Thursday, April 23, 2009

கோபம்!

இந்தப் படங்களைப் பார்க்கும் போதும்,ஈழத்தமிழர்களின் நிலையைப் பற்றிவரும் செய்திகளைப் படிக்கும் போதும் என்னால் தாங்கமுடியவில்லை.கையறு நிலையின் உச்சத்தில் நான் இப்போது வேண்டுவதெல்லாம், இன்று என்னுள் இருக்கும் கோபம், இந்த வலைப்பதிவின் தலைப்பைப்போல எதுவும் சில காலமாக, காலத்தால் நீர்த்துப் போகாமல் என்றும் நிலைக் கவேண்டும் என்பதே!

இனிவரும் தலைமுறையாவது அரசியல் விழிப்புணர்ச்சியும், கொஞ்சம் அதிக சமூக அக்கறையோடும் வளரவேண்டும்.

5 comments:

ராஜ நடராஜன் said...

//இனிவரும் தலைமுறையாவது அரசியல் விழிப்புணர்ச்சியும், கொஞ்சம் அதிக சமூக அக்கறையோடும் வளரவேண்டும்.//

வேண்டுவதும் அதே.

பதி said...

//படங்களைப் பார்க்கும் போதும்,ஈழத்தமிழர்களின் நிலையைப் பற்றிவரும் செய்திகளைப் படிக்கும் போதும் என்னால் தாங்க முடியவில்லை//

சமயங்களில் மனநிலை பிறழும் நிலையை ஏற்படுத்துகின்றது.

நிச்சயமாக நீடிக்கும் இந்தக் கோபம்....

ஆனால், அதற்கு முதலில் நாம் நமது 'இந்தி'யர் என்னும் அடையாளத்தை துறக்க முயல வேண்டும்...

இது சம்பந்தமானதொரு பதிவு

http://blog.tamilsasi.com/2009/04/identity-crisis-tamilnadu-tamils-india.html

அனுசுயா said...

//கொஞ்சம் அதிக சமூக அக்கறையோடும் வளரவேண்டும்//

இது கொஞ்சமே கொஞ்சம் எல்லா மக்களுக்கும் இருந்திருந்தா இந்த நிலை யாருக்கும் ஏற்படாது. ஆனா எல்லாரும் சமூக அக்கறையோடுதான் இருக்காங்க ஆனா அடுத்த சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் அவங்கவங்க சமூகத்தின் மீதும் மட்டும் அக்கறையோடு :(

சவுக்கடி said...

***ஆனால், அதற்கு முதலில் நாம் நமது 'இந்தி'யர் என்னும் அடையாளத்தை துறக்க முயல வேண்டும்...***

மிகச்சரி.

enRenRum-anbudan.BALA said...

எனக்கும் :(