உய்யுமோ... உயர்கல்வி?
ஒரு நாட்டின் வளர்ச்சியின்மைக்குப் பல காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றின் கூட்டுவிளைவால் வளர்ச்சிப் பாதையிலிருந்து பின்னோக்கி இழுக்கப்படுகிறது நமது நாடு. குறிப்பாக, கல்வியின்மையின் அளவு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது (35 சதவீதம்) கவலைக்குரியது. இதுவே வளர்ந்த நாடுகளில் 5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
நமது நாட்டின் மக்கள்தொகை ஏறத்தாழ 60 சதவீதம் அளவுக்கு இளைஞர்களைக் கொண்டிருக்கிறது என்பதால் உலகிலேயே மிக இளமையான நாடு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்குரிய கல்வியையும், வேலை வாய்ப்பையும் தர முடியாததால் அதுவே பெரும் சுமையாக உருவாகி இருக்கிறது... இருக்கப் போகிறது!
அரசியலமைப்புச் சட்டத்தின்படி 6 - 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்க வேண்டியதன் பெரும்பகுதி வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. அதிலும் 3 - 6 வயதுடைய குழந்தைகள் சுமார் 7 கோடிக்கு மேல் இருப்பினும், அவர்களுக்கு கல்வியறிவை அளிக்காமல் இருப்பது நமது நாட்டுக்குப் பெருத்த இழப்பைத்தான் ஏற்படுத்தும்.

தொடக்கக் கல்வியில் அரசுகள் எடுத்துக்கொண்ட அக்கறை மிகமிகத் தாமதமானது என்பது ஒருபுறமிருக்க, எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை என்பதே உண்மை! (முடிந்தவரை சுமையை மாநில அரசுகளின் மீது இறக்கி வைக்கவே மத்திய அரசு முயல்கிறது). இன்னமும் 40 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் கட்டடங்கள் இன்மையாலும், 20 சதவீதம் பள்ளிகள் ஒரே ஒரு அறை கொண்டதாகவும், 39 சதவீதம் பள்ளிகள் கரும்பலகை கூட இல்லாததாகவும், 35 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும் உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்கான மொத்த பட்ஜெட்டின் பங்கீட்டில் தொடக்கக் கல்விக்கான பங்கு 58 சதவீதமாக இருந்தது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலம் வரை இந்த ஒதுக்கீடு மெல்ல மெல்ல குறைந்து, பின்பு மீண்டும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 66 சதவீதமாக வளர்ச்சி பெற்றது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 9.5 சதவீதமாக இருந்தது.
இதே காலகட்டத்தில் 5-ம் வகுப்பிற்குப் பிறகு 35 சதவீதம், 8-ம் வகுப்பிற்குப் பிறகு 53 சதவீதம், 10-ம் வகுப்பிற்குப் பிறகு 63 சதவீதம் என பள்ளியை விட்டு மாணவர்கள் இடையிலேயே வெளியேறும் விகிதம் உயர்ந்தது.
பெண் குழந்தைகளின் இவ்விகிதம் இன்னும் சற்று அதிகமாகும். இவ்விகிதங்களைக் கட்டுப்படுத்த இன்றைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மூலபலம் போதிய அளவில் ஒதுக்கப்படும் நிதி அளவாக மட்டுமே இருக்க முடியும்! ஆனால் இன்றளவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே கல்விக்கான ஒதுக்கீடு இருந்து வருகிறது. கல்விக்கான பிரத்யேகமான வரிவிதிப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இருந்தாலும் அது முழுமையாகச் செலவழிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
உயர்கல்விக்கு போதியஅளவு நிதி ஒதுக்கப்பட்டால்தான், "அனைவருக்கும் கல்வி'', "உரிய அளவில் உயர்கல்வி'' என்ற முழக்கங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இன்றைய நிலையில், உயர்கல்வி மாணவன் ஒருவனுக்காக சராசரியாக ரூ. 18,270/-மட்டுமே நமது நாட்டில் செலவிடப்படுகிறது. இது மிகமிகக் குறைந்த செலவினமாகும். இந்தோனேஷியாவில் ரூ. 30 ஆயிரம் மலேசியாவில் ரூ. 53 ஆயிரம் பிலிப்பின்சில் ரூ. 28 ஆயிரம், சீனாவில் ரூ. 1.22 லட்சம், பிரேசிலில் ரூ. 1.79 லட்சம், ஜப்பானில் ரூ. 2.17 லட்சம், பிரிட்டனில் ரூ. 3.82 லட்சம், அமெரிக்காவில் ரூ. 4.33 லட்சம் என்ற அளவில் உயர் கல்விக்கு செலவிடும் நிலை ஒப்பு நோக்கத்தக்கது.
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் உழைப்பதற்குத் தயார் நிலையிலுள்ள உழைப்பாளிகளை போதிய பயிற்சியின்மை மற்றும் கல்வித் தகுதியின்மை என்ற நிலைகளில் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இது நமது நாட்டைப் பொறுத்தவரை கண்கூடு. மனித வளர்ச்சிக் குறியீட்டில் உலகின் 174 நாடுகளின் தர வரிசையில் 124-வது இடத்தைப் பிடித்துள்ள (2004-ஆம் ஆண்டு கணிப்பு) நாம், மேலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்படும் அவலம் உள்ளது. எனவே 14-23 வயதிற்குட்பட்ட பெரும்பாலானோர்க்கு உரிய தொழிற்பயிற்சி அல்லது உயர்கல்வி தரப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்.

இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் ஒதுக்கீட்டிற்காக, மத்திய அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்., போன்ற சுமார் 20 நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களை அதிகரிப்பதற்கு மட்டுமே அடுத்த மூன்றாண்டுகளில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் கல்வி' திட்டத்தை மேலெடுத்துச் செல்லத் தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவும் அவசியமும் இதிலிருந்து ஓரளவிற்குப் புலனாகும்!
உயர் கல்விக்கான வயது வரம்பான 17 - 23-ல் இன்று உயர் கல்வி பெறுவோரின் அளவு சுமார் 8 சதவீதம் மட்டுமே! தேசிய வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் எந்தவொரு நாட்டிலும் இவ்விகிதம் 13 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டியது அவசியம். நமது நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால் இவ்விகிதம் குறைந்தபட்சம் 20 சதவீதம் என்றாவது அமைய வேண்டும் என்கின்றனர் பொருளாதார மேதைகள்.
சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் கடும் போட்டியால் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க, நம் நாட்டில் உயர்கல்வியைத் திட்டமிட்டு உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது! 112 கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 105 லட்சம் மாணவர்களே உயர்கல்வியை எட்டுவதும், 1.4 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வதும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய மக்கள்தொகைப் பெருக்க நெருக்கடியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
உயர்கல்வி முற்றிலுமாகத் தனியாருக்கே தாரை வார்க்கப்படுகிற நிலை; 8 சதவீதமாக உள்ள உயர்கல்விக்கான மாணவர் விகிதம் கட்டாயமாக உயர்ந்தே ஆக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் கடைபரப்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அணிவகுப்பு; உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் முறைகேடுகள்; பல்கலைக்கழக ஆட்சிமுறை நிர்வாக கோணல்கள்; அரசுகளின் பாரா முகம் போன்ற பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்திருக்கும் நமது உயர்கல்வி, வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு ஆருடம் தேவையில்லை!
1.நால்வரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கும் கீழே உழன்று கொண்டு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இல்லாத நிலையில், அனைவருக்கும் கல்வியை அளிக்கப் போகிறோமா?
2.உரிய வயதில் உள்ள ஐவரில் ஒருவருக்காவது உயர்கல்வியைச் சுவைக்கும் வாய்ப்பை அளிக்கப் போகிறோமா?
3.கல்விக்கான செலவினம் நாட்டின் வருங்காலத்திற்கான முதலீடு என்ற உணர்வுடன் 2020-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதார வல்லரசாக உயரப் போகிறோமா?
இத்தகைய எண்ணற்ற வினாக்களுக்கு விரைவில் விடை காணத்தானே வேண்டும் நாம்!
நன்றி-தினமணி

9 comments:
நான் தான் firstu :-)
ரொம்ப சரியா சொன்னீங்க...யோசிக்க வேண்டிய விசயம்...அனைவருக்கும் கல்வி அவசியம்...அதை முதலில் அரசு அமல் படுத்த வேண்டும்...அத விட்டுட்டு இலவச டி.வி அது இதுனு...அப்புறம் மக்களும் குழந்தைகளுக்கு கல்வி அவசியம்னு உணரனும்....
Inthiya kku irukkira 1008 problem la ithuvum onnu...:-(
Namma thaann IIT/IIM kooda vidalaye..."ida-othukkeedu" pannettom la...apram yenna kavalaiya vidunga...:))
That was a very nice post which was fact oriented :) Hard to find such posts..Applause for the great effect :)
I feel, all these problems which India faces are going like a loop. Even after years or even before years the state of the issues are the same. There is not much notable progress. And neither the individual nor the organizations are able 2 enforce their ideas even if they have any. Again the loop ends only on the shoulders of the politicians.
Practically speaking, with self centered people who finish their education in India and fly away and get settled else where, issues that India faces can never come to an end. Of course its one's own wish and they are not to be blamed as well. On the above there are many other reasons which is indirectly pushing people abroad. With so many holes in the society, things are like, 'will it ever be solved?'
On a serious note, if one wants to do something about all these,he/she is helpless. It either will not have constant resource or it will not reach the proper destination.
Neriya facts and figures :-)
Valid points..Education is very important..and syam sonna maadhiri both government and the individual's parents should realize this..
அரசு என்னதான் திட்டம் போட்டாலும் மக்களுக்கும் கொஞ்சம் ஆர்வம் வேணும் கல்வியின் அவசியத்தை அவங்க புரிஞ்சு கிட்டாதான் கல்வியில் மேம்பாடு அடைய முடியும். நல்ல கருத்துள்ள பதிவு கோபாலன்.
ஆனா கொஞ்சம் புள்ளி விவர கணக்கு அதிகாயிருக்குங்க :)
Naan vandhadhu romba late gops...So first apologies....
Very true & a sensible post.
And the DATA ,FACTS & FIGURES u have given out are really shocking... I was under the impression that there is a good number of people who are getting their education properly...atleast till high school level. But this is shocking....
TOP LEVELERNDHU THERE IS PROBLEM-CORRUPTION..ADHU ELAAM SERNDHU Ipdi edhirgalathiye saagadikudhu. And more over- corruption & bribe...idhu elam vayadadhudrudhu. So evan dhan velaya seyuvan?? Unless we have living gandhi's & bharathi......
Leadership quality ilama..verum panam kaasu pugazh -rasigargal (yes- am targeting the hero's who wants the chair. Oru director'nalavadhu kadhai ezhudhunadhala ok..but kaasu vangi solra mari nadikra alunga elaam nambi nata kuduka ready ORU KOOTAMEY!!Ipdi adi mutal thanam irukrapo yaru kapatha mudiyum??) vechu they become leaders - but do not know to LEAD!!
Unless the govt has its special wing that is only gonna concentrate on this & deal away with any cheating in the respective deptmts - the scale will remain small....
Oru pakkam mela poikutey irukum..inoru pakkam keelzha poikutey irukem....any country would develop only when it puts a balance between the two!
Romba yosikra vekra vishayam dhaan gops..
Naan ivlo late'a vandhadhuku sorry :)
I wish this condition changes & we have an educated india => less corruption!
Seekram vidai kidaikumnu nambuvom!!!
கொபாலன் அவர்களே:
உங்களின் இணையத்தில் இதுவே எனது முதல் வருகை. மிக விளாவரியாக நிரய விஷயங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் பதிப்பை கேள்விகளுடன் முடித்திருக்காமல் சில விடைகள் பதித்திருந்தால் இன்னமும் வலுவான பதிப்பாக இருந்திருக்கும். எல்லா விஷயங்களுக்கும் அரசை நம்பி இருக்காமல், கல்வியை நமது கையில் எடுத்துக்கொண்டு பரிமாரும் எண்ணம் நம்மைப்போன்ற இளைஞர்களுக்கு வரவேண்டும். உலகிலேயே இளமையான நாடாக இருப்பதனால் பெருமை மட்டும் கொள்ளாமல், அதை சரியாக உபயோகத்தில் ஆழ்த்தினால் நிச்சயமாக 2020 ஆண்டில் மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக நம் இந்தியா அமையும். ஒரு மனது கொண்ட இளைஞர்கள் ஒன்றாகச்சேர்ந்து ஒரு குரிக்கோளை அடைய முற்பட்டால், முடியாததென்பது கிடையாது, கேள்விகளுக்கும் இடம் கிடையாது.
