Saturday, July 08, 2006

குரு போட சொன்ன ஆறு!

அணு அணுவாக பூக்களைப் பற்றி ஆராய்ந்து பதிவுகள் போடும் அனுசுயா அவர்களும், நம்ம பரத்(இவருக்கு எழுத்தாளர் சுஜாதா மேல ரொம்ப லவ்ஸ்) அவர்களும்,கல்லிடைக் குறிச்சியின் கட்டித் தங்கமும், கெட்டிச் சட்னியுமான( ஹி...ஹி,ஒரு எதுகை மோனையா இருக்கட்டுமேனுதான்)திருநெல்வேலி அல்வாவுக்கே கேசரி கிண்டி குடுக்கும் திறமைகளைக் தன்னகத்தே கொண்டுள்ள,எங்கள் தென்பான்டிச் சிங்கம்,தமிழர் குலக்கொழுந்து,கொள்கைச் செம்மல்,வீருகொன்ட வேங்கை,வெற்றித் திலகம்,தியாகத்தின் திருஉருவம், நடிகை அஸினின் தம்பியாம்
,எங்கள் அம்பி அவர்களும், ஆறு பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள்.ஆறு கேள்வியும்,பிடித்த ஆறு மனிதர்களைப் பற்றியும் எழுதவேன்டும்.

ஆறு கேள்விகள்.

1. எதுக்கு தமிழ் சினிமா நடிகைகள் மட்டும் வெட்கப்படும்போது "ச்சீய்ய்" சொல்றாங்க?மத்த state la எல்லாம் என்ன சொல்றாங்க?

2. "ஒரு பொண்ணோட மனசு இன்னோரு பொண்ணுக்கு தான் தெரியும்" ,"பதினெட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து பன்றவன்", " நீ இல்லாம ஒரு வாழ்க்கைய என்னால் கனவுல கூட நெனச்சுப் பார்க்க முடியாது" இது மாதிரி மொக்கை டயலாக் எழுதினவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்? (Grrrr)

3. சில பொண்ணுங்க அவுங்களோட kerchiefa ஏன் இறுக்கமா,கசக்கி(காக்கா வலிப்பு வந்தவன் கொத்துச்சாவிய புடிச்சிட்டிருக்கற மாதிரி) வெச்சிருக்காங்க.


4. மத்தியானம் 2 மணிக்கு "சுள்"னு அடிக்கற கத்திரிவெய்யில்ல,கொதிக்கும் மெரினா பீச் மனலில் இந்த காதலிக்கற மக்கள் மட்டும் எப்படி ஜாலியா சொரனையே இல்லாம சிரிச்சு பேசிட்டு இருக்காங்க?அட காதலுக்கு கன்னு இல்ல,சரி,சொரனையுமா இல்ல?

5.தற்போதைய சர்வேயின் படி நம்ம தமிழ்நாட்டில் 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் இருக்காங்களாம். கருவிலேயெ பெண் சிசுக்களைக் கொல்வது, கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போன்ற கொடூர கொலைக் குற்றங்களை எல்லாம் தான்டி, 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் என்ற 93% சம நிலை இருக்கிறது.இதற்கு யார் காரனம்?

6.எந்த கேள்வியெல்லாம் பரிட்சைக்கு வாராதுனு நெனச்சு படிக்காம விடரமோ,அதே கேள்விதான் அடுத்த நாள் வந்து தொலைக்கும். ஏன் இப்படி?


எனக்கு பிடித்த ஆறு பேர்.

1.இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.

என்று இரண்டே வரிகளில் உலகப் பொருளாதாரத்தை சொன்ன திருவள்ளூவர்.


2.எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;

எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதை படிப்பேன்.பாரதி இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ்ந்திருக்கக் கூடாதா?


