Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Monday, September 21, 2009

Child Malnutrition in India - ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்
















நாள் ஒன்றுக்கு பத்து இந்தியரை பலிவாங்கும் Swine Flu விற்கு நம் தினசரி செய்தித்தாள்களும்..தொலைக்காட்சி செய்திகளும் கொடுக்கும் முக்கியத்துவம்..தினமும் 3000க்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகளை பலிவாங்கும் ஊட்டச்சத்து குறைவின்மைக்கு ஏன் கொடுப்பதில்லை என்று யோசித்ததுண்டா?

இந்த Child Malnutrition பிரச்சனையைத் தீர்க்க ஏழு வழிகளை Lawrence Haddad என்பவர் The Hindu வில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து;

So what should be done? First, fund communities and local governments to undertake social audits of the ICDS services actually delivered. Let the ultimate customers rate the provision and make the results public. This will put pressure on local MPs and local providers.

Second, give the Comptroller and Auditor-General a bigger role in monitoring government action on nutrition. Their work is already cited by many, and they should be empowered to do more.

Third, simplify ICDS. There are too many interventions and too many age groups. It is complex to run, especially given the thousands of different contexts it has to adapt to. At the moment it tries to be all things to all people and runs the risk of satisfying none.

Fourth, find an effective cross-ministry mechanism to deliver food, care and health in combinations that work. Efforts to lift the curse of malnutrition must be unified.

Fifth, historically excluded groups must be involved in the design, outreach and delivery of nutrition programmes, reaching out to women from these groups in particular.

Sixth, introduce simpler but more frequent monitoring of nutrition status so that civil society and the media can hold the government and non-state actors to account for year on year slippage and reward them for progress.

Finally, develop new ways of teaching and doing research on how to improve nutrition. Reducing malnutrition is not just about health, agriculture and economics. It is also about politics, governance and power.

********

ஊட்டச்சத்து குறைவைப் பற்றி எந்த ஒரு விவாதமும் இந்தியாவில் நடைபெறுவதில்லை. எந்த அரசியல்வாதியும் இதைப்பற்றிப் பேசுவதில்லை...இவை ஓட்டுக்களைப் பெற்றுத்தரப்போவதும் இல்லை..பொதுமக்களாகிய நமக்கும் இதைக்குறித்து எந்த விதப்பிரக்ஞையும் இல்லை. டெல்லியில் சில கூட்டத்தைக்கூட்டி விவாதிப்பதுடன் அதிகாரிகளின் கடமையும் முடிந்துவிடுகிறது. நாளைய இந்தியாவை உருவாக்கப்போகும் இளைய தலைமுறையைக் காலனிடம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிக்கொடுத்துவிட்டு...வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம் என்று கனவு காணுவது அறிவீனம்!

இதைப்பற்றி 2007 ல் எழுதிய பதிவு : ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition ).


Sunday, August 23, 2009

இந்திய நீதித்துறை (Indian Judicial System)


என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில செய்திகளைப் படிக்கும்போது, விசயத்தின் தாக்கம் காரணமாக மயக்கமோ அல்லது பேச்சுமூச்சற்ற நிலையையோ அடையும் காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன்..அதற்கு நிகரான ஒரு சம்பவம் நேற்று இந்துவில் வந்த இந்த தலையங்கக் கட்டுரையைப் படிக்கும்போது நிகழ்ந்தது.

இந்திய சிறைகளில் தற்போது அடைக்கப்பட்டிருக்கும் 70% பேர் குற்றம் சுமத்தப்பட்டு தீர்ப்புக்காக சிறையில் காத்திருக்கும் கைதிகள் (undertrials awaiting justice). இதில் திகிலூட்டும் செய்தி என்னவென்றால், சமீபத்தில் நடந்த முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருப்பதுதான்.

Prime Minister Manmohan Singh told the conference of Chief Ministers and Chief Justices, many of them have been in jail “for periods longer than they would have served had they been sentenced.”

அதாவது, இந்த நீதிக்காக காத்திருக்கும் கைதிகளில் பலர், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்திருந்தால் எவ்வளவுகாலம் சிறையில் அடைபட்டுக்கிடப்பார்களோ அதைவிட அதிகமாகவே சிறையில் இருக்கின்றனர். குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாமல்..இதைப்படித்த போது எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ன சொல்கிறார் என்றால்,
Chief Justice A.P. Shah said in the report that "it would take the court approximately 466 years" to clear the pending 2,300 criminal appeals cases alone.

நீதித்துறையின் மிகமுக்கியக் குறிக்கோளாக அம்பேத்கர் சொன்னது..பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது. தற்போதைய நடைமுறை அதற்கு முற்றிலும் கோனலாக உள்ளது.

Sunday, May 31, 2009

Tobacco pictorial warnings must from today.

மே 31, உலக புகையிலை தினமான இன்றுமுதல் இந்தியாவில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்கும்போது அப்பொருட்களில் படத்துடன்கூடிய எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று இந்தியஅரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வரவேற்கப்படவேண்டிய விடயம் இது. அதிக மக்கள் தொகை கொண்ட, விழிப்புணர்ச்சி குறைந்த இந்திய மக்களிடம் இது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி ஹிந்துவில் வெளியான கட்டுரை இங்கே Packing a pictorial punch .


இது தொடர்பாக 2006ல் நான் எழுதிய பதிவு Money Smoking Zone! .

Tuesday, December 02, 2008

ஒரே ஒரு கேள்வி?


சென்ற வாரம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 217.
இதற்கு நமது இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் என்ன சொல்லுகிறார்;


இந்த எண்ணிக்கையைப் பாருங்கள்..1,236,604(பனிரெண்டு லட்சத்து முப்பதாராயிரத்து அறுநூற்று நான்கு) . இது இந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நிலவரப்படி, அமேரிக்கா ஈராக்கில் ஊடுறுவியபின்(2003 க்குப் பிறகு) பலியான ஈராக்கியர்களின் எண்ணிக்கை.

நமது இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் என்ன சொல்லுகிறார்;

“India and [the] United States must stand tall, stand shoulder to shoulder, and that’s what is going to happen”.

அமேரிக்காவோடு தோளோடு தோள் நிற்போம் என்று சொல்லுவது சரியா?நம் ஆட்சியாளர்கள் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்(Hypocrisy of the highest order) இல்லையா?