The Mughal World : Book Review (புத்தகவிமர்சனம்)
” ஒலரங்கசீப் (ஒளரங்கசீப்) பாடம் எப்ப நடத்துவீங்க டீச்சர்”? என்று கேட்டு சாவித்திரி டீச்சரிடம் கொட்டு வாங்கிய மூன்றாம் வகுப்பின் பள்ளி நாள் இன்றும் நினைவில் உள்ளது. மொகலாய மன்னர்களின் பெயர்களை எங்கு படித்தாலும் (குறிப்பாக ஒளரங்கசீப்) சாவித்திரி டீச்சரிடம் வாங்கிய கொட்டின் நியாபகமும், சிறு புன்னகையும் தோன்றி மறையும்.
வழக்கமாக தமிழ் சினிமாவில் எப்படி வில்லனை காட்சிப்படுத்துவார்களோ, அதே போலத்தான் இன்றைய பள்ளிப் புத்தகங்களில் மொகலாய மன்னர்களைப் பற்றி எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த வில்லன் லிஸ்டில் இருந்து அக்பரும்,பாபரும் மட்டும் ஏனோ விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். நான் படித்தபோது மூன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்புவரை படித்த வரலாற்றுப் பாடங்களில் மொகலாய மன்னர்கள் என்றாலே.. "என்ன ஒரு வில்லத்தனம்?" என்று என்னும் வகையில்தான் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். வரலாற்றில் ஒரு சாரரை மட்டும் செலக்ட்டீவ் ஜட்ஜ்மெண்டலோடு( selective judgmental) கற்பதும்/கற்றுக்கொடுப்பதும் அபாயகரமானது என்பது என் தாழ்மையான கருத்து.
மொகலாய அரசுகளைப் பற்றியும், மன்னர்களைப் பற்றியும் வரலாற்று ஆசிரியர்கள் நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள்..அவர்களில் அபரகாம் எராலி( Abraham Eraly) எழுதிய The Mughal World என்ற புத்தகத்தைப் படித்துவருகிறேன்.. அப்புத்தகத்தைப் பற்றியும், மொகலாய மன்னர்களைப் பற்றியும் சில சுவாரசியமான விசயத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் சில பதிவுகளாக எழுத உத்தேசித்துள்ளேன்..சில வாரங்களில் எழுதி முடித்துவிட எண்ணம்.. பார்க்கலாம்.
********************
போர்ச்சுகீசியர்கள்தான் இந்தியாவிற்கு முதன் முதலில் வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே..1498ல் வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகீசியர், கேரளாவின் கோழிக்கோட்டில் வந்திறங்கினார்..அவர் வந்தபோது தான் கிருஸ்துவர்களையும், நறுமனப்பொருட்களையும் ( Christians and Spices)யும் தேடி வந்ததாக சொன்னாராம்.
*********************
(தொடரும்)