Saturday, July 22, 2006

என்னத்த சொல்றது?

இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.

அப்படினு அய்யன் வள்ளுவன் அறிந்து சொன்னதுனால, முதல்ல ஒரு இனிமையான விஷயம் சொல்லி பதிவை தொடங்குகிறேன். நம்ம நண்பியும்,சக வலைபதிவாளினியுமான மருதம் இருக்காங்களே அவுங்க இனிமையான ஒரு பாடல்(யமுனை ஆற்றிலே)பாடி நாம எல்லாரும் கேட்கறமாதிரி அவுங்க பதிவில் லிங்க் குடுத்திருக்காங்க,கேட்டுப் பாருங்க.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்ததா இந்த மும்பாய் குண்டு வெடிப்பு சம்பவம். முதலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது நிலவும் பீதி,மரனபயம்,கூச்சல்,குழப்பம் இதெல்லாம் நான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது நேர்ல பார்த்திருக்கேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும்,பல்வேறு இன, மொழி,மதம் சார்ந்த மக்கள் அதிக அளவில் வாழும் நம் நாட்டில், மதத்தின் பெயரால் சன்டைகள் நடந்துவரும் இந்த நூற்றான்டில் இது போன்ற குண்டு வெடிப்புகள் தவிர்க்க முடியாதவை என்றே எனக்குத் தோன்றுகிறது.இது போன்ற குண்டு வெடிப்புகள் இந்தியாவில் நிறுத்தப் படவேண்டும் என்றால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கானவேண்டும், இருவேரு மதக்குழுக்களிடயே ஒற்றுமை நிலவ வேண்டும்,மசூதியை இடித்த காட்டுமிரான்டிக் கூட்டம் திரும்பவும் மசூதியை கட்டித்தர முன்வரவேண்டும்,மசூதிக்காகப் போராடுகிறவர்கள் ராமருக்குக் கோவில் கட்ட முன்வரவேண்டும்,சிறுபான்மை இனமக்களின் ஒட்டு வங்கியை குறிவைத்து நடத்தும் அரசியல் முற்றிலும் நிறுத்தப் படவேண்டும்.இதெல்லாம் சர்வ நிச்சயமாக நடக்கப்போவதில்லை என்பதனால் இதன் மூலம் பாதிக்கப்பட்ட அதிருப்திக் குழுக்கள் மூலமாக இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தே தீரும் என்பது என் கருத்து. சில மாதம் முன்னால் Gartner என்ற Consulting firm நடத்திய Conference கு போன போது அங்க வந்த ஒரு கம்பனியோட பெரிய தலை lunch சாப்பிடும் போது சொன்னாரு, If i have the power to implement three things in the world then I can make this world very peaceful.

1. Abolish all religion.
2. Change American foreign policy.
3.No Testosterone.

அப்பறம் இந்த டாவின்சி கோட் படம். நம்ம ஊர்ல என்னடான்னா இந்த படம் கிருஸ்தவர்களின் மத உனர்வுகளை பாதிக்கிறதுனு சொல்லி தடைவிதிக்கறாங்க. கோர்ட்டுகெல்லாம் போய், இப்பதான் படம் ஒருவழியா வெளி வந்திருக்குது. இங்க ஆஸ்திரேலியால கிருஸ்தவர்கள்தான் அதிகம் ஆனா இங்க Devinci Code bag, toys nu எல்லாம் செஞ்சு விக்கறாங்க. (போன வாரம் Shopping போன போது super market ல இந்த படத்த பார்த்தேன். ப்ளாக்ல போடலாம்னு என்னோட Mobile la கிளிக் கிட்டேன்).நாம பாட்டுக்கு இந்தியா வல்லரசாகும்,வேற்றுமையில் ஒற்றுமை,சகிப்புத்தன்மைனு பேசிக்கறோம் ஆனா ஒரு சினிமாவ சகிச்சுக்க முடியலை.என்னத்த சொல்றது?(Note: I have the e-book of Davin Ci Code.let me know if you guys want it.)

இன்னோரு முக்கியமான விஷயம், நம்ம ஊருல Blogspot தடை செஞ்சாங்க. அதுக்கு என்ன காரனம்னு இப்ப சொல்றேன் கேளுங்க. எனக்கும்,என் குருவுக்கும் ஆப்பு வைக்கிறேன்னு சில மக்கள் கெளம்பிருக்கறாங்க ;).என் குருகிட்ட இதை பற்றி கேட்டேன்,அவரும் பெருந்தன்மையோட அறியாப் பெண்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து விடலாம்னு சொன்னாரு.என்ன இருந்தாலும் என் குருவுக்கு ஆப்பு வைக்க நினைத்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாதுனு சொல்லி இந்த தடைக்கு ஏற்பாடு செய்தேன்.என் குருதான் தடையயை நீக்க சொல்லி சொன்னார்.என் குருவின் நல்ல மனச புரிஞ்சுக்கங்கப்பா ;).

Saturday, July 08, 2006

குரு போட சொன்ன ஆறு!

