Tuesday, August 31, 2010

Book Review - Plain Speaking: A Sudra’s Story

"Plain Speaking: A Sudra’s Story"-A.N.Sattanathan



தமிழக அரசியலை ஓரளவு பின்தொடர்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை எழுதியவரை அறிமுகம் எதுவும் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இவர் கொடுத்த அறிக்கையின் ஒரு பகுதியை செயல்படுத்திய எம்.ஜி.ஆர், அடுத்து வந்த நாடளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் Collectorate of Salt Revenue and Central Excise(1942-44) இருந்தபோது உருவாக்கிய எக்ஸைஸ் வரிவிதிப்பு முறை இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தற்போது ஒரு ஐந்தாறு வருடங்களாக இடப்பங்கீடு தொடர்பான விவாதங்களில் அதிகம் புழங்கப்படும் Creamy Layer என்ற வார்த்தையை 1969களிலேயே Upper Crust என்ற பதத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைத் (Tamil Nadu Backward Classes Commission) தலைவராக இருந்தபோது இவர் சமர்ப்பித்த அறிக்கையில் பயன்படுத்தியுள்ளார் . இவர் பெயர் சட்டநாதன்.

தென்தமிழ்நாட்டில், செங்கோட்டை என்னும் ஊரில், வறுமைவாய்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட படையாச்சி என்னும் சாதியில் பிறந்த சட்டநாதன் அவர்களால் ஒரு குயர் நோட்டில், 48 வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்திருந்த அவரது சிறுவயது வாழ்க்கைக் குறிப்புகள்தான்(Memoirs) இந்தப் புத்தகம். இதைத்தான் அவருடைய பேத்தி, உத்ரா நடராஜன் அவர்கள், Plain Speaking: A Sudra’s Story என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். இதுபோக இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கத்தைப் பற்றியும், தமிழ்நாட்டில் உள்ள சாதிகளைப் பற்றி ஆற்றிய மூன்று உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில பிறந்த சட்டநாதன்(1905) தன் குடும்ப அமைப்பில் ஆரம்பித்து, தன்னுடைய பள்ளி,கல்லூரி வாழ்க்கையைப் பற்றிச் சொல்லி, தன்னுடைய இரண்டாவது வேலையில் சேர்வதோடு( 1928) இந்தப் புத்தகம் abrupt ஆக நிறைவடைகிறது. இவர் ICS(IAS) படிக்க ஆசைப்படுவதும், அதற்காக வறுமையிலும் எப்படியெல்லாம் கடினமுயற்சி எடுத்தார் என்பதைப் பற்றி புத்தகத்தில் சொல்லிக்கொண்டே வருவார்.ஆனால் தீடீரென இரண்டாவது வேலையில் சேர்வதோடு அவரது குறிப்புகள் நிறைவுபெறும். படிக்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது.

தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லும்போது “பெண்கள் நிறைந்த வீடு” (A House of Woman) என்கிறார். முதல் அத்தியாயதிலேயே தன் குடும்ப வறுமையை இப்படி சொல்லிவிடுகிறார்.

” Family records have no place among poor”.

இவருடைய தந்தை ஒரு இசைக் கலைஞர் மற்றும் விவசாயி. தன் தந்தை மிகவும் கண்டிப்பானவர் என்றும் தன் மகன் ஆங்கிலம் கற்று ஒரு அரசாங்க ஊழியனாகவோ அல்லது ஆசிரியராகவோ ஆகவேண்டும் என்று விரும்பியதாகச் சொல்கிறார். அதற்காக அவர் படும் கஷ்டங்களை படிக்கும் போது நெகிழவைக்கிறார். தன் கல்விக்காகத் தன் ஊர்பெரியவரின் உதவியை நாடும் இவர்..அந்தப் பெரிய மனிதர் குடும்பத்தினரை மகிழ்விக்க அவருடைய இயற்பெயரான முத்தையாவை மாற்றி சட்டநாதன் என்ற பெயர் இடப்பட்டதாகச் சொல்கிறார். தன் வறுமையையும் சமூக நிலையையும் பற்றிச் சொல்லும்போது இப்படிக் குறிப்பிடுகிறார்.

” In those days I seldom wore shirt. I had only my loincloth, and even if I had the customary towel which people carry on their shoulders, I was not expected to put it on my shoulders or cover my body with it.It had to be tied round the waist or carried on the arm. Otherwise it would indicate lack of respect and I stood the risk of being chastised.I never took that risk.No one would ask me to sit on the benches generally provided in the verandahs, and to sit unasked would have been a crime.Standing for hours together, often on an empty stomach, could never be pleasant experience for a boy”.

