Monday, October 05, 2009

அம்மாவின் கடிதம்!திருப்பூர்-8
1-6-05

அன்பு

மகனுக்கு அம்மாவின் அன்பான ஆயிரம் முத்தங்கள். இங்கு நாங்கள் அனைவரும் நலம். இதுபோல் உன் நலனையும், உன் நண்பர்கள்,விஜியக்கா குடும்பத்தினர் நலனையும் அறிய ஆவல்.

நீ அறிவது:-

உனக்கு 4 பேண்ட்,சர்ட்டும்.வீட்டில் இருந்த மூன்று பனியன்களும் அனுப்பியுள்ளோம். இத்துடன் கோட்டை மாரியம்மன் கோவில் திருநீர்,மஞ்சள் குங்குமமும் அனுப்பியுள்ளேன். குளித்து நெற்றியில் வைத்துக்கொள். எந்த பயமும் இல்லாமல் இரு. நன்றாக சாப்பிடு. சந்தோசமாக இரு. வீட்டு வேலைகள் முடிந்துவிட்டது (அப்போது பழைய வீட்டிற்க்கு அருகே புது வீடு கட்டிக்கொண்டிருந்தோம்). இம்மாதம் 10ம் தேதிக்குள் குறைந்தது ரூ 60,000 பேங்கில் கட்டிவிடுவோம் . உறுதி. இப்பார்சல் கிடைத்தவுடன் போன் செய். ராமமூர்த்தி மாமா வந்திருக்கிறார்கள்.

போன்செய்..

வேப்ப இலை அனுப்பி உள்ளேன்
தலையணைக்கடியில் வைத்துக்கொள்.
இப்படிக்கு
அன்புள்ள அம்மா
சரசுவதி
1.6.05

குறிப்பு: இன்று ஒரு வங்கி சம்பந்தமான கடிதத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட அம்மாவின் கடிதம் இது.. 2005ல் படித்தபோது, அம்மா திருந்தவே திருந்தாது.மாரியம்மன்,வேப்ப இலை,குங்குமம் என்றுதான் பேசும். அம்மா இனிமேல் அனுப்பப்போகும் வேப்ப இலை ஒரு நாள் என்னை ஆஸ்திரேலிய கஸ்டம்ஸ் அலுவலகம் அழைத்துச் செல்லப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன்..இன்று படித்தபோது அப்படியேதும் தோன்றவில்லை..கடிதத்தை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டே இருக்கிறேன்!
11 comments:

பதி said...

:-)))

இணைய வழியிலான தொலைபேசிகள் பெருத்ததினால், இழந்த முக்கியமானதில் இது போன்ற கடிதங்கள் தரும் சுகங்களும் தான்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

Prakash said...

Touching one Gops :) When we live in some place where they are least emotional , am happy that back in our place there are so much value for relations. The bond is inexplicable

சின்ன அம்மிணி said...

பதி சொன்ன மாதிரி தொலைபேசிகள் அதிகமானதால் நாம் இழந்த ஒன்று இந்தக்கடிதங்கள்.

Iniyaazh - இனியாழ் said...

Kota mariamman kovil temple is my mom's favourite too, when it comes to theertham and vibuthi :) Not sure, if there is more than one though...
True, that such letters are first irritating, but there is no better proof for a mother's innocent love and affection.

☼ வெயிலான் said...

அன்பு இழையோடுகிறது கடிதத்தில்... :)

ஆயில்யன் said...

//இன்று ஒரு வங்கி சம்பந்தமான கடிதத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட அம்மாவின் கடிதம் இது/


ஹைய்ய்ய் சூப்பர்! எனக்கும் இப்படி அம்மா எழுதின ஒரு கடிதம் ரெண்டு வருசத்துக்கு முந்தி நான் இங்க வந்து சேர்ந்தப்ப எழுதியிருந்தாங்க! அதை அப்படியே பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன் திடீர்ன்னு வீட்டு ஞாபகம் வந்தா அந்த லெட்டர் எடுத்து பார்ப்பேன் !

50% சந்தோஷம் இருந்தாலும் 50% மனசுல கொஞ்சம் பாரம் இருக்கத்தான் செய்யுது :(

வல்லிசிம்ஹன் said...

அம்மா அப்பாவின் கடிதங்களை,தோழிகளின் கடிதங்கள்
எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அவை நான் அதிக உலகம் அறியத காலம். என்னைப் பெற்றவர்களும் அப்படியே இருந்திருக்கிறார்கள். அன்பு அன்பு அன்பு அதைத்தவிர வேறு ஒன்றும் இருக்காது அந்தக் கடிதப் பரிமாறல்களில். மிக்க நன்றி .
உங்கள் பகிர்தலுக்கு.
இப்பவும் கூடக் கடிதங்கள் எழுதும் ஆசை இருக்கிறது.:)
எங்கள் பிள்ளைகளுக்கும் பிடிக்கும். ஒரு வரியாவது ஒரு லெட்டர் போடும்மா என்பார்கள். தொலைபேசி திருடிய கடிதங்களை மீட்கலாமா!!!

அ.பிரபாகரன் said...

இது ஏதோ எனக்கு வந்த கடிதம்போலவே உணர்கிறேன்.

நல்லதொரு பதிவு கோபாலன்.

Vijayashankar said...

பவர்புல் கடிதம்.

எனக்கும் என் அம்மா, அப்பா நான் அமெரிக்காவில் இருந்த போது எழுதிய கடிதங்கள், இப்போது படித்தாலும், நினைவலைகளை கிளர்ந்தெடுக்கசெய்யும்.

நானும் திருப்பூர் தான் ( 1979 - 90 ). இப்போது பெங்களூரு. அங்கு எப்படி நிலைமை உள்ளது. ரேசிசம், வேலை. வாழ்க்கை.

--
Regards
Vijayashankar
http://www.vijayashankar.in

Viji said...

Very nice one.
Even I read my mother's old letters sometimes. She also keeps stressing on the "Eat properly" part. :-)

I don't much subscribe to the arrogance that leads people to assume that parents don't know anything and they just talk about mariamman, veppa elai, kungumam etc. We must learn to be open-minded and treat them and the things that they follow with respect, even if we don't completely agree with it and don't follow it ourselves.

Ponnarasi Kothandaraman said...

I loved this post! :) Very innocent and amazing!