3. இளையராஜா. How to Name It &" செந்தூரப்பூவே" கேட்டிருக்கீங்களா? சாதனைகள் முறியடிக்கப் படுவதற்கே என்றாலும்,இவர் செய்த சாதனைகளை இன்னோருவரால் முறியடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
4.அருந்ததி ராய். இவங்க விஷயத்தை சொல்லும் விதம்.சொல்லும் கருத்துக்களுக்கு தகுந்த வார்த்தை பிரயோகத்திற்கு பெயர் பெற்றவர்.இவரது சில கட்டுரைகளை ஜார்ஜ் புஷ் முன் வாய்விட்டுப் படிப்பதும்,அவரை செருப்பால் அடிப்பதும் ஒன்றுதான். God of Small things என்ற தனது முதல் கதைக்கு புக்கர் பரிசு வென்றவர். I've the ebook of God of Small Things.Let me know if anyone wants it.
5.சச்சின் டெண்டுல்கர். இவரை பற்றி புதுசா சொல்ல என்ன இருக்கு?அவருடைய இந்த படம் நான் எடுத்ததுதான்.6.Roger Federer.டென்னிஸ் என்ற பெயருக்கு பதிலாக இவரது பெயரைகூட சொல்லலாம்.பின் குறிப்பு: அம்பி குருவே,அஸின் கைவிட்டு போனத நெனச்சு வருத்தப்படாதீங்க.குருவா,சமத்தா,வீட்டுல அம்மா பார்கற பொண்ண மட்டும் நெனச்சுட்டு இருங்க போதும். இனிமேலும் பொலம்பினா கோபிகா, கொளுந்தியாளாகவும், நயன்தாரா, நாத்தனாராகவும் மாற்றப் படுவார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை படித்துவிட்டு கோபம் கொள்ள வேன்டாம் குருவே,ஏனெனில் "ஆறுவது சினம்";).

I would like to Tag.

Sendhil,Marudham,Veda,KRK.

50 comments:

krk said...

vada rasa va...nalla badiya 6 matter eludhittu...naan parthu ada ada ivlo nalla eludhi irukane..keela vandha...potaan paru oru bituuu...hehheheh

Shuba said...

//திருநெல்வேலி அல்வாவுக்கே கேசரி கிண்டி குடுக்கும் ........ அஸினின் தம்பியாம்
,எங்கள் அம்பி ///ambiya asin thambi aakki avrukku luv failure panniteenga!

overa guru pugal paadinaa syshyanukku soda vaangi kudungappa!

Unga first doubt...matha state na...entha state?etho kaaranama kekkringa maadiri teriyuthu
2) barathiraaja ,baagyaraj padam ethavathu recentaa paatheengala?
3) kerchiefa unga kaluthunu nenachitaanga pola
4)antha doubt enakkum irukku!accept with u!
5)I heard the same story paiyangalukku ponnu kidaikkrtahu kashtama irukkam!
6)entha kelvi varumnu thonutho atha padikkatheenga prob solved!

Your selection of six people is perfectly good!

senthil natarajan said...

thalaiva,....adhu tamil le iruku

அனுசுயா said...

நல்லா போட்டீங்க ஆறு பதிவு. அப்பா நான் தப்பிச்சேன். ஆனா பாவம் பரத்தும் அம்பியும் இப்டி மாட்டீட்டாங்க. உங்கள ஆறு பதிவுக்கு கூப்பிட்டதுக்காக அம்பிய அஸினோட தம்பியாக்கிட்டீங்களே நியாயமா? :)
ஆனா உங்களுக்கு பிடித்த ஆறு பேருமே அருமையான தேர்வுகள். அசத்திட்டீங்க.

Syam said...

//நடிகை அஸினின் தம்பியாம்
,எங்கள் அம்பி அவர்களும்//

ooruku varappo sollunga ungala Bengalooruku kooti poi PUB la periya paartiya vechuralaam... :-)

nalla iruku aaru...athilum kadaisi para innum soober.. :-)

My days(Gops) said...

1.gops nee last'a eppa padam paartha?
aaama tamil cinema'la nadikira ponnunga ellam maatran thotta'thu malligai.....i mean, ellamey other state girls...so, avangalukku 'ச்சீய்ய்" mattum thaaan solli kodupaaanga namma aalunga..
he he he...

2. avan andha dialogue'ey illama, 100 padathuku dialogue eludhanu'nu thandanai koduthruvom..kavalai'a vudupaaaaaaaaaaaa.