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் திருவணந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து பி ஏ பட்டமும்..அதே கல்லூரியில் ஹானர்ஸ் பட்டமும் பெறுகிறார்..அந்தக்காலக் கல்லூரி மற்றும் சமூக வாழ்க்கை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது..உதாரணமா ஒன்னு...

“In the College unions and other associations, english was the only medium of speaking. We never had any one speaking to us in Tamil, and for students to have discussions in Tamil was unprecedented.”


“We Visited this temple occasionally. Admission was easier,but non-brahmans were not permitted to enter beyond a certain limit. From where we stood, we could, however,see the sanctum and the performance of the pooja by the priest. But what irritated us in this temple was the priest would not give the prasad-the sandal paste or holy ash-in our hands. He would throw it on a stone and the non-brahman devotees had to pick it up”

கல்லூரியில் தனக்கு அனைத்து விரிவுரையாளர்களும் குறிப்பாக திரு.கிருஷ்னமாச்சாரி அவர்கள் பெரும் உதவிபுரிந்ததாகச் சொல்கிறார். தன்னுடைய ICS படிக்க வேண்டும் என்ற கனவை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்ததாகச் சொல்கிறார். படித்து முடித்தவுடன் அரசாங்க க்ளர்க் உத்தியோகத்தை நிராகரித்துவிட்டு கல்லூரி ஆசிரியர் பணியில சேர ஆசைப்பட்டதாக குறிப்பிடுகிறார். மதுரையில்(Madura) கல்லூரி ஆசிரியர் வேலையில் மாதம் 80 ரூபாய் சம்பளத்தில் சேரும் இவர்..அங்கிருந்தே ICS படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார். ஆசிரியர் உடுத்த வேண்டிய உடைகள் எதுவும் இல்லாமல் அவதிப்பட்டதாகச் சொல்கிறார்.

வேலையில இருந்த சமயம், ஹானர்ஸ் படிப்பு முடித்தவர்களுக்கு லன்டன் சென்று படிக்க மதிப்பென் அடிப்படையில் இரண்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினையொட்டி அதற்கும் விண்ணப்பித்ததாகச் சொல்கிறார்.

“I applied for these scholarships, and was hopeful that here at least, at the higher level of Government, a first calss Honours graduate, from a very backward community,would receive encouragement.”

மதுரையில் 1 வருடம் பணிபுரிந்தவர் வேறு வேலை தேடும்படலமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர நேர்முகத்தேர்வுக்குச் சென்றபோது மிகவும் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரியை சந்தித்ததாகவும்..இவர் ICS தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பதால் அந்தப் பணி தனக்கு மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். அதன்பின் திருச்சியில் இருந்த தனது நண்பனின் உதவியினால் நேஷனல் காலேஜில் ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார்…(இந்த வேலை கிடைக்க நடந்த நேர்முகத்தேர்வின் உரையாடல்கள் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கிறது).

பத்து மாதங்கள் இந்தப் பணியில் இருந்ததாகச் சொல்வதுடன் அவரது குறிப்புகள் Abrupt ஆக, ICS தேர்வைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் நிறைவடைகிறது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திடாவிட இயக்கம் மற்றும் அதன் வளர்ச்சி அரசியல்பற்றியும், தமிழ்நாட்டின் சாதியமைப்பை பற்றி ஆற்றிய மூன்று உரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த மனிதர்களின், சமூக,பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கை முறை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்கள் இந்தப் புத்தகத்தை சிறிதும் தயக்கமின்றி வாங்கலாம். குறிப்பாக இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இளைய தலைமுறையினருக்கும், Creamy Layer ( “Upper Crust” as per Sattanathan) பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாத அரசியல்வாதிகளும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்தை பதிப்பாளர்கள் யாரவது தமிழில் மொழி பெயர்த்தால் நானே 25 புத்தகங்கள் வாங்கி யார்தலையிலாவது கட்டத் தயார்.

