட்ட இருந்துதான் சுட்டனுங்கோவ், அதாவது நம்ம மியூசிக் டைரக்டர் தேவா ஸ்டைல்லா சொல்றதுனா இன்ஸ்பிரேசன் ;).இந்த பதிவுல எங்க வீட்டயும், எங்க drive way யும் சுத்தி இருக்கற பூக்களை எல்லாம் படம் எடுத்து போட்ருக்கேன்.





(My Driveway)




































(ரோஜா பூவ செடில இருந்து பறிக்க மனசு வரலீங் :)













(மாற்றான் தோட்டத்து எலுமிச்சை பழத்தில் செய்யும் எலுமிச்சை சாதத்திலும் சுவை இருக்கும் ஹி...ஹி)
























(மொத்தம் 30 வகையான பூக்கள் உள்ளது.)

Wednesday, June 14, 2006

Ferengi's Rules of acquisition

I came across this Ferengi's rules of acquistion recently.The word "Pure Profit" is something that interests you than anything else,then these rules can help you greatly.Rules that are in bold letters are the few rules that I have seen people using it in the past 1 year in the corporate world.

Who are Ferengi's?

Ferengi's are a spacefaring humanoid species native to the planet Ferenginar. Ferengi civilization was built on the ideals of free enterprise, where all other goals were subjugated to the pursuit of profit.

Ferengi's Rules of acquisition.

1. Once you have their money, you never give it back.

2. If you can't break a contract, bend it.
3. You can't cheat an honest customer, but it never hurts to try.
4. Never spend more for an acquisition than you have to.
5. Sex and profit are the two things that never last long enough.
6. Never allow family to stand in the way of opportunity.
7. Keep your ears open.
8. Keep count of your change.
9. Opportunity plus instinct equals profit.
10. A dead customer can't buy as much as a live one.
11. Latinum isn't the only thing that shines.
12. Anything worth selling is worth selling twice.
13. Anything worth doing is worth doing for money.
14. Anything stolen is pure profit.
15. Acting stupid is often smart.
16. A deal is a deal ... until a better one comes along.
17. A contract, is a contract, is a contract... but only between Ferengi.
18. A Ferengi without profit is no Ferengi at all.
19. Beware of relatives bearing gifts.
20. Satisfaction is not guaranteed.
21. There's nothing more dangerous than an honest businessman.
22. Never place friendship above profit.
23. A wise man can hear profit in the wind.
24. Never take the last coin, but be sure to get all the rest.
25. Never ask when you can take.
26. Fear makes a good business partner.
27. The vast majority of the rich in this galaxy did not inherit their wealth; they stole it.
28. The most beautiful thing about a tree is what you do with it after you cut it down.
29. Morality is always defined by those in power.
30. When someone says "It's not the money," they're lying.
31. Talk is cheap; synthehol costs money.
32. Never make fun of a Ferengi's mother ... insult something he cares about instead.
33. Be careful what you sell. It may do exactly what the customer expects.
34. It never hurts to suck up to the boss.
35. Compassion is no substitute for profit.
36. You could afford your ship without your government--if it weren't for your government.
37. Too many Ferengi can't laugh at themselves anymore.
38. You can always buy back a lost reputation.
39. Free advertising is cheap.
40. Praise is cheap. Heap it generously on all customers.
41. She can touch your lobes but never your Latinum.
42. Profit is its own reward.
43. Only negotiate when you are certain to profit.
44. Caressing an ear is often more forceful than pointing a weapon.
45. Never argue with a loaded phaser.
46. Profit has limits. Loss has none.
47. Labor camps are full of people who trusted the wrong person.
48. Don't trust a man wearing a suit better than your own.
49. The bigger the smile, the sharper the knife.
50. Old age and wisdom will always overcome youth and talent.
51. Never bluff a Klingon.
52. Never admit a mistake if they're someone else to blame.
53. Only Bugsy could have built Las Vegas.
54. Sell first; ask questions later.
55. Never buy anything you can't sell.
56. Always sell at the highest possible profit.
57. Pursue profit; women come later.
58. Good customers are as rare as latinum. Treasure them.
59. Friendship is seldom cheap.
60. Free advice is seldom cheap.
61. Never use credit where your words will do.
62. The riskier the road, the greater the profit.