3. he he he, adhu mattum thaaney unakku therium? kerchief'la oru peria maater'ey undupaa...
@shuba:- aaaaamam, ninaiputhaan ungalukku...

4. idhukooda parava illai, jodi'a irrundha onnum theriaadhu...namma guys summa solo'va bustand la nipaan paaru........paavam..

5. he he he, naan stat'la konjam veeekku.....1000/932 peru irrundhum, yempa oru figure'um look uda maaaatengudhu..?

6. therium'la nee andh kelvi thaan padichi'tu poi irrupa., aaan vandhu irrukaadhu...so plate'a thiruping? (kidding yaar)

@thiruvalluvar:- kaalathinaaal seidha udavi siridheninum, adhu nyalathin maaala peridhu....
hw true it is?

@bharadhi:- vaadi'a payirai kanden, naaanum vaadinen...

@illaiaraja:- correct'a soneenga gops...chance'ey illa..

@sachin tendulkar:- ivara pathi oru post ready boss..

@federer:- i duno much abt him..

gops, edutha edupilaiye ambi'a kavuthuteengaley? paavam pub'ku pogadhavar, ippa poganum'nu decide pannitaaar..vera edhuku? oru soda odachi kudikathaaan...
(aaanaalum, neenga ippadi oru mudiva eduthu irruka koodadhu...yerkanavey, naan avara anniyana maathiten...) lets wait and see enna panna poraar'nu..

thiruvalluvar, bharadhiyar, sachin, illai'a raaaja....selection super'nga....

Shuba said...

my days gops://@shuba:- aaaaamam, ninaiputhaan ungalukku...//Ahem!venam my days gops...athenna rams gops mela appdi oru paasam...?avar enna vambukilutha iyya jolly joly nu neengalum ambiyum u r adding fuel to fire...athe rams gops a naan vambukku ilutha nenapputhannu solringala..venam...approm naan viji usha veda congeneality ellarayum supportkku kupuda vendi varum!

Ms.Congeniality said...

LOL at ur questions and shuba's reply!!
Neenga select panna aaru perum soooooper :-)

My days(Gops) said...

@shuba:- thani oru manidhanukku(ramgops) aadharavu illai'enil, indha jagathinai (ambi,gops etc etc) koootuvom...
paartheengala, ungalakku support pannala'nu statement vututeengaley?
ambi sonnapa ellam, yaaru ungalukku 'soda udaichi koduthadhu?'

வேதா said...

//நடிகை அஸினின் தம்பியாம்
,எங்கள் அம்பி//
அம்பிக்கு ஆத்துல பொண்ணு பாக்கறான்னு தெரிஞ்ச உடனே, அம்பிய அசினுக்கு தம்பியாக்கிட்டீங்க, நீங்க தாங்க குருவை மிஞ்சிய சிஷ்யன்:)

1.என்னது தமிழ் சினிமா நடிகைகள் வெட்கப்படறாங்களா?
2.ஒரே நாள்ள தொடர்ந்து எல்லா கேப்டன் படமும் பாக்க வெச்சுடணும், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)
3.இந்த மாதிரி மொக்க கேள்வி கேக்கறவங்கள பாத்து வர்ற கோவம் தான்.
4. காதலுக்கு ஒன்னுமே இல்லீங்க:)(நாட்டுக்கு ரொம்ப தேவை)
5. பெருகி வரும் சமூக விழிப்புணர்ச்சியும், தாய்மார்களும் தான்.
6.அதுக்கு பேரு தான் விதி:)

பிடித்த ஆறு பேர், நல்ல தேர்வு, முதல் மூன்று பேர் எனக்கும் பிடிக்கும். நர்மதா பச்சாவ் ஆந்தோலனில் அருந்ததி ராயின் பங்களிப்பைப் பேப்பரில் படித்தேன்.
அவருடைய புத்தகத்தை அனுப்புங்கள், படித்துப் பார்க்கிறேன்(என் மெயில் id உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன், என் orkut அக்கவுண்டில் உள்ளது.

கடைசியா என்னையும் ஆறு போட வைக்கறீங்க, கொஞ்சம் டைம் கொடுங்க:)

வேதா said...