மன்னிக்கணும். முதல்ல இந்த புள்ளி விவரங்கள் எவ்வளவு தூரத்துக்கு உண்மை?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
இல்லயா? அப்படியே உண்மைனு எடுத்துக்கிட்டாலும் நம்மள்ள ஒருத்தர்... ஏன் ஒருத்தர், எல்லோருமே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி ஆகணும்னு உண்மையா நினைச்சு செயல்பட்டா, அடுத்த நிமிஷாமே இந்தியா நல்லா ஆகிடுமே.
வாழ்ந்து கெட்ட நாடுயா இது. இதுக்கு மத்தவங்கள பாத்து தெரிஞ்சுக்க தேவை இல்லை. வள்ளுவரோட குறள் ஒண்ணே போதுமே நாம கடைபிடிச்சா முன்னுக்கு வரதுக்கு.
மாத்தி மாத்தி இதே மாதிரி இந்தியாவ பத்தி குரைகள் சேந்துகிட்டேதான் இருக்கே ஒழிய நம்மள்ள ஒருத்தர் கூட நம்மால முடியக்கூடிய ஒரு செயலயும் செய்யரதா தெரியலை அத பத்தி எழுறதாவும் தெரியலை.
நம்மள்ள பலபேர் ஒரு வேலய செய்யச்சொன்னா நைசா நழுவிடுவாங்க. பேசசொன்னா கவலை இல்லை. நம்ம நாட்டு பாரம்பர்யம் அப்படிப்போல.
ஒரு பாரதியும் ஒரு காந்தியும் இனிமேதான் பொரக்கணுமா? ஏன் நாம ஒரு பாரதிய இருக்க கூடாது. 100 ஆண்டுகளுக்கு முன்னால காந்தியும் பாரதியும் இப்பொ இருக்கர INTELLECTUALS பொல உள்ள ஆளுங்களா இருந்தாங்க? இதவிட மோசமான மக்கள் அப்போ. சுருக்கமா எட்டப்பன் பரம்பரை மக்கள்.
அவங்க செஞச ஒரு விஷயம் என்ன தெரியுமா? உண்மையான தியாகம். நம்மில் எவ்வளவு பேருக்கு தியாகம் செய்ய மனசு வரும்?
இந்த நாடு பெருமை படவதர்க்காக நாம் தியாகம் செய்ய முற்பட்டல்!!!!!??????
100 ஆண்டுகளுக்கு முன்னால பேசினாலே சிரைதண்டனை. இப்போ blog மேல blog எழுதலாம். யாராலயும் ஒண்ணுமே செய்யமுடியாதே.
நம்ம தியாகம் பண்ணவேண்டியடு என்ன? வீட்டயா? வேலயயா? இல்ல நாம போட்டுகிட்டு இருக்கர துணியயா? எதுவுமே இல்லை.
நம்மள்ள எல்லோரும் இன்னையிலிருந்து இந்தியா தலை குனியும்படியான எந்த செய்தியயும் ப்ரப்ப மாட்டோம். அப்படி பரப்பினால் அதர்க்கான பதிலை தருவதொடில்லாமல் செய்தும் காட்டி விட்டு, இப்படி ஒரு நிலமையிலிருந்த நாட்டை இப்படி ஒரு நிலமைக்கு மாற்றினோம்னு மார்தட்டி சொல்லுவோம்னு சபதம் போடணும்யா!!!
செயய முடியுமா? நம்ம நாட்டின் பெருமைகளை தேடித்தேடடி கண்டுகொண்டு அதை பரப்ப முடியுமா? நாம நம்மள பத்தி வெக்கமில்லாம தைரியமா பேசிக்கிர நாளை சீக்கிரத்தில் கொண்டுவருவோமா?
பிகு: வழிப்போக்கனாக நான் இருக்க விரும்பவில்லை. வழி தெரிந்து வழி சொல்லும் "போக்கனாக" இருக்கவே ஆசை படுகின்றேன். உங்களில் பலருக்கு கோபம் வரலாம். ஆனால் சற்றே சிந்தியுங்கள். உங்களுக்கு தெளிவு கிடைக்கும். வநதே மாதரம்.
Post a Comment