Saturday, May 27, 2006

ஆடதடா,ஆடதடா மனிதா!

காலம்- 1998- 2002
நேரம்- மாலை
நாள்-(வெள்ளி,சனி,ஞாயிறு)
இடம்- எங்க வீடு.(Tirupur)

மழை வருது, குளு குளுனு இருக்குது, வடை சுடலாம், இல்ல பொரி வருக்கலாம்னு தோனுதாம்மா உனக்கு?- நான்

நீ வந்தவுடனே இப்படி எதாவது கேப்பனு எனக்கு தெரியும்,உளுந்து அரைக்கப் போறேன்.கொஞ்ச நேரம் டி.வி பார்த்துட்டு இரு, அதுக்குள்ள ரெடி ஆய்டும்.-அம்மா

ம்ம் சரி.

(15 நிமிடம் கழித்து)

டேய் தம்பி,

என்னம்மா வேனும் உனக்கு?கடைக்கெல்லாம் போக சொன்னீன்னா நான் போக மாட்டேன்.

நீ கடைக்கெல்லாம் போகவேன்டாம்;

அப்பறம் எதுக்கு கூப்பிட்ட

நம்ம வீட்டு டி.வி. ரிமொட்டுக்கு(T.V.remote) கால் இருந்துச்சுன்னா வார வாரம் வெள்ளிக்கிழமை எங்காவது போய் ஒளிஞ்சுக்கும் தெரியுமா? எதுக்குடா இப்படி சானல் மாத்திட்டே இருக்கற?

ஆமாம்மா, கால் இருந்துச்சுன்னா ஒளிஞ்சுக்கும், வாய் இருந்துச்சுன்னா அழுகும்னு ஒரே டயலாக் உடாத, இதுகெல்லாம் நோபல் prize தரமாட்டாங்க, இன்னிகாவது வடைல உப்பு,காரம் எல்லாம் சரியா போடு.

(பத்து நிமிடம் கழித்து)

இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சட்னி மிக்ஸீல(Mixi) அரைகறேன்டா?

அப்டியா?,அப்ப நீயே சாப்பிடு,எனக்கு வேன்டாம்.

மழை வருதுடா, நழைஞ்சுருவேன்.. .

இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி, மழைல நலைஞ்சுட்டே மல்லிப்பூ,ஜாதி மல்லினு எல்லா பூவும் பறிச்ச?அப்ப வெய்யிலா அடிச்சுது? ஆட்டாங்கல்லு இருக்கற இடத்துக்கு போறதுக்குல்ல நீ ஒன்னும் பெருச நனையமாட்டே. குடை வேனா எடுத்துட்டுப்போ..

ஆட்டாங்கல்ல அரைக்க நேரம் ஆகும்டா

லேட் ஆனா பரவாயில்லை, அப்பா கோயம்புத்தூர் போய்ருக்காங்க,லேட்டாதான் வருவாங்க.

உன்ன கட்டிட்டு எந்த பொண்ணு கஷ்டப்பட போராளோ?- அம்மா

என்னது?

ஒன்னும் இல்ல சாமி. இன்னிக்கு டின்னர் உப்புமா செய்யுட்டுமா?

இனிமேல் நான் hostel la யே இருந்துக்குவேன், ஆறு மாசத்துக்கு ஒரு தடவ semester leave la தான் வீட்டுக்கு வருவேன்.

சரி என்ன செய்யறதுன்னு சொல்லு?

ம்ம்ம்ம்...தேங்காய் பனியாரம்,சாம்பார்.
வடைக்கு சட்னி அரைக்கும் போது,பனியாரத்துக்கும் சேர்த்து அரைச்சுடு.

(சாப்பிடும் போது)

ஏம்மா, நீ எத்தனை வருசமா சமையல் செய்யற,உப்பு கரெக்டா போடவே மாட்டியா?.

உப்பு அதிகமா சேர்த்துக்கக் கூடாதுடா- அம்மா

ஆமாம், இதையே திருப்பு திருப்பி சொல்லு.

_______________________________________________________________________
காலம்- 2006
நேரம்- மாலை
நாள்-(Week days)
இடம்- எங்க வீடு(Melbourne)

மாப்ள, இந்த winter வந்தாவே செம குளிருடா - கார்த்திக்

பசிக்குதுடா,எதாவது சமைப்போம்.- நான்

எதாவது சீக்கரமா செய், 3 course meals எல்லாம் Weekend la வெச்சுக்கோ.-கார்த்திக்

3 course meals செய்யவெல்லாம் mood இல்ல மாப்பு. quick ah எதாவது செய்வோம் -நான்

(After cooking)

"டேய், கிச்சடி சூப்பர்"- கார்த்திக்

"நாயே!இது கிச்சடி இல்ல,உப்புமா"- நான்

ஓ! அப்டியா?-கார்த்திக்

தக்காளி போட்டாதான்டா கிச்சடி,தக்காளி போடலீன்னா அது உப்புமா- நான்

எதோ ஒன்னுடா, இதுக்கு சட்னியோட சாப்டா நல்லா இருக்கும், super combo.-கார்த்கிக்.

ம்ம்ம்ம் ஆமாம்

நீதி- ஆடதடா ஆடதடா மனிதா, நீ ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா!

Wednesday, May 17, 2006

Tagged

Tagged by Sendhil


1.Grab the book nearest to you, turn on page 18 and find line 4.

Ans. From the report yor prepared for Activity C,List the business problems or situations that would be appropraite for (1) a short report or (2) a long report.

2.Stretch your left arm out as far as you can.& catch air?

Ans. Grabbed some risk management guidelines papers.

3. What is the last thing you watched on TV?

Ans. Hmm... Dancing with the Stars

4. Without looking, guess what time it is?

Ans. 12.40 Pm

5. Now look at the clock, what is the actual time?

Ans. 12.38 Pm

6. With the exception of the computer, what can you hear?

Ans.Funny voice of our strategy manager

7.When did you last step outside? What were you doing?

Ans. Morning... went to cafe to get some breakfast.

8.Before you started this survey, what did you look at?

Ans. MCM report.

9.What are you wearing?

Ans. Trouser and shirt.

10.When did you last laugh?

Ans. An hour before in the meeting

11.What is on the walls of the room you are in?

Ans. Poster of herald sun AFL 2006 premiers..

12.Seen anything weird lately?

Ans. hmm nah

13.What do you think of this quiz?

Ans. quiz???

14.What is the last film you saw?

Ans. Lord of War

15. If you became a multimillionaire overnight, what would you buy?

Ans. Depends on the millions I have.

16.Tell me something about you that I dunno

Ans. hmmm.........

17.If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?

Ans. I will abolish all the religion.

18.Do u like to Dance

Ans. Yeah but...i dunno to ..

19. Imagine your first child is a girl, what do you call her?

Ans. I would have to ask my wife suggestion as well. My suggestion would be- Arundhati

20 Imagine your first child is a boy, what do you call her?

Ans. I would have to ask my wife suggestion as well. My suggestion would be-Bharathi.

21.Would you ever consider living abroad?

Ans. Depends on the country

22.What do you want GOD to say to you when you reach the pearly gates?

Ans. How did u enjoy?

I would like to Tag- Veda, Ambi, Shuba, Sachin gops, Ms.Congeniality, Shree :)

Saturday, May 06, 2006

செய்திகள் வாசிப்பது.

சென்னை மே- 6: தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் இலவசமாக கலர் டிவி தருவதாகச் சொன்னதை அடுத்து ஏற்பட்ட தாக்கத்தை தனிக்க, தமிழகத்தில் திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் 4 கிராம் தங்கம் இலவசமாக தரப்படும் என்று செல்வி.ஜெயலலிதா அறிவித்தார். இதன் எதிரொளியாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டர் என்றும்,அவர் இத்தேர்தலில் அமோக வெற்றி பெறக்கூடும் என்று,தயாநிதி மாறன் தயவினால் இயங்கும் மத்திய உளவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதை தொடர்ந்து, மேலும் என்ன இலவசங்களை கொடுப்பது என்று ஆலோசிக்க, தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில், தி.மு.க கூட்டனி கட்சி கூட்டம், சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் பேசுகையில் அ.தி.மு.க இலவச தங்கத்தாலி தந்தால் மட்டும் போதுமா,தாலிகட்ட இலவச மாப்பிள்ளை வேண்டாமா என்று தனக்கே உரிய ராஜதந்திரபானியில் கேள்வி எழுப்பிய கலைஞர்,தனது கனவுத்திட்டமான, இலவச மாப்பிள்ளை திட்டத்தை அறிவித்தார். இதை தனது உளவுத்துறை மூலம் அறிந்த செல்வி.ஜெயலலிதா, புதுமனத் தம்பதிகளுக்கு தேனிலவு செல்ல தலா 10000 ரூபாய் தரப்படும் என்ற புரட்சிகர அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அலை வீசுவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து தி.மு.க வினர் கலக்கமடைந்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் கருனாநிதி, தேனிலவு சென்ற தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, தன் வாயால் தூய தமிழில் இலவசமாக பெயர் சூட்டப்படும் என்றும், குழந்தைகள் கக்கா,உச்சா போனால் துடைத்துவிட கேரளாவில் இருந்து வெள்ள வெளேர் என்று இருக்கும் நர்ஸ்களை(Nurse) இறக்குமதி செய்ய கழக அரசு ஆவன செய்யும் என்று உறுதி அளித்தார், இதை தொடர்ந்து திமுக வினர் உற்சாகம் அடைந்தனர்.


