Sunday, August 23, 2009

இந்திய நீதித்துறை (Indian Judicial System)


என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில செய்திகளைப் படிக்கும்போது, விசயத்தின் தாக்கம் காரணமாக மயக்கமோ அல்லது பேச்சுமூச்சற்ற நிலையையோ அடையும் காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன்..அதற்கு நிகரான ஒரு சம்பவம் நேற்று இந்துவில் வந்த இந்த தலையங்கக் கட்டுரையைப் படிக்கும்போது நிகழ்ந்தது.

இந்திய சிறைகளில் தற்போது அடைக்கப்பட்டிருக்கும் 70% பேர் குற்றம் சுமத்தப்பட்டு தீர்ப்புக்காக சிறையில் காத்திருக்கும் கைதிகள் (undertrials awaiting justice). இதில் திகிலூட்டும் செய்தி என்னவென்றால், சமீபத்தில் நடந்த முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருப்பதுதான்.

Prime Minister Manmohan Singh told the conference of Chief Ministers and Chief Justices, many of them have been in jail “for periods longer than they would have served had they been sentenced.”

அதாவது, இந்த நீதிக்காக காத்திருக்கும் கைதிகளில் பலர், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்திருந்தால் எவ்வளவுகாலம் சிறையில் அடைபட்டுக்கிடப்பார்களோ அதைவிட அதிகமாகவே சிறையில் இருக்கின்றனர். குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாமல்..இதைப்படித்த போது எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ன சொல்கிறார் என்றால்,
Chief Justice A.P. Shah said in the report that "it would take the court approximately 466 years" to clear the pending 2,300 criminal appeals cases alone.

நீதித்துறையின் மிகமுக்கியக் குறிக்கோளாக அம்பேத்கர் சொன்னது..பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது. தற்போதைய நடைமுறை அதற்கு முற்றிலும் கோனலாக உள்ளது.

Thursday, August 13, 2009

மொகலாய அரசியலும்..சமகால அரசியலும்!


The Mughal World புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது சமகால அரசியல் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் சில அரசியல் நிகழ்வுகள் சிலவற்றை வாசித்தேன். அதைப்பற்றிய சில குறிப்புகள்.

மொகலாயப் பேரரசில் மன்னரின் மூத்தமகனுக்கே பேரரசராக முடிசூடப்படும் வழக்கம் இருந்துவந்துள்ளது. சமகால அரசியலில் எனக்கு இங்கே நினைவிற்கு வந்த பெயர்கள் ..நவீன் பட்நாயக், குமாரசாமி, உமர் அப்துல்லா, ராகுல் காந்தி
( பேரரசர் இன் வெயிட்டிங்) ஆகியோர். கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் நினைவுக்கு வருவது..சஞ்சய் காந்தி.அவருக்குப்பின் ராஜீவ், பரூக் அப்துல்லா, பிஜூ பட்நாயக்.

தற்போது உள்ள அனைத்து அமைச்சுப் பெருமக்களும் குறுநில மன்னர்கள்தாம்..அந்தவகையில் பார்த்தால் ஏகப்பட்டபேர் இந்த லிஸ்டில் தேறுவார்கள்..சுறுக் லிஸ்ட்: மாதவராவ் சிந்தியா--> ஜோதிராத்ய சிந்திய..ராஜேஷ் பைலட்--> சச்சின் பைலட்..பால் தாக்ரே---> உத்தவ் தாக்ரே..முரளி தேவ்ரா---> மிலிந் தேவ்ரா..சரத்பாவருக்கு ஆன் வாரிசு இல்லை அதனால்..அவரின் மகள் சுப்ரியா சூலே. ( இந்த லிஸ்ட்டில் இன்னும் நிறைய உருப்படிகள் தேறும்..அதுவும் மாநில அரசியலில் ஏகப்பட்டது தேறும்.. யோசிக்க நேரம் இல்லை..மிஸ்ஸான மினிஸ்டர்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..இங்கே சேர்த்து விடுகிறேன்.

சிலசமயம் மொகலாய அரசியலில் அண்ணன்,தம்பிக்கு இடையே அரசாட்சியை குறிவைத்து பெரும் போர் மூழுமாம். காதல் மன்னன் ஷாஜகான் கூட தன் சகோதர..சகலப்பாடிகளை எல்லாம் கொன்றுவிட்டுத்தான் அரியனையைக் கைப்பற்றினாராம். பாபரும், ஹுமாயுனும் தன்னுடைய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தன் வாரிசுகளுக்கிடையே அரசர் பதவிக்குப் போர்வரமல் தடுக்க..தனது சமஸ்தானங்களை (Kingdom?) மகன்களுக்குப் பிரித்துக்கொடுத்தார்களாம். அவர்கள் எழுதிவைத்த குறிப்பு எதையும் கலைஞர்.கருணாநிதி படித்தாரா என்று தெரியாது..ஆனால் பக்காவாக சமஸ்தானங்களைப் மூத்த மகன் அழகிரிக்கும்..இளைய மகன் ஸ்டாலினுக்கும் பிரித்துக்கொடுத்துவிட்டார். ஒளரங்கசீப் தன்னுடைய உயிலில் தன் சமஸ்தானத்தை அனைத்து மகன்களும் சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பம்தெரிவித்திருந்தாராம்..ஆனால் அவரின் மகன் மூஜாம் வாரிசுப்போரில் வென்றது தனிக்கதை!