@gops(my days)
//bharadhi:- vaadi'a payirai kanden, naaanum vaadinen...//
hi thats not bharathi, that was told by vallalar.

barath said...

//நம்ம பரத்(இவருக்கு எழுத்தாளர் சுஜாதா மேல ரொம்ப லவ்ஸ்) //

ககக போ...

ungal thervu(selection) arumai

// I've the ebook of God of Small Things.Let me know if anyone wants it.//
enakkoru copy..

Shuba said...

my days gops://thani oru manidhanukku(ramgops) aadharavu illai'enil//

thani oru manithanaaa?neenga yaara pathi pesuringa...rams gops pathinaa...avar thani maniidan illai!!!!!avar pinnadi oru periyaa kootame irukku!neengale avar kitta kettu terinjokkonga....

//ambi sonnapa ellam, yaaru ungalukku 'soda udaichi koduthadhu?' //GRRRRRRRRRRRRR........my days gops....kkkkaa ini unga pechu kkkkaaaaa......doooo...pazham vidave matten!

My days(Gops) said...

@shuba:- thani oru manidhan ramgops thaaan....
avar pinaala oru peria kootam irrukudhu'nu neenga solli thaan therium.. (Ramgops appadiya?)

btw, ellorum ramgops'a vambukku illukuraanga, avar chinnapaiyan'nu yaaro sonnanga.... he he he
sare'nu support pannuna....
enakku venum enakku venum...
(jst kidding)..

@soda:- neenga kalaipaa irrupeenganu soda udaichi koduthadhu'ku........en katchi kkaa vudreenga? vuttuteenga..
idhelam no nyayams....
neeenga odaney case'a vaapas vanganum....illati naan high court'la apppeal pannuven....

(naan paavam, en katchi palam vudunga pleaseeeeeeee)

மு.கார்த்திகேயன் said...

கோபால், என் நெஞ்சுல பால வாத்தீங்க, அம்பியை என் மச்சான்னு சொல்லி.. அடிக்கடி அசின் சொல்லுவா, என் தம்பி, என் தம்பின்னு.. இப்பொ தான் தெரியுது அது அம்பின்னு (ஆஹா..என்ன எதுகை மோனை..அம்பி..தம்பி ன்னு)

ஆனா இப்படியொரு அண்ணன் தனக்கு இருப்பதா எப்பவுமே என் அசின் சொன்னதில்லை.. ஏன் கோபால் உங்க தங்கைக்கும் உங்களுக்கும் சண்டையா?

Shuba said...

my days gops...//btw, ellorum ramgops'a vambukku illukuraanga, avar chinnapaiyan'nu yaaro sonnanga.... he he he
sare'nu support pannuna....
enakku venum enakku venum...
(jst kidding)..// unga rams gopsa yaaaru sir vambukku ilutha...?neenga avara suport panringala pannunga!

enakku soda pudikkathu...enakku soda venam....aammam innoru thadava yaaravathu soda vodaikkrathu pathi pesunga antha bloglayaavathu...supreme courtla case poduven naan!

மு.கார்த்திகேயன் said...

gopal, en post paarunga.. ungalukku oru virunthE vachchirukken

Shuba said...

my days gops...sandaiyaa mudichidaalamm...cos inga....rams gops oda...posts la irukkra nalla vishyatha naam thisai tiruppurom!...MR.Gopalan Ramasubbu...intha fight scene ellathayum edit pannenganna nalla irukkum!

ambi said...

//கல்லிடைக் குறிச்சியின் கட்டித் தங்கமும், கெட்டிச் சட்னியுமான( ஹி...ஹி,ஒரு எதுகை மோனையா இருக்கட்டுமேனுதான்)திருநெல்வேலி அல்வாவுக்கே கேசரி கிண்டி குடுக்கும் திறமைகளைக் தன்னகத்தே கொண்டுள்ள,எங்கள் தென்பான்டிச் சிங்கம்,தமிழர் குலக்கொழுந்து,கொள்கைச் செம்மல்,வீருகொன்ட வேங்கை,வெற்றித் திலகம்,தியாகத்தின் திருஉருவம், நடிகை அஸினின் தம்பியாம்//

அப்படியே புல்லரிச்சு போச்சு! ஆனா கடைசியில அடிச்சான்யா ஆப்பு!

