Saturday, November 15, 2008

உண்மையைச் சொன்ன விஜயகாந்திற்குப் பாராட்டுக்கள்!

சென்னை, நவ. 10: சட்டப்பேரவை வளாகத்துக்கு திங்கள்கிழமை காலை 10.12 மணிக்கு வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேற்கு வராண்டா பகுதிக்குச் சென்ற அவர் எம்.எல்.ஏ.க்களுக்கான வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, உடனடியாக திரும்பிச் சென்றார். "ஒரு மாதம் வெளியூர்களில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதால், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இயலாது' என நிருபர்களிடம் தெரிவித்த விஜயகாந்த், பின்னர் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்.


தனக்கு ஓட்டுப்போட்டு, சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து, தங்களின் குறையை எல்லாம் சட்டமன்றத்தில் போய் பேச வாய்ப்புக் கொடுத்த எல்லாரையும் உலகமகா கேனையர்கள்னு பச்சையாவே சொல்றாரு விஜயகாந்த்.

உண்மையைச் சொன்ன அவரை நிச்சயம் பாராட்டனும்.

பாராட்டுக்கள் விஜயகாந்த்!

விஜயகாந்தைப் பார்த்தாவது ஜெயலலிதா அவர்களும், கலைஞரும் சட்டம் மன்றம் செல்லாததற்க்கான(எதிக்கட்சியாக இருக்கும்போது மட்டும்) காரணத்தை மக்களுக்குத் தெளிவாக்கவேண்டும்.

Thursday, November 13, 2008

Surrealistic image of Caste


இந்தப்படத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவ(குண்ட)ர்களின் முகபாவங்கள் சொல்லும் செய்திகள் ஏராளம். (Surrealistic image of Caste)

அரசியல் தலைவர்களை எல்லாம் சில ஜாதிகளுக்கு மட்டுமே உரித்தானவர்களாக மாற்றிய நம் அரசியல்வாதிகள் நிச்சயம் நூறு சதம் வென்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.