Tuesday, August 11, 2009

மொகலாயர்களின் Bureaucracy.


மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தின் போது அரசாங்கப் பணிக்கு ஆட்களை நியமிக்கும் முறை ( bureaucracy ) குறித்து அக்பரின் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய அபுல் பசலின் குறிப்புகளில் இருந்து ;

1. அரசாங்கப் பணிக்கு அரசர் ஒருவரை நியமிக்கும் போது அந்த ஆணை முதலில் அரசவைக்குறிப்பில் பதியப்படுகிறது.

2. அதன்பின் இந்த அரசவைக்குறிப்பு சிலரால் சரி பார்க்கப்பட்டு பணிநியமன ஆணை தயாரிக்கப்படுகிறது.

3. இந்தப் பணிநியமன ஆணை மூன்று அரசாங்க அலுவலர்களால் தனித்தனியே சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

4. அதன்பின் இந்த ஆணை நகல் எடுக்கும் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அங்கே பணிநியமன ஆனையின் சுருக்கமான வடிவம் தயாரிக்கப்படுகிறது. இந்த வடிவம் நான்கு வெவ்வேறு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது.

5. உறுதிசெய்யப்பட்ட ஆணை, அமைச்சர் ஒருவரால் சீல் செய்யப்பட்டு ரானுவ அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு பணிவிபர அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

6. இந்த பணிவிபர அறிக்கையை சமர்ப்பித்தவுடன், ஊதிய அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த ஊதிய அறிக்கை பல ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டபின் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது.

7. நிதி அமைச்சகமும் தன் பங்கிற்கு பணிவிபரம் மற்றும் ஊதியவிபரங்களை பல ஆவணங்களில் பதிவு செய்தவுடன், தனி அறிக்கை ஒன்றை மன்னருக்கு அனுப்பி வைக்கிறது.

8. மன்னர் இந்த அறிக்கையை படித்து ஊதிய விவரங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பார். அதன்பின் புதிய ஊழியறுக்கான ஊதியப்படி அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

9. இந்த ஊதியப்படி அறிக்கை மறுபடியும் நிதியமைச்சர், ஊதிய ஆனைத்தலைவர் மற்றும் ரானுவ கணக்காளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

10. இந்த ஊதிய அறிக்கையின் படி ரானுவ கணக்காளரால் ஊதிய ஆணை தயாரிக்கப்படுகிறது.

11. இந்த ஊதிய அறிக்கையில் வெவ்வேறு அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களின் ஆறு கையெப்பங்கள் வாங்கப்பட்டு அரசு கருவூலத்திற்கு அனுப்பப்படுகிறது.

12. அரசு கருவூலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் ஆறு கையெப்பங்களும் சரி பார்க்கப்பட்ட்டு ஊதியம் பெறுவதற்கான ஆனை வெளியிடப்படுகிறது.

***********************

பேரரசரின் ஆனை அமல் படுத்தபட 19 அடுக்குகளைக் கடந்து செல்லவேண்டுமாம்.ஒளரங்கசீப் தன்னுடை ஆணைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டு அடிக்கடி மனம் வெதும்பினாராம்.

Source : The Mughal World By Abraham Eraly.(Page 250-251)

2 comments:

Prakash said...

இப்பவே கண்ணை கட்டுதே

பதி said...

பரவாயில்லை.. 19 அடுக்குகளொட்ட நிறுத்திகிட்டாங்க மவராசங்க...

//ரானுவ // இராணுவ !!!!!