ஏறக்குறைய அனைத்து மொகலாய அரசர்களும் தத்தமது மகன்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாம்..அக்பர்,ஜகாங்கீர்,ஷாஜகான்,ஒளரங்கசீப் இதில் அடக்கம். நம் வரலாற்றுப் பாடப்புத்தகதில் நல்லமனிதராகச் சித்தரிக்கப்படும் அக்பர்கூட அரசர் பதவியைப் பாதுகாக்க தன்னுடைய உறுவினன் அபுல் கசிம் என்பவரை கொன்றாராம். ஷாஜகானின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்த முகம்மது சாலிக் கம்பு இப்படிச் சொல்கிறார்..” It is enitirely lawful for great sovereigns to rid this mortal world of the existence of their brothers and other relations, whose anihilation is conducive to the common good". இதைப் படிக்கும் போது எனக்கு இங்கே கொஞ்சம் ஸ்லைட்டா தயாநிதிமாறன்...மதுரை தினகரன் ஆபீஸ் எரிப்பு..இரண்டு பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்தது எல்லாம் நியாபகத்திறகு வந்தது!

Tuesday, August 11, 2009

மொகலாயர்களின் Bureaucracy.


மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தின் போது அரசாங்கப் பணிக்கு ஆட்களை நியமிக்கும் முறை ( bureaucracy ) குறித்து அக்பரின் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய அபுல் பசலின் குறிப்புகளில் இருந்து ;

1. அரசாங்கப் பணிக்கு அரசர் ஒருவரை நியமிக்கும் போது அந்த ஆணை முதலில் அரசவைக்குறிப்பில் பதியப்படுகிறது.

2. அதன்பின் இந்த அரசவைக்குறிப்பு சிலரால் சரி பார்க்கப்பட்டு பணிநியமன ஆணை தயாரிக்கப்படுகிறது.

3. இந்தப் பணிநியமன ஆணை மூன்று அரசாங்க அலுவலர்களால் தனித்தனியே சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

4. அதன்பின் இந்த ஆணை நகல் எடுக்கும் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அங்கே பணிநியமன ஆனையின் சுருக்கமான வடிவம் தயாரிக்கப்படுகிறது. இந்த வடிவம் நான்கு வெவ்வேறு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது.

5. உறுதிசெய்யப்பட்ட ஆணை, அமைச்சர் ஒருவரால் சீல் செய்யப்பட்டு ரானுவ அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு பணிவிபர அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

6. இந்த பணிவிபர அறிக்கையை சமர்ப்பித்தவுடன், ஊதிய அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த ஊதிய அறிக்கை பல ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டபின் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது.

7. நிதி அமைச்சகமும் தன் பங்கிற்கு பணிவிபரம் மற்றும் ஊதியவிபரங்களை பல ஆவணங்களில் பதிவு செய்தவுடன், தனி அறிக்கை ஒன்றை மன்னருக்கு அனுப்பி வைக்கிறது.

8. மன்னர் இந்த அறிக்கையை படித்து ஊதிய விவரங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பார். அதன்பின் புதிய ஊழியறுக்கான ஊதியப்படி அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

9. இந்த ஊதியப்படி அறிக்கை மறுபடியும் நிதியமைச்சர், ஊதிய ஆனைத்தலைவர் மற்றும் ரானுவ கணக்காளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

10. இந்த ஊதிய அறிக்கையின் படி ரானுவ கணக்காளரால் ஊதிய ஆணை தயாரிக்கப்படுகிறது.

11. இந்த ஊதிய அறிக்கையில் வெவ்வேறு அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களின் ஆறு கையெப்பங்கள் வாங்கப்பட்டு அரசு கருவூலத்திற்கு அனுப்பப்படுகிறது.

12. அரசு கருவூலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் ஆறு கையெப்பங்களும் சரி பார்க்கப்பட்ட்டு ஊதியம் பெறுவதற்கான ஆனை வெளியிடப்படுகிறது.

***********************

பேரரசரின் ஆனை அமல் படுத்தபட 19 அடுக்குகளைக் கடந்து செல்லவேண்டுமாம்.ஒளரங்கசீப் தன்னுடை ஆணைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டு அடிக்கடி மனம் வெதும்பினாராம்.

Source : The Mughal World By Abraham Eraly.(Page 250-251)