கடைசியாக சட்டநாதன் அவர்களின் உரையிலிருந்து இடஒதுக்கீட்டைப் பற்றி 1970களில் கூறியது ஒரு குறிப்பு மட்டும் இங்கே

”There are two tendencies which have become noticeable. Reservation has helped the backward classes for nearly three decades from the 1920s to the 1980s - nearly three generations. The benefit of reservation has gone mostly to the few top castes amongst the backward, and to an increasing layer of upper crust in each caste. The filtration process has not been thorough or uniform. This is not surprising and to some extent unavoidable. It would be a step in the larger interests of society and of the backward classes themselves if a check is applied to both these tendencies. There has been thinking on these lines among administrators but the opposition of vested interests has been too strong to carry out the necessary pruning. But sooner or later the removal of two kinds of upper crust will become unavoidable, otherwise we will be encouraging the castes to form a class system within class system - not altogether desirable trend in a democratic and socialistic society.”

இவர் கூறியது பலிக்கும் என்று நம்புவோம்.

Book: PLAIN SPEAKING: A Sudra S Story
Author: A. N. Sattanathan, Editor: Uttara Natarajan
Publisher: Permanent Black
Number of Pages: 245
Language: English
Price: Rs.395

குறிப்பு: இது ஒரு புதுப்பிக்கப்பட்ட மீள்பதிவு:P

Sunday, January 17, 2010

ஜோதிபாசு :1914-2010


Rest in Peace, Comrade Jyoti Basu. What a fighter you had been all these years? You can have your much needed rest now. Red Salute with tears :(

Wednesday, January 13, 2010

காஷ்மீர்: புத்தகவிமர்சனம்


”சர்வதேச ரீதியில் பிரச்சனைக்குறிய விஷயமாக அம்மாநிலம் இருக்கும்வரை, அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி ஒன்று வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் விரும்பவில்லை”. ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான இக்கருத்தைச் சொன்னவர் இந்தியாவின் நம்மர் ஒன் ஜனநாயகவாதி என்று புகழப்படுகிற ஜெயப்பிரகாஷ் நாராயனன் என்று சொன்னால் உங்களால் நம்மமுடிகிறதா? ஆம்! காஷ்மீர்பிரச்சனையின் தன்மை இதைச் சொல்லவைத்தது.

“ சர்வதேச அரங்கில் காஷ்மீரை வைத்து நாம் ஒரு சூதாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இதில் எந்த வகையிலும் நாம் தோற்றுவிடமுடியாது; கூடாது. அதனால், காஷ்மீர் விஷயத்தில் நாம் ஜனநாயகத்தையும், நல்லொழுக்கத்தையும் சற்றே விலக்கி வைத்திருக்கலாம்” என்று அமைதிவிரும்பி நேரு அவர்கள் பால்ராஜ்பூரி என்ற நபரிடம் கூறினாராம்.

காஷ்மீரைப் பொருத்தவரையில் ஜெயப்பிரகாஷ் நாரயணன், நேரு போன்றவர்களே இது போன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்தைக் கூறியிருக்கும்போது, சாதரன இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீர் விவகாரத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று யோசித்துபாருங்கள்? இந்திய அரசியல்வாதிகளும், ராணுவமும், காஷ்மீரில் செய்த அத்தனை அட்டூளியங்களை யும் இந்த புத்தகம் தொட்டுச்செல்கிறது.

காஷ்மீரின் தொடக்ககால வரலாறு, அங்கு நடந்த முக்கிய அரசியல்/சமூக நிகழ்வுகள், பிரச்சினைக்கு காரணமான அரசியல்/சதி வேலைகள் என காஷ்மீர் பிரச்சனையின் பலதரப்பட்ட பக்கங்களையும் சொல்வதோடு..உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா, எப்படி காஷ்மீரிகளின் எந்த ஜனநாயக உரிமையையும் மறுக்கிறது என்றும் விளக்குகிறது .

காஷ்மீர் பிரச்சனையின் அனைத்துப்பரிமாணங்களையும் மேம்போக்காக அலசும் தமிழ் புத்தகம் என்று இப்புத்தகத்தைச் சொல்லலாம்.

விலை ரூ. 220.00
ஆசிரியர்: சந்திரன்
வெளியீடு: ஆழி பதிப்பகம்
ISBN: 81-907523-2-4
பக்கங்கள்: 400

கொசுறு: இந்தியா மொத்தம் 6 லட்சம் ரானுவத்துருப்புக்களை காஷ்மீரில் நிறுத்தியுள்ளது. ஒரு காஷ்மீரின் இடத்தில் இருந்து இதை யோசித்துப்பாருங்கள்? இதைப்பற்றி ஒரு காஷ்மீரி சொல்வது:

Imagine how we feel when a Bihari or a Madrasi asks us for our identity card in our own country, when we should be asking them for their papers,''




Monday, October 05, 2009

அம்மாவின் கடிதம்!



திருப்பூர்-8
1-6-05

அன்பு

மகனுக்கு அம்மாவின் அன்பான ஆயிரம் முத்தங்கள். இங்கு நாங்கள் அனைவரும் நலம். இதுபோல் உன் நலனையும், உன் நண்பர்கள்,விஜியக்கா குடும்பத்தினர் நலனையும் அறிய ஆவல்.

நீ அறிவது:-

உனக்கு 4 பேண்ட்,சர்ட்டும்.வீட்டில் இருந்த மூன்று பனியன்களும் அனுப்பியுள்ளோம். இத்துடன் கோட்டை மாரியம்மன் கோவில் திருநீர்,மஞ்சள் குங்குமமும் அனுப்பியுள்ளேன். குளித்து நெற்றியில் வைத்துக்கொள். எந்த பயமும் இல்லாமல் இரு. நன்றாக சாப்பிடு. சந்தோசமாக இரு. வீட்டு வேலைகள் முடிந்துவிட்டது (அப்போது பழைய வீட்டிற்க்கு அருகே புது வீடு கட்டிக்கொண்டிருந்தோம்). இம்மாதம் 10ம் தேதிக்குள் குறைந்தது ரூ 60,000 பேங்கில் கட்டிவிடுவோம் . உறுதி. இப்பார்சல் கிடைத்தவுடன் போன் செய். ராமமூர்த்தி மாமா வந்திருக்கிறார்கள்.

போன்செய்..

வேப்ப இலை அனுப்பி உள்ளேன்
தலையணைக்கடியில் வைத்துக்கொள்.
இப்படிக்கு
அன்புள்ள அம்மா
சரசுவதி
1.6.05

குறிப்பு: இன்று ஒரு வங்கி சம்பந்தமான கடிதத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட அம்மாவின் கடிதம் இது.. 2005ல் படித்தபோது, அம்மா திருந்தவே திருந்தாது.மாரியம்மன்,வேப்ப இலை,குங்குமம் என்றுதான் பேசும். அம்மா இனிமேல் அனுப்பப்போகும் வேப்ப இலை ஒரு நாள் என்னை ஆஸ்திரேலிய கஸ்டம்ஸ் அலுவலகம் அழைத்துச் செல்லப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன்..இன்று படித்தபோது அப்படியேதும் தோன்றவில்லை..கடிதத்தை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டே இருக்கிறேன்!




Monday, September 21, 2009

Child Malnutrition in India - ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்
















நாள் ஒன்றுக்கு பத்து இந்தியரை பலிவாங்கும் Swine Flu விற்கு நம் தினசரி செய்தித்தாள்களும்..தொலைக்காட்சி செய்திகளும் கொடுக்கும் முக்கியத்துவம்..தினமும் 3000க்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகளை பலிவாங்கும் ஊட்டச்சத்து குறைவின்மைக்கு ஏன் கொடுப்பதில்லை என்று யோசித்ததுண்டா?

இந்த Child Malnutrition பிரச்சனையைத் தீர்க்க ஏழு வழிகளை Lawrence Haddad என்பவர் The Hindu வில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து;

So what should be done? First, fund communities and local governments to undertake social audits of the ICDS services actually delivered. Let the ultimate customers rate the provision and make the results public. This will put pressure on local MPs and local providers.

Second, give the Comptroller and Auditor-General a bigger role in monitoring government action on nutrition. Their work is already cited by many, and they should be empowered to do more.

Third, simplify ICDS. There are too many interventions and too many age groups. It is complex to run, especially given the thousands of different contexts it has to adapt to. At the moment it tries to be all things to all people and runs the risk of satisfying none.

Fourth, find an effective cross-ministry mechanism to deliver food, care and health in combinations that work. Efforts to lift the curse of malnutrition must be unified.

Fifth, historically excluded groups must be involved in the design, outreach and delivery of nutrition programmes, reaching out to women from these groups in particular.

Sixth, introduce simpler but more frequent monitoring of nutrition status so that civil society and the media can hold the government and non-state actors to account for year on year slippage and reward them for progress.

Finally, develop new ways of teaching and doing research on how to improve nutrition. Reducing malnutrition is not just about health, agriculture and economics. It is also about politics, governance and power.