அணு அணுவாக பூக்களைப் பற்றி ஆராய்ந்து பதிவுகள் போடும் அனுசுயா அவர்களும், நம்ம பரத்(இவருக்கு எழுத்தாளர் சுஜாதா மேல ரொம்ப லவ்ஸ்) அவர்களும்,கல்லிடைக் குறிச்சியின் கட்டித் தங்கமும், கெட்டிச் சட்னியுமான( ஹி...ஹி,ஒரு எதுகை மோனையா இருக்கட்டுமேனுதான்)திருநெல்வேலி அல்வாவுக்கே கேசரி கிண்டி குடுக்கும் திறமைகளைக் தன்னகத்தே கொண்டுள்ள,எங்கள் தென்பான்டிச் சிங்கம்,தமிழர் குலக்கொழுந்து,கொள்கைச் செம்மல்,வீருகொன்ட வேங்கை,வெற்றித் திலகம்,தியாகத்தின் திருஉருவம், நடிகை அஸினின் தம்பியாம்
,எங்கள் அம்பி அவர்களும், ஆறு பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள்.ஆறு கேள்வியும்,பிடித்த ஆறு மனிதர்களைப் பற்றியும் எழுதவேன்டும்.

ஆறு கேள்விகள்.

1. எதுக்கு தமிழ் சினிமா நடிகைகள் மட்டும் வெட்கப்படும்போது "ச்சீய்ய்" சொல்றாங்க?மத்த state la எல்லாம் என்ன சொல்றாங்க?

2. "ஒரு பொண்ணோட மனசு இன்னோரு பொண்ணுக்கு தான் தெரியும்" ,"பதினெட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து பன்றவன்", " நீ இல்லாம ஒரு வாழ்க்கைய என்னால் கனவுல கூட நெனச்சுப் பார்க்க முடியாது" இது மாதிரி மொக்கை டயலாக் எழுதினவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்? (Grrrr)

3. சில பொண்ணுங்க அவுங்களோட kerchiefa ஏன் இறுக்கமா,கசக்கி(காக்கா வலிப்பு வந்தவன் கொத்துச்சாவிய புடிச்சிட்டிருக்கற மாதிரி) வெச்சிருக்காங்க.


4. மத்தியானம் 2 மணிக்கு "சுள்"னு அடிக்கற கத்திரிவெய்யில்ல,கொதிக்கும் மெரினா பீச் மனலில் இந்த காதலிக்கற மக்கள் மட்டும் எப்படி ஜாலியா சொரனையே இல்லாம சிரிச்சு பேசிட்டு இருக்காங்க?அட காதலுக்கு கன்னு இல்ல,சரி,சொரனையுமா இல்ல?

5.தற்போதைய சர்வேயின் படி நம்ம தமிழ்நாட்டில் 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் இருக்காங்களாம். கருவிலேயெ பெண் சிசுக்களைக் கொல்வது, கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போன்ற கொடூர கொலைக் குற்றங்களை எல்லாம் தான்டி, 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் என்ற 93% சம நிலை இருக்கிறது.இதற்கு யார் காரனம்?

6.எந்த கேள்வியெல்லாம் பரிட்சைக்கு வாராதுனு நெனச்சு படிக்காம விடரமோ,அதே கேள்விதான் அடுத்த நாள் வந்து தொலைக்கும். ஏன் இப்படி?


எனக்கு பிடித்த ஆறு பேர்.

1.இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.

என்று இரண்டே வரிகளில் உலகப் பொருளாதாரத்தை சொன்ன திருவள்ளூவர்.


2.எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;

எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதை படிப்பேன்.பாரதி இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ்ந்திருக்கக் கூடாதா?


3. இளையராஜா. How to Name It &" செந்தூரப்பூவே" கேட்டிருக்கீங்களா? சாதனைகள் முறியடிக்கப் படுவதற்கே என்றாலும்,இவர் செய்த சாதனைகளை இன்னோருவரால் முறியடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
4.அருந்ததி ராய். இவங்க விஷயத்தை சொல்லும் விதம்.சொல்லும் கருத்துக்களுக்கு தகுந்த வார்த்தை பிரயோகத்திற்கு பெயர் பெற்றவர்.இவரது சில கட்டுரைகளை ஜார்ஜ் புஷ் முன் வாய்விட்டுப் படிப்பதும்,அவரை செருப்பால் அடிப்பதும் ஒன்றுதான். God of Small things என்ற தனது முதல் கதைக்கு புக்கர் பரிசு வென்றவர். I've the ebook of God of Small Things.Let me know if anyone wants it.
5.சச்சின் டெண்டுல்கர். இவரை பற்றி புதுசா சொல்ல என்ன இருக்கு?அவருடைய இந்த படம் நான் எடுத்ததுதான்.6.Roger Federer.டென்னிஸ் என்ற பெயருக்கு பதிலாக இவரது பெயரைகூட சொல்லலாம்.பின் குறிப்பு: அம்பி குருவே,அஸின் கைவிட்டு போனத நெனச்சு வருத்தப்படாதீங்க.குருவா,சமத்தா,வீட்டுல அம்மா பார்கற பொண்ண மட்டும் நெனச்சுட்டு இருங்க போதும். இனிமேலும் பொலம்பினா கோபிகா, கொளுந்தியாளாகவும், நயன்தாரா, நாத்தனாராகவும் மாற்றப் படுவார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை படித்துவிட்டு கோபம் கொள்ள வேன்டாம் குருவே,ஏனெனில் "ஆறுவது சினம்";).

I would like to Tag.

Sendhil,Marudham,Veda,KRK.