ஆடதடா,ஆடதடா மனிதா!
காலம்- 1998- 2002
நேரம்- மாலை
நாள்-(வெள்ளி,சனி,ஞாயிறு)
இடம்- எங்க வீடு.(Tirupur)
மழை வருது, குளு குளுனு இருக்குது, வடை சுடலாம், இல்ல பொரி வருக்கலாம்னு தோனுதாம்மா உனக்கு?- நான்
நீ வந்தவுடனே இப்படி எதாவது கேப்பனு எனக்கு தெரியும்,உளுந்து அரைக்கப் போறேன்.கொஞ்ச நேரம் டி.வி பார்த்துட்டு இரு, அதுக்குள்ள ரெடி ஆய்டும்.-அம்மா
ம்ம் சரி.
(15 நிமிடம் கழித்து)
டேய் தம்பி,
என்னம்மா வேனும் உனக்கு?கடைக்கெல்லாம் போக சொன்னீன்னா நான் போக மாட்டேன்.
நீ கடைக்கெல்லாம் போகவேன்டாம்;
அப்பறம் எதுக்கு கூப்பிட்ட
நம்ம வீட்டு டி.வி. ரிமொட்டுக்கு(T.V.remote) கால் இருந்துச்சுன்னா வார வாரம் வெள்ளிக்கிழமை எங்காவது போய் ஒளிஞ்சுக்கும் தெரியுமா? எதுக்குடா இப்படி சானல் மாத்திட்டே இருக்கற?
ஆமாம்மா, கால் இருந்துச்சுன்னா ஒளிஞ்சுக்கும், வாய் இருந்துச்சுன்னா அழுகும்னு ஒரே டயலாக் உடாத, இதுகெல்லாம் நோபல் prize தரமாட்டாங்க, இன்னிகாவது வடைல உப்பு,காரம் எல்லாம் சரியா போடு.
(பத்து நிமிடம் கழித்து)
இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சட்னி மிக்ஸீல(Mixi) அரைகறேன்டா?
அப்டியா?,அப்ப நீயே சாப்பிடு,எனக்கு வேன்டாம்.
மழை வருதுடா, நழைஞ்சுருவேன்.. .
இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி, மழைல நலைஞ்சுட்டே மல்லிப்பூ,ஜாதி மல்லினு எல்லா பூவும் பறிச்ச?அப்ப வெய்யிலா அடிச்சுது? ஆட்டாங்கல்லு இருக்கற இடத்துக்கு போறதுக்குல்ல நீ ஒன்னும் பெருச நனையமாட்டே. குடை வேனா எடுத்துட்டுப்போ..
ஆட்டாங்கல்ல அரைக்க நேரம் ஆகும்டா
லேட் ஆனா பரவாயில்லை, அப்பா கோயம்புத்தூர் போய்ருக்காங்க,லேட்டாதான் வருவாங்க.
உன்ன கட்டிட்டு எந்த பொண்ணு கஷ்டப்பட போராளோ?- அம்மா
என்னது?
ஒன்னும் இல்ல சாமி. இன்னிக்கு டின்னர் உப்புமா செய்யுட்டுமா?
இனிமேல் நான் hostel la யே இருந்துக்குவேன், ஆறு மாசத்துக்கு ஒரு தடவ semester leave la தான் வீட்டுக்கு வருவேன்.
சரி என்ன செய்யறதுன்னு சொல்லு?
ம்ம்ம்ம்...தேங்காய் பனியாரம்,சாம்பார்.
வடைக்கு சட்னி அரைக்கும் போது,பனியாரத்துக்கும் சேர்த்து அரைச்சுடு.
(சாப்பிடும் போது)
ஏம்மா, நீ எத்தனை வருசமா சமையல் செய்யற,உப்பு கரெக்டா போடவே மாட்டியா?.
உப்பு அதிகமா சேர்த்துக்கக் கூடாதுடா- அம்மா
ஆமாம், இதையே திருப்பு திருப்பி சொல்லு.
_______________________________________________________________________
காலம்- 2006
நேரம்- மாலை
நாள்-(Week days)
இடம்- எங்க வீடு(Melbourne)
மாப்ள, இந்த winter வந்தாவே செம குளிருடா - கார்த்திக்
பசிக்குதுடா,எதாவது சமைப்போம்.- நான்
எதாவது சீக்கரமா செய், 3 course meals எல்லாம் Weekend la வெச்சுக்கோ.-கார்த்திக்
3 course meals செய்யவெல்லாம் mood இல்ல மாப்பு. quick ah எதாவது செய்வோம் -நான்
(After cooking)
"டேய், கிச்சடி சூப்பர்"- கார்த்திக்
"நாயே!இது கிச்சடி இல்ல,உப்புமா"- நான்
ஓ! அப்டியா?-கார்த்திக்
தக்காளி போட்டாதான்டா கிச்சடி,தக்காளி போடலீன்னா அது உப்புமா- நான்
எதோ ஒன்னுடா, இதுக்கு சட்னியோட சாப்டா நல்லா இருக்கும், super combo.-கார்த்கிக்.
ம்ம்ம்ம் ஆமாம்
நீதி- ஆடதடா ஆடதடா மனிதா, நீ ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா!