Monday, October 05, 2009

அம்மாவின் கடிதம்!



திருப்பூர்-8
1-6-05

அன்பு

மகனுக்கு அம்மாவின் அன்பான ஆயிரம் முத்தங்கள். இங்கு நாங்கள் அனைவரும் நலம். இதுபோல் உன் நலனையும், உன் நண்பர்கள்,விஜியக்கா குடும்பத்தினர் நலனையும் அறிய ஆவல்.

நீ அறிவது:-

உனக்கு 4 பேண்ட்,சர்ட்டும்.வீட்டில் இருந்த மூன்று பனியன்களும் அனுப்பியுள்ளோம். இத்துடன் கோட்டை மாரியம்மன் கோவில் திருநீர்,மஞ்சள் குங்குமமும் அனுப்பியுள்ளேன். குளித்து நெற்றியில் வைத்துக்கொள். எந்த பயமும் இல்லாமல் இரு. நன்றாக சாப்பிடு. சந்தோசமாக இரு. வீட்டு வேலைகள் முடிந்துவிட்டது (அப்போது பழைய வீட்டிற்க்கு அருகே புது வீடு கட்டிக்கொண்டிருந்தோம்). இம்மாதம் 10ம் தேதிக்குள் குறைந்தது ரூ 60,000 பேங்கில் கட்டிவிடுவோம் . உறுதி. இப்பார்சல் கிடைத்தவுடன் போன் செய். ராமமூர்த்தி மாமா வந்திருக்கிறார்கள்.

போன்செய்..

வேப்ப இலை அனுப்பி உள்ளேன்
தலையணைக்கடியில் வைத்துக்கொள்.
இப்படிக்கு
அன்புள்ள அம்மா
சரசுவதி
1.6.05

குறிப்பு: இன்று ஒரு வங்கி சம்பந்தமான கடிதத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட அம்மாவின் கடிதம் இது.. 2005ல் படித்தபோது, அம்மா திருந்தவே திருந்தாது.மாரியம்மன்,வேப்ப இலை,குங்குமம் என்றுதான் பேசும். அம்மா இனிமேல் அனுப்பப்போகும் வேப்ப இலை ஒரு நாள் என்னை ஆஸ்திரேலிய கஸ்டம்ஸ் அலுவலகம் அழைத்துச் செல்லப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன்..இன்று படித்தபோது அப்படியேதும் தோன்றவில்லை..கடிதத்தை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டே இருக்கிறேன்!