Thursday, August 24, 2006

கல்விக்குக் குறைந்த நிதி!


மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையிலான குழு பரிந்துரைத்த "கல்வி உரிமை வரைவு மசோதாவை'ச் சட்டமாக்கி அமல்படுத்தினால் கூடுதல் நிதி நெருக்கடி ஏற்படும் என்ற கருத்தின் அடிப்படையில் சட்டமியற்றி நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் 86-வது அரசியல் சாசனத் திருத்தம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படைக் கல்வி உரிமையை மறுத்து இந்த நாட்டின் கோடானு கோடி மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது.

கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 10 சதவீதமாகவும், மாநில அரசின் ஒதுக்கீடு 30 சதவீதமாகவும் உயர வேண்டுமெனத் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக் கோரிக்கைகளின் நியாயங்கள் இன்னும் உணர்ந்து கொள்ளப்படாமலே உள்ளன.

ராணுவச் செலவுக்குத் தன்னுடைய பட்ஜெட்டில் 15 சதவீதத்திற்கும் மேல் பணம் ஒதுக்கித் தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம், எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவீதத்தைத்தான் ஒதுக்குகிறது. இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதியைக் காட்டிலும் ஒட்டுமொத்த கல்விக்காக ஒதுக்கும் நிதி குறைவு.

இதனால் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இதிலும் பள்ளிப்படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.

1951-ல் இருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கேற்ப கல்விக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப்பள்ளிகளாவது இந்தியாவில் தற்பொழுது இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதன் எண்ணிக்கை 2005-ல் சுமார் 5,81,000 மட்டுமே.
விளைவு, தற்பொழுது நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை (கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அல்ல) 65 சதவீதமாகத்தான் உள்ளது. அதாவது உலகில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளனர்.

"கல்வி பற்றிப் பேசும்பொழுது ஒரு சமுதாயத்தின் முழு கட்டமைப்பைப் பற்றியும் அதன் முழுத்திட்ட அமைப்புகளைப் பற்றியும் பேசுகிறோம்' என்ற லத்தீன் அமெரிக்க சிந்தனையாளரான பவுலோ ஃபிரைடேவின் வார்த்தைகளில் உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொண்டால்தான் இளந்தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடு என்ற பார்வை நமக்கு வரும்.

இவையெல்லாம் உணரப்பட்டு கல்வியறிவு இல்லாத மக்களை நாட்டின் சுமைகளாகக் கருதி அதை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யாதவரை 9 சதவீத அல்லது 10 சதவீத வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்கும்.

நன்றி- தினமணி.

18 comments:

Syam said...

ஆகா குருவுக்கும் சிஷ்யனுக்கும் என்ன ஒரு வித்தியாசம்...குரு எப்ப பார்த்தாலும் ஜிகிடி மேட்டர் பேசிட்டு இருக்கார்...சிஷ்யன் நாடு பத்தி கவலை பட்டுட்டு இருக்கார்...

நான் தான் பர்ஸ்ட்...புளியோதரை போர் அடிச்சு போச்சு...ஒரு கங்காரு குட்டி பிரஸண்ட் பன்னுங்க :-)

ambi said...

nice post gops, very informative. i'm sure you might have done all groundworks and posted in white hat thinking style. kudos. :)

//குரு எப்ப பார்த்தாலும் ஜிகிடி மேட்டர் பேசிட்டு இருக்கார்...சிஷ்யன் நாடு பத்தி கவலை பட்டுட்டு இருக்கார்...//
@syam, we used to balance our gurukulam. Life shud be balanced U know! wait, me too going to write serious matters. time constraints.

gangaroo kuttiya mugiluku vilayada kudu, nee briyaani panni saptraatha. :)

ambi said...

btw, gops check the spelling of thinamani(in prev post also). it shud be தினமணி! rite..? :)

Butterflies said...

i donno why the govt dosnt concentrate on the most imporatant isssues...They should be more concerned on the education issues than anything else.....donno wat to say!!!!

If we had educated people in politics then we wouldnt have this problem!

ambi said...

//If we had educated people in politics then we wouldnt have this problem!//
@subha, sorry subha, i disagree with this statement. our PM manmohan singh is 3 ph.ds holder(not sure) including harward univ.
planning commission ministry Mante singh aluvalia is also well educated. need not to mention abt p.chidambaram's edctn background.they've the power. They shud apply their thoughts.

Butterflies said...

ambi:they do apply their thoughts....for thier personal benefits....esp chidambaram..list la sonna...avar image total damage

Marutham said...

//எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவீதத்தைத்தான் ஒதுக்குகிறது. இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதியைக் காட்டிலும் ஒட்டுமொத்த கல்விக்காக ஒதுக்கும் நிதி குறைவு.
//

Aha........... Enna kodumai idhu??!!

Unknown said...

nalla psot...but idha padikum bodhu kashtma thaan iruku....indha maadhiri prachanaiku ellam eppo theervu kedaikumnu theriyala..

Syam said...

//we used to balance our gurukulam//

ambi meesaila mannu ottala thaana :-)

அனுசுயா said...

கல்விக்கு அரசு நிதி ஒதுக்காதது ஒரு குறைதான், ஆனால் அதைவிட படித்த நம் போன்றோர் அடுத்த தலைமுறை கல்விக்கு என்ன செஞ்சிருக்கோம்னு கொஞ்சமாவது யோசிக்கணும். இந்த வாரம் விகடன்ல வாழைனு ஒரு அமைப்பை உருவாக்கி நம் போன்ற இளைஞர்கள் கிராம மக்களின் கல்விக்கு உதவி செய்யறாங்க. அப்படி படிச்சவங்கள்ள பாதி பேர் உதவி செஞ்சாலே நாடு முன்னேறும்னு நெனக்கிறேன்.

மு.கார்த்திகேயன் said...

இப்படியொரு நல்ல பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு.. ஆனா ஷ்யாம் சொல்றது மாதிரி உங்களுக்கும், அம்பிக்கும் ஏகப்பட்ட வித்யாசம் இருக்கே..எப்படி?

நாகை சிவா said...

தலைவா!

குறைத்து நிதி ஒதுக்கி விட்டார்கள் என்று வருத்தப்படுவதா, இல்ல இந்த நிதியையும் சரியான முறையில் பயன்படுத்தாமல் இருக்க போகின்றார்கள் என்று ஆதங்கம் படுவதா என்று தெரியவில்லை.

அனுசுயா!
நீங்க சொல்வது சரி தான். படித்தவர்கள் கல்விக்காக எதாவது செய்ய வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து எதிர்காலத்தில் பல ஆக்கங்கள் செய்யும் எண்ணங்கள் உள்ளது. தற்சமயம் முடிந்த அளவு பொருளாதார நிலையில் பின் தங்கிய மாணவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளை செய்து கொண்டு இருக்கிறோம். இது விரிவடைய வேண்டும்.

Syam said...

ன்ணா டைம் கிடைக்கும் போது அப்படியே நம்ம வூட்டு பக்கம் பந்துட்டு போங்க :-)

smiley said...

enna panna? poonai kaluthula mani kattara kathayay irukku. ithay poi govt kita yaru solla, very informative post :)

பரத் said...

யோசிக்க வேண்டிய விஷயம்.செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ரொம்ப நாளா ஆளைக் காணம் பிஸியா?

ruby said...

ennada nalla thane da irundhae..koncha naal munnala varaikum...yellam aval seyal...

KC! said...

enaku school-la pesara speech nyabagam varudhu he he. Ivalo porupu agadhu pa ambi sishyankellam ;)

Ms Congeniality said...

thought provoking post..