63. Power without profit is like a ship without an engine.
64. Don't talk shop; talk shopping.
65. Don't talk ship; talk shipping.
66. Anyone serving in a fleet who is crazy can be relieved, if they ask for it.
67. Anyone asking to be relieved is not crazy and must be forced to serve.
68. War is good for business.
69. Peace is good for business.
70. Get the money first, then let the buyers worry about collecting the merchandise.
71. Greed is eternal.
72. Small print leads to large risk.
73. Money talks, but having lots of it gets more attention.
74. Never confuse wisdom with luck.
75. Home is where the heart is, but the stars are made of latinum.
76. Every once in a while, declare peace; it confuses the hell out of your enemy.
77. A bargain usually isn't.
78. There is no substitute for success.
79. Beware of the Vulcan greed for knowledge.
80. The flimsier the product, the higher the price.
81. Never let the competition know what you're thinking.
82. Don't lie too soon after a promotion.
83. When the customer is sweating, turn up the heat.
84. A friend in need is a customer in the making.
85. Ask not what your profits can do for you, but what you can do for your profits.
86. Females and finances don't mix.
87. Enough ... is never enough.
88. Trust is the biggest liability of all.
89. Give someone a fish, you feed him for one day. Teach him how to fish, and you lose a steady customer.
90. Never do something you can make someone do for you.
91. Sleep can interfere with opportunity.
92. Money is never made. It is merely won or lost.
93. Faith moves mountains ... of inventory.
94. There is no honor in poverty.
95. A Ferengi waits to bid until his opponents have exhausted themselves.
96. Sometimes what you get free costs entirely too much.
97. Dignity and an empty sack is worth the sack.
98. Never sleep with the boss' wife unless you pay him first.
99. Treat people in your debt like family... exploit them.
100. Never have sex with the boss's sister.
101. Always have sex with the boss.
102. Win or lose, there's always Hyperian beetle snuff.
103. Let others keep their reputation. You keep their money.
104. You can't free a fish from water.
105. Keep your lies consistent.
106. Buy, sell, or get out of the way.
107. Everything is for sale, even friendship.
108. Even a blind man can recognize the glow of latinum.
109. A friend is only a friend until you sell him something. Then he is a customer.
110. Law makes everyone equal, but justice goes to the highest bidder.
111. Wives serve, brothers inherit.
112. Only fools pay retail.
113. There's nothing wrong with charity ... as long as it winds up in your pocket.
114. Opportunity waits for no one.
115. Sell the sizzle, not the steak.
116. Even in the worst of times someone turns a profit.
117. Rules are always subject to interpretation.
118. Never spend your own money when you can spend someone else's.
119. If you can sell it, don't hesitate to steal it.
120. Know your enemies...but do business with them always.
121. Never offer a confession when a bribe will do.
122. Not even dishonesty can tarnish the shine of profit.
123. Never bet on a race you haven't fixed.
124. Borrow on a handshake; lend in writing.
125. Never cheat a Klingon ... unless you're sure you can get away with it.
126. It's always good business to know about new customers before they walk in your door.
127. The justification for profit is profit.
128. New customers are like razortoothed grubworms. They can be succulent, but sometimes they can bite back.
129. Sometimes more damaging than an answer is a question.
130. Employees are the rungs on the ladder of success... don't hesitate to step on them.
131. Never begin a business negotiation on an empty stomach.
132. Instinct without opportunity is useless.
133. Never gamble with an empath.
134. Always know what you're buying.
135. Possession is eleven-tenths of the law.
136. Beware of any man who thinks with his lobes.
137. Knowledge is power.
138. Beware the man who doesn't make time for oo-mox.
139. Latinum lasts longer than lust.
140. You can't buy fate.
141. Never be afraid to mislabel a product.
142. More is good ... all is better.
143. A wife is a luxury ... a smart accountant is a necessity.
144. A wealthy man can afford anything except a conscience.
145. Never allow doubt to tarnish your love of latinum.
146. When in doubt, lie.
147. Blood is thicker than water, but harder to sell.
148. Business is like war; it's important to recognize the winner.
149. Rules are always subject to change.
150. Deep down everyone's a Ferengi.
151. No good deed ever goes unpunished.

Tuesday, June 06, 2006

Money Smoking Zone!

Folks,don't get scared looking at these pics.These are the front covers of cigarette pockets that are currently sold in Australia.Few months back,Australian health ministry came up with this new regulation on tobacco industry that all the cigarette pocket covers should have these pics.

These pictures depicts mouth and forefoot of the person affected by cigarette smoking.It'll be a good move if Indian govt adapts this regulation on Indian tobacco industry.P.M.K guys can ask Dr.Anbumani Ramdoss(Health Minister) to act in this regard instead of going behind Actress Kushboo.

Latest survey on Indian tobacco user says 50% of the males in Tamilnadu and Pondichery are smokers .This figure is increasing 2% per year .5 lakh people are dying each year coz of tobacco related decease all over the world.In 2030, this figure is gonna be like 30 lakhs.If we call Tsumani as catastrophic incident(coz of 2 lakhs deaths) of this century ,How are we gonna call these incidents?

Let's look at this issue from a different angle.people are smoking and this number is increasing day by day. India with over a billion population is an excellent market for tobocco industry.What does it means to you and me apart from the fact that we also get affected by passive smoking?.

Can we make money out of it?

YES.By buying stocks in ITC(Indian tobocco Company) we can make money in the long term.Some finaicial facts about ITC is listed below,

ITC sells seven of every 10 cigarettes in India.It had a 36 percent gain in profit before a one-time expense, as demand for its tobacco and agriculture products increased.

ITC, which is 32 percent owned by British American Tobacco, sells cigarettes through more than two million outlets. The company is set to take advantage of restrictions placed on overseas tobacco companies, including limits on local manufacturing, at a time when higher economic growth is spurring Indian smokers to shift to costlier brands.

ITC has added new businesses such as foods, matches, incense sticks, apparel, deodorants, greeting cards and rural retail chains in the past six years, reducing dependence on tobacco. ITC's revenue from its 60 hotels rose 45 percent to 2.63 billion rupees. Profit before tax and one-time gains or costs gained 72 percent to 978 million rupees.

Dipak Acharya, a fund manager from BOB Asset Management in Mumbai says, "ITC will be able to maintain its growth momentum,There is no threat of competition in cigarettes. In hotels there is undersupply of rooms, and in paper, demand is outstripping supply."

The company's cigarette sales increased 15 percent, hotel revenue gained 45 percent, paper sales rose 15.6 percent and agriculture business surged 56 percent in the quarter.

Here you can analyse ITC's performance for the past 10 years.

What happens if we don't make money?

If we don't make money then we lose money in the form of our tax.WHO says,India could loose US$236 billions of dollars from it's national income over the next ten years as a result of heart disease, stroke, cancer and diabetes.So,we'll better start making money in order to pay back later. :)

Last but not the least,

புகை பிடிக்காதே நண்பா,
உன் உதடுகள்
புன்னகைப்பதற்க்காகவே
உற்பத்திசெய்யப்பட்டவை.

(I'm not the author of this kavithai,I read it long back in my college magazine)

Note:I thought twice before writing this post coz I didn't want this post turning out as some kind of advice against smoking.Apart from that kavithai,this post doesn't sounds like giving advice, does it?Well,you guys can tell me.

Saturday, May 27, 2006

ஆடதடா,ஆடதடா மனிதா!

காலம்- 1998- 2002
நேரம்- மாலை
நாள்-(வெள்ளி,சனி,ஞாயிறு)
இடம்- எங்க வீடு.(Tirupur)

மழை வருது, குளு குளுனு இருக்குது, வடை சுடலாம், இல்ல பொரி வருக்கலாம்னு தோனுதாம்மா உனக்கு?- நான்

நீ வந்தவுடனே இப்படி எதாவது கேப்பனு எனக்கு தெரியும்,உளுந்து அரைக்கப் போறேன்.கொஞ்ச நேரம் டி.வி பார்த்துட்டு இரு, அதுக்குள்ள ரெடி ஆய்டும்.-அம்மா

ம்ம் சரி.

(15 நிமிடம் கழித்து)

டேய் தம்பி,

என்னம்மா வேனும் உனக்கு?கடைக்கெல்லாம் போக சொன்னீன்னா நான் போக மாட்டேன்.

நீ கடைக்கெல்லாம் போகவேன்டாம்;

அப்பறம் எதுக்கு கூப்பிட்ட

நம்ம வீட்டு டி.வி. ரிமொட்டுக்கு(T.V.remote) கால் இருந்துச்சுன்னா வார வாரம் வெள்ளிக்கிழமை எங்காவது போய் ஒளிஞ்சுக்கும் தெரியுமா? எதுக்குடா இப்படி சானல் மாத்திட்டே இருக்கற?

ஆமாம்மா, கால் இருந்துச்சுன்னா ஒளிஞ்சுக்கும், வாய் இருந்துச்சுன்னா அழுகும்னு ஒரே டயலாக் உடாத, இதுகெல்லாம் நோபல் prize தரமாட்டாங்க, இன்னிகாவது வடைல உப்பு,காரம் எல்லாம் சரியா போடு.

(பத்து நிமிடம் கழித்து)

இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சட்னி மிக்ஸீல(Mixi) அரைகறேன்டா?

அப்டியா?,அப்ப நீயே சாப்பிடு,எனக்கு வேன்டாம்.

மழை வருதுடா, நழைஞ்சுருவேன்.. .

இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி, மழைல நலைஞ்சுட்டே மல்லிப்பூ,ஜாதி மல்லினு எல்லா பூவும் பறிச்ச?அப்ப வெய்யிலா அடிச்சுது? ஆட்டாங்கல்லு இருக்கற இடத்துக்கு போறதுக்குல்ல நீ ஒன்னும் பெருச நனையமாட்டே. குடை வேனா எடுத்துட்டுப்போ..

ஆட்டாங்கல்ல அரைக்க நேரம் ஆகும்டா

லேட் ஆனா பரவாயில்லை, அப்பா கோயம்புத்தூர் போய்ருக்காங்க,லேட்டாதான் வருவாங்க.

உன்ன கட்டிட்டு எந்த பொண்ணு கஷ்டப்பட போராளோ?- அம்மா

என்னது?

ஒன்னும் இல்ல சாமி. இன்னிக்கு டின்னர் உப்புமா செய்யுட்டுமா?

இனிமேல் நான் hostel la யே இருந்துக்குவேன், ஆறு மாசத்துக்கு ஒரு தடவ semester leave la தான் வீட்டுக்கு வருவேன்.

சரி என்ன செய்யறதுன்னு சொல்லு?

ம்ம்ம்ம்...தேங்காய் பனியாரம்,சாம்பார்.
வடைக்கு சட்னி அரைக்கும் போது,பனியாரத்துக்கும் சேர்த்து அரைச்சுடு.

(சாப்பிடும் போது)

ஏம்மா, நீ எத்தனை வருசமா சமையல் செய்யற,உப்பு கரெக்டா போடவே மாட்டியா?.

உப்பு அதிகமா சேர்த்துக்கக் கூடாதுடா- அம்மா

ஆமாம், இதையே திருப்பு திருப்பி சொல்லு.

_______________________________________________________________________
காலம்- 2006
நேரம்- மாலை
நாள்-(Week days)
இடம்- எங்க வீடு(Melbourne)

மாப்ள, இந்த winter வந்தாவே செம குளிருடா - கார்த்திக்

பசிக்குதுடா,எதாவது சமைப்போம்.- நான்

எதாவது சீக்கரமா செய், 3 course meals எல்லாம் Weekend la வெச்சுக்கோ.-கார்த்திக்

3 course meals செய்யவெல்லாம் mood இல்ல மாப்பு. quick ah எதாவது செய்வோம் -நான்

(After cooking)

"டேய், கிச்சடி சூப்பர்"- கார்த்திக்

"நாயே!இது கிச்சடி இல்ல,உப்புமா"- நான்

ஓ! அப்டியா?-கார்த்திக்

தக்காளி போட்டாதான்டா கிச்சடி,தக்காளி போடலீன்னா அது உப்புமா- நான்

எதோ ஒன்னுடா, இதுக்கு சட்னியோட சாப்டா நல்லா இருக்கும், super combo.-கார்த்கிக்.

ம்ம்ம்ம் ஆமாம்

நீதி- ஆடதடா ஆடதடா மனிதா, நீ ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா!