Fawkner Park
எங்கள் நிறுவனத்தில் நான் வேலை செய்யும் துறை மட்டும் இடப்பற்றாக்குறையின் காரணமாக சமீபத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்து வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தோம். Stkilda Road என்று அழைக்கப்படும் ரோட்டில்(நம்ம ஊரு IT park ரோடு மாதிரின்னு சொல்லலாம்)தான் புதிய அலுவலகம். வீட்டில் இருந்து 15-20 நிமிடங்கள் புகைவண்டியில் சென்று, ஒரு 15 நிமிடம் நடந்தால் அலுவலகம் வந்துவிடும். காலையில் அலுவலகம் செல்லும்போது மிகவும் புத்துணர்ச்சி தருவதாக இருக்கிறது இந்த 15 நிமிட நடைபயனம்.காரணம் Fawkner Park என்று அழைக்கப்படும் பூங்காவின் வழியே நடந்து அலுவலகத்தை அடைவதால்தான். என்னுடைய செல்பேசி மூலம் நடந்து செல்லும் பாதையை சிலபடங்கள் எடுத்தேன்.