"பாலூட்டி வளர்த்த கிளி, பழம் குடுத்து பார்த்த கிளி"னு உன்னை பார்த்து பாட வெச்சுட்டியே பா!

கண்ணா! கோபாலா! உனக்கு நினைவு இருக்கா? உனக்கு அப்ப இரண்டு வயசு! நீ புதுசா பிளாக் ஆரம்பிச்ச நேரம்! வேணாம் பா! வேணாம்! என்னால இதுக்கு மேல பேச முடியலை. துக்கம் தொண்டையை அடைக்குது!
தமிழ் நாட்டின் மொத்த சோடாவையும் குத்தகைக்கு எடுத்து இருக்கும் சுபாகிட்ட நான் ஒரு சோடா வாங்கி குடிச்சுகிறேன்.
:)
நீ குடுத்தது பின் குறிப்பு இல்லப்பா! எனக்கு அடிச்ச ஆப்பு! :(

btw, i too admire those personalities very much.

ambi said...

ஆயிரம் இருந்தாலும் உன் பக்தியை மெச்சினோம். இந்த பதிவை கண்டு மகிழும் என் எதிர் கட்சி காரர்களுக்கு(syam, karthik) உரிய நேரத்தில் பதில் அளிப்போம்.

said...
This comment has been removed by a blog administrator.
Gopalan Ramasubbu said...

@KRK:chumma eluthunga puthu mappilai sir.Tamil la eluthunga enna ok va ;)

@Shuba:enoda guru nan pugalven,u have any issue madam?

@Sen:i'll explain u in english what the tag is about.

@Anu:Danksungo :)

@Syam:Dankngna :)

@Gops: //kerchief'la oru peria maater'ey undupaa.//

thalaiva ,athu enna matter?sollunga.plsss.

btw ,etho namma "daily oru post" pugal Shuba dialogue ellam pesa virupa padaranga,loose la vidunga thalaiva,pavam pesitu poranga.

Ms.padips:danksungov:).

@Shuba:parthengala Shuba, unga answers paathu Ms.Cong siripa sirikaranga,inimelavathu ozhunga answer panna kathukonga :D hee hee

@//இந்த மாதிரி மொக்க கேள்வி கேக்கறவங்கள பாத்து வர்ற கோவம் தான்//

என் கேள்வியில் என்ன தவறு வேதா அவர்களே?சொல் குற்றாமா? பொருட்குற்றாமா? ;)

@Bharath:athu enna ககக போ??

@Karthik://என் நெஞ்சுல பால வாத்தீங்க//

கவலையே படாதீங்க கார்த்திக், என் குரு இனிமேல் அஸின் பக்கம் திரும்பவே மாட்டாரு.உங்க போஸ்ட் இனிமேல் தான் படிக்க போறேன்.:)

@Ambi://நீ குடுத்தது பின் குறிப்பு இல்லப்பா! எனக்கு அடிச்ச ஆப்பு!//

குருவின் மனதை புன்படுத்தும் சிஷ்யன் அல்ல நான். அஸின் போனால் என்ன,உங்களுக்கு ஆஞ்சலீனா ஜூலி இருக்கிறாள்.hee hee

@All:என் குருவை மற்றவர்கள் கலாய்ப்பதை என்னால் ஒரு காலும் பொருத்துக்கொள்ள முடியாது.hee hee,pavam pa vitrunga avarai.

வேதா said...

//என் குருவை மற்றவர்கள் கலாய்ப்பதை என்னால் ஒரு காலும் பொருத்துக்கொள்ள முடியாது.hee hee,pavam pa vitrunga avarai.//
இதுக்கு பேரு தான்பா பிள்ளைய கிள்ளி தொட்டில ஆட்டி விடறது. சொல்றத சொல்லிட்டு குருவை சமாதானப்படுத்தற மாதிரி ஒரு பிட்ட போட்டுடீங்க:)

Shuba said...

ambi://தமிழ் நாட்டின் மொத்த சோடாவையும் குத்தகைக்கு எடுத்து இருக்கும் சுபாகிட்ட// ambi anna enna anna neenga ippdi kalaaikkalaama?my days gopsukku appu kkuduthu vitten...aaaanaa ambi anna ippdi comment poduveengannu naan nenachu kooda pakkala!

//நீ குடுத்தது பின் குறிப்பு இல்லப்பா! எனக்கு அடிச்ச ஆப்பு! :(// enga anna va kalaaicha gopalan rama subbu oliga!

ambi said...

@subha,
//aaaanaa ambi anna ippdi comment poduveengannu naan nenachu kooda pakkala!//
//enga anna va kalaaicha gopalan rama subbu oliga! //

romba pammuriyee thangachi? enna irunthaalum en shishyanai naan oru pothum vittu kudukka matten. intha kuttaniya pirikkara velai ellaam vendam.

@gops,
//அஸின் போனால் என்ன,உங்களுக்கு ஆஞ்சலீனா ஜூலி இருக்கிறாள்.//

Ayiram irunthaalum asin pola varumaa? :)

Shuba said...

ambi:pongikkonga nalla paasamm pongikkonga!neengalum unga syshyanum!

Bala.G said...

Gopalan,nalla ezhudhi irukeenga....

My days(Gops) said...

@gops:- kerchief matter appuram telling...
@pavam pesitu poranga:-
ok'nga naan vutturen.....

@shuba:- ippa ok va? ramgops nallavar'nu ippavavudhu nambunga..

//my days gopsukku appu kkuduthu vitten...//
sandhosama? nalla irrunga...
btw, sandai'a mudichikilaam'nu ,innum palam vidaama irrukeley?
lol

Shuba said...

my days gops...//@shuba:- ippa ok va? ramgops nallavar'nu ippavavudhu nambunga..//hahahah!!!!!ennatha solla!rams gops,my days gops,and ambi moonu per koodavum kkkaaaaa!

barath said...

//ககக போ??
ithu theriyaatha??????

Karuthukkalai kachithamaaga kavvukireerkaL pongal....endru artham.

நாகை சிவா said...

ஆப்பு, நல்லா பலமா தான் இருக்கு,
அம்பி உங்க பாட்டும் நல்லா தான் இருக்கு, என்ன பண்ணுறது, கிளிக்கு றேக்கை மொளச்சிடுச்சு, ஆத்த வீட்டு பறந்து போச்சு....

உங்களுக்கு பிடித்த ஆறு பெயரில நால்வர் நமக்கு ஒ,கே,
அருந்ததிராயின் பல கருத்துகளுடன் எனக்கு சில முரண்பாடுகள் உள்ளது. சமீபமாக இந்தியா ஒரு ஜனநாயக நாடு கிடையாது, இந்தியாவிற்கு அணுகுண்டு தேவை கிடையாது போன்ற வாதங்களால்.
அவரின் அந்த புத்தகம் படித்தது கிடையாது, ஈ-புக்காக இருந்தால் மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.

பெடரரை பிடிக்கும், இருந்தாலும் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.

Harish said...

Aaru kurippu super...
Sachin padam gummunu edutirukeenga...

senthil natarajan said...

waiting for ur explanation

Usha said...

.தற்போதைய சர்வேயின் படி நம்ம தமிழ்நாட்டில் 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் இருக்காங்களாம். கருவிலேயெ பெண் சிசுக்களைக் கொல்வது, கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போன்ற கொடூர கொலைக் குற்றங்களை எல்லாம் தான்டி, 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் என்ற 93% சம நிலை இருக்கிறது.இதற்கு யார் காரனம்?


sema kelvi! :)) siripu vandhalum yosika vaikara ore urupadiyana kelvi :)

Ram said...
This comment has been removed by a blog administrator.
Ram said...

Bharathi varigal......aaaha...Bharathi ta pudichathu avanoda clarity and yezhuthaanmai...
Valluvara sollave venam....he is all time great..!

