Sunday, August 23, 2009

இந்திய நீதித்துறை (Indian Judicial System)


என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில செய்திகளைப் படிக்கும்போது, விசயத்தின் தாக்கம் காரணமாக மயக்கமோ அல்லது பேச்சுமூச்சற்ற நிலையையோ அடையும் காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன்..அதற்கு நிகரான ஒரு சம்பவம் நேற்று இந்துவில் வந்த இந்த தலையங்கக் கட்டுரையைப் படிக்கும்போது நிகழ்ந்தது.

இந்திய சிறைகளில் தற்போது அடைக்கப்பட்டிருக்கும் 70% பேர் குற்றம் சுமத்தப்பட்டு தீர்ப்புக்காக சிறையில் காத்திருக்கும் கைதிகள் (undertrials awaiting justice). இதில் திகிலூட்டும் செய்தி என்னவென்றால், சமீபத்தில் நடந்த முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருப்பதுதான்.

Prime Minister Manmohan Singh told the conference of Chief Ministers and Chief Justices, many of them have been in jail “for periods longer than they would have served had they been sentenced.”

அதாவது, இந்த நீதிக்காக காத்திருக்கும் கைதிகளில் பலர், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்திருந்தால் எவ்வளவுகாலம் சிறையில் அடைபட்டுக்கிடப்பார்களோ அதைவிட அதிகமாகவே சிறையில் இருக்கின்றனர். குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாமல்..இதைப்படித்த போது எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ன சொல்கிறார் என்றால்,
Chief Justice A.P. Shah said in the report that "it would take the court approximately 466 years" to clear the pending 2,300 criminal appeals cases alone.

நீதித்துறையின் மிகமுக்கியக் குறிக்கோளாக அம்பேத்கர் சொன்னது..பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது. தற்போதைய நடைமுறை அதற்கு முற்றிலும் கோனலாக உள்ளது.

4 comments:

Prakash said...

சிறை வாழ்கை பெரிய கொடுமை கோப்ஸ். ஓரின சேர்க்கையும் ரவுடி அராஜகமும் என ஒரு நிரபராது நொந்தே போயிருப்பான். சாஷங் ரிடம்ப்ஷன் நினைவுக்கு வருகிறது. பின்னூட்டங்களுக்கு பதிலைக்காவிட்டால் ஆஸ்திரேலியாவிற்கு ஆடோ அனுப்பப்படும்

Gopalan Ramasubbu said...

//சிறை வாழ்கை பெரிய கொடுமை கோப்ஸ். ஓரின சேர்க்கையும் ரவுடி அராஜகமும் என ஒரு நிரபராது நொந்தே போயிருப்பான். //

அனுபவம் பேசுகிறது போல :P

PRABHU RAJADURAI said...

முக்கிய காரணம் போதுமான நீதிமன்றங்கள் இல்லை...இருந்தாலும், நீதிபதி பதவியில் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படாமல் இருப்பது.

அடுத்து உடனடியாக முடிவெடுக்க இயலாத நீதிபதிகள், வழக்கினை சுருக்கமாக முடிக்க இயலாத வழக்குரைஞர்கள்.

நீதிமன்ற புறக்கணிப்புகள்....தேவையற்ற வழக்குகள், முக்கியமாக அரசு அதிகாரிகளின் விடாப்பிடியான போக்கு

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காரணங்களை இவ்வாறு பட்டியலிட்டு எவ்வாறு அதனை குறைக்கலாம் என்று சிந்திப்பது பலனளிக்கலாம்...லாம்தான்!

Gopalan Ramasubbu said...

//இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காரணங்களை இவ்வாறு பட்டியலிட்டு எவ்வாறு அதனை குறைக்கலாம் என்று சிந்திப்பது பலனளிக்கலாம்...லாம்தான்!//

நன்றி, பிரபு ராஜதுரை.

இதைப்பற்றி விளக்கமாக எழுதுங்களேன்.