அடிக்கிறகைதான் அணைக்கும்!
”அடிக்கிறகைதான் அணைக்கும்” என்னும் பாடல் வரிகளுக்கு நம் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. கடந்த சிலநாட்களில் படித்த இரண்டு வெவ்வேறு செய்திகள் இதை எழுதத்தூண்டியது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செங்கோடிபுரம் என்னும் கிராமத்தில், கடந்த 60 வருடங்களாக வாழ்ந்துவரும் 56 தலித் குடும்பங்களை வெளியேற்றும்படி தர்மபுரி முனிசிபாலிட்டி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி உத்திரவு பிறப்பித்திருக்கிறது. இந்த 56 தலித் குடுப்பங்களும் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட காலனியில் குடியேற்றப்பட்டவர்கள்.
4.76 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த காலனியில்..4.23 ஏக்கர் நிலம் தர்மபுரி காஸ்மோபாலிட்டன் க்ளப்பிற்கும், இதர சாதி இந்துக்களுக்கும் சொந்தமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும்..தலித் மக்களுக்கு இதுவரை எந்த பட்டாவும் வழங்கப்படவில்லை என்றும் இந்துவின் செய்தி கூறுகிறது. இது செப்டம்பர் 2ஆம் தேதி வெளிவந்த செய்தி.
செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவந்த ஒரு செய்தி தலித் மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு 138.76 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக சொல்கிறது. இத்திட்டத்தின் மூலம் 1,16,800 தலித்மக்கள் பயனடைவார்கள் என்றும்..இத்திட்டம் The Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (THADCO) மூலம் நிறைவேற்றப்படும் என்றும் இந்துவின் செய்தி சொல்கிறது.
இந்த இரண்டு செய்திகளையும் படித்தபோது...தர்மபுரி முனிசிபாலிட்டி நிர்வாகத்தின்மேல் அடக்கமுடியாத கோபம் வந்தாலும் ..தமிழக அரசின் செயலை நினைத்து திருப்தி அடைவதைத் தவிற வேறு வழியில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அதோடு ”அடிக்கிறகைதான் அணைக்கும்” என்ற பாடல் வரியையும் நினைத்துக்கொள்கிறேன்.

2 comments:
பின்னர் அடிக்க இப்போது அணைத்தாகவேண்டும்
Enaku etho adikka mattum than seyra maari iruku...Namma govt anaikra velaya seyra maair ilaye!
:-/
Post a Comment