இதை கேள்வியுற்ற கேப்டன்.விஜயகாந்த் அவர்கள்,இரண்டு திராவிடக்கட்சிகளும் தனது தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதாக புகார் கூறினார்.தான் இலவசமாகத் தரும் கறவை மாடு(பசு மாடு) திட்டம் தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.இதை செய்தியாளர்கள் மூலம் அறிந்த செல்வி.ஜெயலலிதா,விஜயகாந்த் தரப்போகும் கறவை மாடு(பசு மாடு) பால் தராத பசு மாடு என்று தனது கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உருப்பினரும்,தற்போதைய அடி(மை)ப்படை உருப்பினருமான திரு.பால்கார,ராமராஜன் தெரிவித்ததாக கூறினார்.மேலும் டாடாவை மிரட்டிய விவகாரத்தில் தயாநிதி மாறன் பதவி விலக வேன்டும் என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

டாடா விவகாரத்திற்கு பதிலளிக்கும் பொருட்டு தனது தொன்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்,கடித விவரம் வருமாறு,

"உடன்பிறப்பே, பார்ப்பனீயம் என்ற பாம்பினைப் பாலூட்டி வளர்த்த ஆரிய முதலாளிதான் டாட்டா என்பதனை அன்றே அறிந்து சொன்ன அண்ணாவின் அறிவுரையைத் தன்மானத்தமிழன் மறந்துவிட்டிருப்பான் என மனப்பால் குடிப்பவருக்கும், வீணாய்ப்போன விபீடணனுக்கும், ஆரிய சூழ்ச்சிக்கும், அநியாய ஆட்சிக்கும் வேட்டாய் வைத்து டாட்டா சொல்லும் வண்ணம், அய்யன் வள்ளுவன் அழகுபடுத்திய அம்மொழிதன்னை செம்மொழியாக்கிய சிங்கத்தமிழனை(தயாநிதி மாறனை) சிம்மாசனம் ஏற்றும்வரை ஊணில்லை உரக்கமில்லை ஒருநாளும் ஓய்வுமில்லை என்றெழுந்து, புறப்படு, அதோ தெரிகிறது மே 8.

Serious Talk.

I've no words to express my anger and irritation whenever I read about this election developments in Tamilnadu.I just want to quote the following lines from Bharathi.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் --நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா --அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

Monday, May 01, 2006

பஸ்ஸில் வாங்கிய பல்பு!

இந்த incident நான் India la படிக்கும் போது நடந்தது.வழக்கம்போல வெள்ளிக்கிழமை KG complex la சினிமா பார்த்துட்டு, நானும்,என்னோட நண்பர்கள் Mr.S um பாலாவும், பஸ்ல ஊருக்கு போய்ட்டு இருந்தோம்(மூனு பேருமே திருப்பூர்).இந்த incident la கதா நாயகன் நம்ம Mr.S தான்.பஸ்ல வலதுபுறமா இருக்கற ladies சீட்ல மூனுபேரும் ஜம்முனு உட்கார்ந்துட்டு வந்தோம். Hopes college la (Bus Stop)பஸ் நிக்கும் போது, ஒரு பொண்னு(Ms.V) , இந்த லட்சுமி,சரஸ்வதி,கமாட்சி, கடாட்சமெல்லாம் பொருந்திய பொண்னு அவுங்க,பஸ்ல ஏறினாங்க,ஏறினவங்க நேரா எங்க பக்கத்துல வந்து நின்னு, நாங்க சீட்ல உட்கார்ந்திறுக்கறத பார்துட்டு கேவலமா ஒரு look விட்டாங்க.அதையெல்லாம் கன்டுக்காம, நானும், Mr.S um அவுங்கள பார்த்து ரென்டு கையும் நீட்டினோம், கொஞ்சம் ஆச்சரியமா பார்த்துட்டு, தான் கொன்டு வந்த college bag கொடுத்தாங்க, நான் வாங்கி வெச்சுக்கிட்டேன்.

