ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition )
2005-06ஆம் ஆன்டுக்கான இந்தியக் குடும்ப நல (National Family Health Survey)சர்வேயின் படி தற்போது இந்தியாவில் இருக்கும் மூன்று வயதுக்குக்கீழுள்ள குழந்தைகளில் 46% பேர் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்களாம்.உலகத்திலேயெ இந்தியாவில்தான் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள் என்று BBC இனையதளத்தில் படித்தபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஏழைகள் அதிகம் என்பது தெரிந்ததே, ஆனால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியர்கள் மொத்த மக்கள்தொகையில் 26% பேர், அப்படி இருக்கையில் எப்படி 46% குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்கள்? இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் 26% மக்களின் குழந்தைகள்தான் இந்த 46% ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளா? வறுமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படுமா என்றெல்லாம் யோசித்துவிட்டு அந்த விஷயத்தை அப்படியே மறந்துவிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் ஏழ்மை காரணமாக அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு போதிய உணவு அளிக்கமுடிவதில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அது முற்றிலும் தவறு என்று நேற்றும், இன்றும் இந்துபத்திரிக்கையில் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் பற்றி ஏ.கே சிவக்குமார் என்பவர் விபரமாக எழுதியிருந்ததைப் படித்தவுடன் தெரிந்தது..
Why are levels of child malnutrition high?
Why are child malnutrition levels not improving?
குழந்தைகள் ஊட்டச்சத்தின்மைக்கு நான்கு காரணங்களைச் சொல்கிறார்,
1. கருவில் இருக்கும்போதே தாயின் மூலம் குழந்தைகள் பெறும் ஊட்டச்சத்தின்மை.இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 20% லிருந்து 30% குழந்தைகள் 2500 கிராமிற்கும் குறைவான எடையுடனே பிறக்கின்றனர்.
2. பொதுசுகாதார மைய வசதி இல்லாமை மற்றும் அவைகளின் செய்திகள் பெற்றோர்களைச் சென்று சேராமை. இதில் அவர் கூறும் மற்றொரு புள்ளிவிவரம் கவலையளிக்கிறது..2005-06ல் இந்தியாவில் பிறந்த குழந்தைகளில் 48% குழந்தைகளின் பிரசவங்கள் மட்டுமே Ttrained birth attendant(which includes a doctor, nurse, woman health worker, auxiliary nurse midwife, and other health personnel)
உதவியுடன் நடந்தததாம்.(இனிமேல் இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சியடைந்தது,9% வளர்ச்சியடைந்தது என்று யாரவது பெருமைப் பட்டால் இந்த புள்ளிவிவரத்தை அவர்களிடம் சொல்லலாம் என்றிருக்கிறேன்).
3. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகள்.
4.பெண் கல்வி,அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் விழிப்புணர்வு.
இதைப் படித்தவுடன் எனக்கு நிஜமாகவே பயமாக இருக்கிறது.. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கானும் அதே நேரத்தில் இந்தியாவை வல்லரசாக மாற்றப் போகும் தலைமுறையின் உடல் நலத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
3 comments:
Very nice and thought provoking post!
Amma appa nalla iruntha pullangalum nalla irukum!
எட்டு சாதனைகள் பதிவு போட கூப்பிட்டுருகேன். எட்டு போடுங்க.
நல்ல பதிவு..
Post a Comment