"இன்ப துன்பம்"
1.நான் இங்க படிச்சுட்டு இருந்த போது என்னோட முதல்(part-time) வேலை Melbourne Convention Centre la பாத்திரம் கழுவும் வேலை.இந்த வேலைக்கு ஒரே ஒரு நாள் தான் போனேன்.ராத்திரி 10 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலைல 9 மணிக்கு முடிக்கும் போது, எனக்கு பசி,வலி, Value of Money ,இது எல்லாம் என்னனு ஓரளவுக்கு தெரிஞ்சுச்சு.இதுல என்ன இன்பம்னா என்னோட account la 155$சம்பளமா போட்டாங்க,என்னோட முதல் சம்பளம்.பனம் என்னிப்பார்க முடியல,அதனால ஒரு நாளைக்கு 20,25 தடவ net bank la login பன்னி பார்த்துட்டே இருந்தேன்.அதுபோக சரியா 2 வருடத்துக்கப்பறம் இதே Melbourne Convention Centre la தான் எனக்கு Master of Business பட்டம் கொடுத்தாங்க.ரொம்ப சந்தோசமா இருந்தது.இப்பவெல்லாம் எதாவது Conference ku அங்க போகும் போது, நான் கழுவின plates எல்லாம் பார்த்தா, எனக்கு சிரிப்புதான் வருது.
2.என்னோட அடுத்த வேலை Coles super market la யும், kmart la யும் filling வேலை.காலைல 4.15 am க்கு எழுந்து 5 மணிக்கு வேலை ஆரம்பிக்கனும்.மதியம் 2 மணிக்கு வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு போய் சமைச்சு(break fast & Lunch), சாப்பிட்டு, University போவேன்.கொஞ்சம் கஷ்டம் தான். சில நாள் -13 degree la இருக்கும் freezer la ,Ice cream,frozen vegetables,etc எல்லாம் அடுக்கிவைக்கனும். நமக்கென்ன தலை எழுத்தானு தோனும், ஆனா கொஞ்ச நாள்ள பழகிடுச்சு.(just put your hands in the freezer for 5 mins, u'll know).இதுல என்ன இன்பம்னா அடுத்த வாரம் account la சேரும் டாலர்'s. இந்த வேலையில் கூடுதல் இன்பம் என்னவென்றால் தன் அம்மா,அப்பா தள்ளிக்கொன்டுவரும் Shopping trolly மேல் மகாரானியை போல் அமர்ந்து வரும் குழந்தைகள் தான்.தன் கண்ணங்களில் சாக்லேட்டின் கறையுடன் எதையாவது சாப்பிட்டுக்கொன்டே வரும் கொளுக் மொளுக்கென்றுருக்கும் குழந்தைகளை பார்க்கும் போதும், நான் அக்குழந்தைகளைப் பார்த்து கை அசைத்துச் சிரிக்கும் போது, வெட்கத்தால் முகத்தை மறைத்துக்கொன்டு சிரிக்கும் அக்குழந்தைகளைப் பார்க்கும்போது, எனக்குப் பசியோ,வேலையின் களைப்போ தெரிந்ததில்லை.கடவுளை தரிசித்து விட்டு பிரசாதமாக புளியோதரையோ,தயிர் சாதமோ சாப்பிட்டால் தான் பசி அடங்கும் ஆனால் குழந்தைகளை பார்தாலே பசி போய்விடுகிறது!
3."சொல்லாய் இருந்தேன், இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன், உழியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன், மழையாய் பெய்தாய்"
என்று Saindhavi ,Mahati யும் உருகி உருகி பாடிக்கொன்டிருக்கும் போது,(Innisai song from God Father,listen to the voice modulation in this bit,fantastic) டேய், என்னடா பாட்டு இது, உனக்கு taste இல்லனு சொல்லி, தன் அம்மாவை திட்டுவதே வேலையா வெச்சிருக்கும் Eminem ( என்ன பேருய்யா இது எம்மெனெம்,பபுள்கம்னு?) பாட்டு போடும் போது, மகா துன்பம்!
4.அரே yaar ,you are from India and you don't know hindi?.what a shame?.You are Indian and you don't know our national language??இந்த மாதிரி சில வட இந்திய ஜந்துக்கள் பேசுங்க.பயங்கர கஷ்டமாவும்,எரிச்ச்சலாவும் இருக்கும்.எங்கிட்ட இது மாதிரி யார் பேசினாலும் அவனுக்கு அப்ப நேரம் சரியில்லைனு அர்த்தம். Which ********* moron told you Hindi is our national language? I can speak two Indian language ,how many language u know you ************* idiot? இப்படி நல்ல பல வார்த்தைகளில் அர்ச்சனை செஞ்சுருவேன்.இதுல என்ன இன்பம்னா, சாம்பார் சரியா வராத கோபம்,Train late ah வரும் போது வரும் கோபம், Office la service providers SLA's meet பன்னாதபோது வரும் கோபம்,மற்றும் இன்னபிற கோபங்களை, இந்த மாதிரி சமயத்துல நல்லா திட்டி தீர்த்துக்கலாம்.மானாவாரியா வார்த்தைய அள்ளிப் போட்டு திட்டிட்டலாம்,மன்னிப்பு கேட்க வேன்டியது இல்லை.
5.குட்டை பாவடையோடு meetings ku வரும் Corporate பாப்பாவோடு சிரித்து பேசி Lunch சாப்பிடுவது இன்பம், ஆனால் அதுங்க வேக வைக்காம பச்சையா சாப்பிடும் இலை,தழைய நானும் சிரிச்சுட்டே சாப்பிடுவது, ரொம்ப ரொம்ப துன்பம்!