இந்த மாங்கா HOD,நான் வாங்கின Marks எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டாரே,வீட்ல என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசனைலயே இருந்தேன். அப்ப தான் நம்ம Mr.S எங்கிட்ட பேச ஆரம்பிச்சாரு. எங்க உரையாடலை கீழ படிங்க.

Mr.S : டேய்,அந்த பொண்னு நம்ம ஊருக்குதான்டா டிக்கெட் எடுத்துருக்கா.அந்த bagla ஒரு book எடுத்து எந்த காலேஜ்னு பாரு.

நான்:இருடா,கொஞ்ச தூரம் போகட்டும்,கூட்டம் வந்துரும்,யாருக்கும் தெரியாம பார்க்கலாம்.

Mr.S :இதுக்கு முன்னாடி இந்த பொண்ன பார்த்ததே இல்லடா!

நான்:இங்கபாரு, நான் வேற யோசனைல இருக்கறேன், disturb பன்னாத.

Mr.S :ஆமான்டா, வீட்டு அட்ரஸ் மாத்தி குடுடானு சொன்னபோது ஏதோ mark எடுத்து கிழிக்கறவன் மாதிரி பேசின!( திரும்பி Mr.S பாத்து முறைத்தேன்)

Mr.S :என்ன look வுட்ற,சரி அந்த பொண்னோட bag குடு, நான் வெச்சுட்டுருக்கறேன்.

நான்:டேய்,அந்த பொண்னு பாத்துச்சுன்னா கேவலமா இருக்கும்டா.

பாலா:கூட்டம் வர்ற மாதிரி தெரில,அந்த baga அப்படியே இந்த பக்கமா கிழ வையி,யாருக்கும் தெரியாம நாங்க பார்த்துக்கறோம்.

Mr.S : அது வேண்டாம்,யாரவது பார்த்தா அசிங்கமா போய்டும். நீ இந்த பக்கமா வை side pocketla எதாவது இருக்குதா பார்கலாம்.

நான்: இருடா,அந்த பொண்னுகிட்ட bag குடுக்கும் போது, நீங்க P SG college ah nu கேட்ட,எந்த காலேஜ்னு சொல்லிருவா.

பாலா:டேய், நீ,அவன(me) நம்பாத,அவனோட Track record உனக்கே தெரியும். Election fever la (1999 LS election) நீங்க வாஜ்பாயிக்கு ஓட்டு போடுவீங்களா இல்ல சோனியா காந்தியானு தான் கேப்பான். (நல்லா இருடா நல்லவனே!)

(இப்படியே பேசிட்டிருந்தோம் கொஞ்ச நேரம்,)

Mr.S:டேய், கூட்டத்துல எல்லாரும் இறங்கும் போது அந்த பொண்னும் baga வாங்கிட்டு போய்டும்,கேக்க நேரம் இருக்காது.

பாலா & நான்:அட கொஞ்சம் பொறுமைய இருடா.(Mr.S nala ஒன்னும் முடியல,திடீர்னு Mr.S ஒரு வேலை செஞ்சான்,அந்த பொண்னுகிட்ட கேட்டுட்டான்)

Mr.S to Ms.V: நீங்க PSG காலேஜ்ங்ளா?(மூனு பேரும் அந்த பொண்னு வாயவே பார்த்துட்டு இருந்தோம்

Ms.V :இத கேக்க இவ்ளோ நேரமா???பஸ் திருப்பூர்கே வந்துருச்சு!!(வாங்கிக்கடா பல்பு)

இப்படி அந்த பொண்னு சொன்னவுடனே,பக்கத்து சீட்ல இருந்தவங்க சிரிச்ச சிரிப்பு இருக்குதே,TOATL DAMAGE.

இப்ப பாலா வருடத்துக்கு ஒரு company மாறி இப்போ Motorola ku வேலை செய்யறான்.

Mr.S அவர்கள் திருப்பூர்ல company வெச்சு Europe,US ku T-shirt export பன்றான்.