Thursday, August 13, 2009

மொகலாய அரசியலும்..சமகால அரசியலும்!


The Mughal World புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது சமகால அரசியல் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் சில அரசியல் நிகழ்வுகள் சிலவற்றை வாசித்தேன். அதைப்பற்றிய சில குறிப்புகள்.

மொகலாயப் பேரரசில் மன்னரின் மூத்தமகனுக்கே பேரரசராக முடிசூடப்படும் வழக்கம் இருந்துவந்துள்ளது. சமகால அரசியலில் எனக்கு இங்கே நினைவிற்கு வந்த பெயர்கள் ..நவீன் பட்நாயக், குமாரசாமி, உமர் அப்துல்லா, ராகுல் காந்தி
( பேரரசர் இன் வெயிட்டிங்) ஆகியோர். கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் நினைவுக்கு வருவது..சஞ்சய் காந்தி.அவருக்குப்பின் ராஜீவ், பரூக் அப்துல்லா, பிஜூ பட்நாயக்.

தற்போது உள்ள அனைத்து அமைச்சுப் பெருமக்களும் குறுநில மன்னர்கள்தாம்..அந்தவகையில் பார்த்தால் ஏகப்பட்டபேர் இந்த லிஸ்டில் தேறுவார்கள்..சுறுக் லிஸ்ட்: மாதவராவ் சிந்தியா--> ஜோதிராத்ய சிந்திய..ராஜேஷ் பைலட்--> சச்சின் பைலட்..பால் தாக்ரே---> உத்தவ் தாக்ரே..முரளி தேவ்ரா---> மிலிந் தேவ்ரா..சரத்பாவருக்கு ஆன் வாரிசு இல்லை அதனால்..அவரின் மகள் சுப்ரியா சூலே. ( இந்த லிஸ்ட்டில் இன்னும் நிறைய உருப்படிகள் தேறும்..அதுவும் மாநில அரசியலில் ஏகப்பட்டது தேறும்.. யோசிக்க நேரம் இல்லை..மிஸ்ஸான மினிஸ்டர்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..இங்கே சேர்த்து விடுகிறேன்.

சிலசமயம் மொகலாய அரசியலில் அண்ணன்,தம்பிக்கு இடையே அரசாட்சியை குறிவைத்து பெரும் போர் மூழுமாம். காதல் மன்னன் ஷாஜகான் கூட தன் சகோதர..சகலப்பாடிகளை எல்லாம் கொன்றுவிட்டுத்தான் அரியனையைக் கைப்பற்றினாராம். பாபரும், ஹுமாயுனும் தன்னுடைய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தன் வாரிசுகளுக்கிடையே அரசர் பதவிக்குப் போர்வரமல் தடுக்க..தனது சமஸ்தானங்களை (Kingdom?) மகன்களுக்குப் பிரித்துக்கொடுத்தார்களாம். அவர்கள் எழுதிவைத்த குறிப்பு எதையும் கலைஞர்.கருணாநிதி படித்தாரா என்று தெரியாது..ஆனால் பக்காவாக சமஸ்தானங்களைப் மூத்த மகன் அழகிரிக்கும்..இளைய மகன் ஸ்டாலினுக்கும் பிரித்துக்கொடுத்துவிட்டார். ஒளரங்கசீப் தன்னுடைய உயிலில் தன் சமஸ்தானத்தை அனைத்து மகன்களும் சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பம்தெரிவித்திருந்தாராம்..ஆனால் அவரின் மகன் மூஜாம் வாரிசுப்போரில் வென்றது தனிக்கதை!

ஏறக்குறைய அனைத்து மொகலாய அரசர்களும் தத்தமது மகன்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாம்..அக்பர்,ஜகாங்கீர்,ஷாஜகான்,ஒளரங்கசீப் இதில் அடக்கம். நம் வரலாற்றுப் பாடப்புத்தகதில் நல்லமனிதராகச் சித்தரிக்கப்படும் அக்பர்கூட அரசர் பதவியைப் பாதுகாக்க தன்னுடைய உறுவினன் அபுல் கசிம் என்பவரை கொன்றாராம். ஷாஜகானின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்த முகம்மது சாலிக் கம்பு இப்படிச் சொல்கிறார்..” It is enitirely lawful for great sovereigns to rid this mortal world of the existence of their brothers and other relations, whose anihilation is conducive to the common good". இதைப் படிக்கும் போது எனக்கு இங்கே கொஞ்சம் ஸ்லைட்டா தயாநிதிமாறன்...மதுரை தினகரன் ஆபீஸ் எரிப்பு..இரண்டு பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்தது எல்லாம் நியாபகத்திறகு வந்தது!

2 comments:

Radha said...

I think in Dinakaran office the common people were burnt.

பதி said...

//மதுரை தினகரன் ஆபீஸ் எரிப்பு..இரண்டு பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்தது எல்லாம் நியாபகத்திறகு வந்தது//

கோபாலா, இறந்தது 3 பேர். இருவர் அல்ல...

இறந்து போன மூவரில் இருவர் கணினி வல்லுனர்கள், ஒருவர் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்.