Sunday, May 31, 2009

Tobacco pictorial warnings must from today.

மே 31, உலக புகையிலை தினமான இன்றுமுதல் இந்தியாவில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்கும்போது அப்பொருட்களில் படத்துடன்கூடிய எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று இந்தியஅரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வரவேற்கப்படவேண்டிய விடயம் இது. அதிக மக்கள் தொகை கொண்ட, விழிப்புணர்ச்சி குறைந்த இந்திய மக்களிடம் இது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி ஹிந்துவில் வெளியான கட்டுரை இங்கே Packing a pictorial punch .


இது தொடர்பாக 2006ல் நான் எழுதிய பதிவு Money Smoking Zone! .

Wednesday, May 27, 2009

புத்தம் புது காலை!

















இலையுதிர்காலம் தொடங்கியாகிவிட்டது. தினமும் படத்தில் இருக்கும் Fwakner park வழியாக நடந்து அலுவலகம் செல்கிறேன். பனிவீசும் காலையில், ராஜாவின் "புத்தம் புது காலை” யை கேட்டுக்கொண்டே செல்லும்போது உடனே நினைவுக்கு வருவது ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்” என்ற பாரதியின் பாடல்தான். பதிவில் உள்ள படம் என் செல்பேசி வழியாக எடுக்கப்பட்டது.