********

ஊட்டச்சத்து குறைவைப் பற்றி எந்த ஒரு விவாதமும் இந்தியாவில் நடைபெறுவதில்லை. எந்த அரசியல்வாதியும் இதைப்பற்றிப் பேசுவதில்லை...இவை ஓட்டுக்களைப் பெற்றுத்தரப்போவதும் இல்லை..பொதுமக்களாகிய நமக்கும் இதைக்குறித்து எந்த விதப்பிரக்ஞையும் இல்லை. டெல்லியில் சில கூட்டத்தைக்கூட்டி விவாதிப்பதுடன் அதிகாரிகளின் கடமையும் முடிந்துவிடுகிறது. நாளைய இந்தியாவை உருவாக்கப்போகும் இளைய தலைமுறையைக் காலனிடம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிக்கொடுத்துவிட்டு...வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம் என்று கனவு காணுவது அறிவீனம்!

இதைப்பற்றி 2007 ல் எழுதிய பதிவு : ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition ).


Saturday, September 12, 2009

புத்தகம்: Writing A Nation ( An Anthology of Indian Journalism)


Writing A Nation: An Anthology of Indian Journalism.

Author: Nirmala Lakashman (Joint Editor, The Hindu)

Price: Rs 684. Page: 711. Publisher: Rupa & Co

இந்தப் புத்தகத்தை 2007 ல் சென்னையில் வாங்கினேன். ரொம்ப நாட்களாக இந்தப்புத்தகத்தைக் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்து இன்றுதான் வாய்த்திருக்கிறது. இந்தப்புத்தகத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் " Treasure" என்று சொல்லிவிட்டுப்போய்விடலாம்.

இந்த நூலில், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், இந்தியப் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறைசாற்றும் விதமாக, இந்தியப் பத்திரிக்கைகளில் வெளிவந்த பல்வேறு தலைப்பிலான கட்டுரைகள், இந்து பத்திரிக்கையின் துனை ஆசிரியர் நிர்மலா லக்‌ஷ்மன் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அம்பேத்கர் அதைப்பற்றி 1953ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதிய கட்டுரையில் தொடங்கி..2004ல் ராமச்சந்திர குஹா எழுதிய "Why India Survives" என்ற கட்டுரைகள் வரை பல்வேறு தலைப்பில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
  1. Constructing Democracy
  2. Nurturing A Free Press
  3. A Divided Society
  4. Corruption and Culpability
  5. India and the world
  6. A Wealth of Spirit
என்ற ஆறு தலைப்புகளில், இந்திய பத்திரிக்கைகளான இந்து,இந்தியன் ஏக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, டெலிகிராப் போன்ற பத்திரிக்கைகளில் வெளியான, பல்வேறு அறிவுஜூவிகள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாலர்கள் எழுதிய 140 கட்டுரைகள் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப்புத்தகத்தை உருவாக்க காரணமாக, ஜான் பில்ஜர் என்ற பிரபல பத்திரிக்கையாளர் தொகுத்த "Tell Me No Lies" என்ற புகழ் பெற்ற புத்தகம்தான் காரணம் என்கிறார் நிர்மலா லக்‌ஷ்மன். இந்தப் புத்தகத்தையும் படித்துவருகிறேன். இந்தப்புத்தகத்தைப் பற்றியும் அவசியம் எழுதவேண்டும்..பொறுமையாக பிறகு எழுதுகிறேன்.

இப்புத்தகத்தைப் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவந்த சில செய்திகள் இங்கே:

Excerpts from the Introduction to Writing a Nation: An Anthology of Indian Journalism, edited by Nirmala Lakshman

Writing a Nation — an Anthology of Indian Journalism by Nirmala Lakshman was released on Wednesday by Vice-President Hamid Ansari. Lakshman, Joint Editor of The Hindu, traces the themes that defined national discourse from the days of Independence, seen through the English press. Anubhuti Vishnoi spoke to Lakshman about the book, the media and what she’s working on next.

இந்தியாவைப் பற்றி வெளிவந்த கருத்துச் செறிவுள்ள புத்தகங்களில் ”Writing A Nation: An Anthology of Indian Journalism.” முக்கிய பங்குவகிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை..சுதந்திரத்திற்க்குப் பிறகான இந்தியாவை,பத்திரிக்கைகளில் வெளிவந்த கட்டுரைகள் வாயிலாகப் படிக்கவிரும்புபவர்கள் இதை வாசிக்கலாம்.

Friday, September 11, 2009

இன்று பாரதியின் நினைவு நாள் (11/09/09)


எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போலே,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திட வேண்டும் அன்னாய்!

*****************************

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!