Bharathi ya aachiriya pada vaitha 3 pulavargal Valluvan, ilango and Kamban...hmm..thanks for adding Valluvar and Bharathi wordings...

Shuba said...

Please don use nicks!

Gopalan Ramasubbu said...

@Veda:Unga recent post comment section i have explained the reason ;)

@Shuba: danks :)

@Ambi:touch panitenga guru :)

@baka.G:danksngna :)

@gops(md):ok enaku email pannunga ;)

@Barath: ohh i never heard abt this before .

@Naagai siva:

//அருந்ததிராயின் பல கருத்துகளுடன் எனக்கு சில முரண்பாடுகள் உள்ளது//

Contradictions and exchange of views are always good for democracy.:)

@harish:danks dude :)

@Usha : yabbada, kalakitengov.nenga orutharu thaan nan ketta kelviya correct ah purinchukitenga.really happy about it. :)

@Ram:thanks

priya said...

Nice one..aana roger federer sollittenga:( i like Sampras a lot :)

நாகை சிவா said...

Thanks for the E-Book
Cheers

barath said...

பாரதியார் கவிதையில வேண்டும் க்கு பெரிய "ண்" போடுங்க

தி. ரா. ச.(T.R.C.) said...

குருவை கூறுபோட்ட ஆறு நன்றாக இருந்தது.அம்பி kill them all come back alone

Gopalan Ramasubbu said...

@Priya: Sampras enakum pedikum but Roger is more talented than Sampras.:)

@Nagai Siva:No worries Mate:)

@Barath:changed

@T.R.S:Welcome here.Thanks for the comments :)

said...

Enaku piditha aaru prabalangal..
inge..

Abdul Kalam.
Mahatma Gandhi.
Hellen Keller.
Kamban.
Sujatha.
Vishwanandhan anandh.

eppadi? ithu kutti list. enum list neraya irukanga only six enbathaal ivalave.

Apram antha kelvikellam vidai kidaikathu endre nambugiren. :)

Syam said...

sari vera post podunga...ithu Nataamayoda theerpu...theerpu...theerpu..... :-)

(theerpa maathi sollunu solla koodathaa...yenna enaku vera theerpu solla theriyaadu)

Iniyaazh said...

nice doubts.. unga arivu pasia pokka, ennaala mudinchathu:

1) According to physics, all humans are classified under solid state. Heriones in liquid and gaseous state are yet to be discovered. So, can't predict their dialogues as of now.
2)Manirathnam padathuku dialogues ezhutha vekkalaam. "One word" dialogues, athuvum senti illatha ialogues, ezhuthi nondhu povaan :)
3)Girls are more responsible. Oru kerchiefa koodu ivvalavu batharama, paathugaapa vechirukaanga paarunga... appreciate panunga :)
4)India la lovers ku thaan soranai illai.. foreignla entire kudumbathukke soranai illai :)
5)nalla statistics. pengaloda ratio higha iruka kaaranam namba villages la awareness spread panra NGOs and Social workers.
6)I guess most of us feel that 90% of questions will not be asked in exams. 100 questions la selectivea 10 mattum padicha, ippadi thaana aagum :(

said...

Keep up the good work
Laptop computer lamp watches caltrate 600 calcium supplement Lamborghini car picture street series body kit for honda civic Gps + cellphone http://www.watches-8.info/Timexwatcheswholesale.html discount mortgages in britain 3d home Provigil 20alertec Basketball duke michigan state security system springfield missouri http://www.software-store-1.info Visa card payment Reduce fat with mesotherapy solutions

balajay said...

hi ramasubbu
I want the ebook of a god of small things . my mail id is bala.jai@sify.com.will you please send it to me.

said...

This is very interesting site... xenical xenical uk 632 buy link online newmail ru xenical embedded mp3 player fabyana toledo transexual xenical buy cheap online Seo muara how do i increase my credit score fast 10 fastest muscle cars Neurontin suicide side effects lawsuit Sri lanka cheap phone calls How to lose weight and get fit front load wahers and dryers xenical+gebruik

said...

What a great site h26r custom cabinets video cards home interior decor Medication+causing+hair+loss Pornstars drugs Culinary school fresno