Saturday, October 27, 2007
Tuesday, August 07, 2007
போர்ட்ரெய்ட் புகைப்படப் போட்டிக்கு
சாமி சத்தியமா சொல்றேன்..பே வாட்சோ, பேஷன் டீவியோ பார்க்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல இது :)
Posted by Gopalan Ramasubbu at 10:01 PM 10 comments
Labels: புகைப்படப் போட்டி
Friday, August 03, 2007
புத்தக விமர்சனம்- ” Plain Speaking: A Sudra’s Story “
தென்தமிழ்நாட்டில் செங்கோட்டை என்னும் ஊரில்..வறுமைவாய்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட படையாச்சி என்னும் சாதியில் பிறந்த சட்டநாதன் அவர்களால் ஒரு குயர் நோட்டில், 48 வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்திருந்த அவரது சிறுவயது வாழ்க்கைக் குறிப்புகள்தான்(Memoirs) இந்தப் புத்தகம். இதைத்தான் அவருடைய பேத்தி உத்ரா நடராஜன் அவர்கள் Plain Speaking: A Sudra’s Story என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். விமர்சனத்தை இங்கே எழுதியுள்ளேன். படிச்சு பார்த்துட்டு கருத்து எதுனா இருந்துச்சுனா சொல்லுங்க. :)
Posted by Gopalan Ramasubbu at 9:19 PM 3 comments
Labels: புத்தக விமர்சனம்
Tuesday, July 31, 2007
பாம்பு என்றால் படையும் நடுங்குமா?
என்னத்த சொல்றதுனு தெரிலீங்கோவ்..:)
Posted by Gopalan Ramasubbu at 9:51 PM 5 comments
Tuesday, July 17, 2007
வானவில்..
இன்று மதியம் இங்கே ஒரே பனிக்கட்டி மழை... அலுவல் முடிந்து வீட்டுக்குப் போக ஆபிஸ் வாசல் தான்டி வெளியே வந்து ரோடு க்ராஸ் பண்ணி வானத்தைப் பார்த்தால் இந்த வானவில்..4 டிகிரி குளிர்ல வேலையின் களைப்பையும் மீறி மனதிற்கு மகிழ்ச்சி அழித்தது இந்த வானவில்..என் கைத்தொலைபேசியில் உள்ள
Posted by Gopalan Ramasubbu at 10:26 PM 7 comments
Saturday, June 23, 2007
ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition )
2005-06ஆம் ஆன்டுக்கான இந்தியக் குடும்ப நல (National Family Health Survey)சர்வேயின் படி தற்போது இந்தியாவில் இருக்கும் மூன்று வயதுக்குக்கீழுள்ள குழந்தைகளில் 46% பேர் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்களாம்.உலகத்திலேயெ இந்தியாவில்தான் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள் என்று BBC இனையதளத்தில் படித்தபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஏழைகள் அதிகம் என்பது தெரிந்ததே, ஆனால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் இந்தியர்கள் மொத்த மக்கள்தொகையில் 26% பேர், அப்படி இருக்கையில் எப்படி 46% குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக இருக்கிறார்கள்? இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் 26% மக்களின் குழந்தைகள்தான் இந்த 46% ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளா? வறுமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படுமா என்றெல்லாம் யோசித்துவிட்டு அந்த விஷயத்தை அப்படியே மறந்துவிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் ஏழ்மை காரணமாக அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு போதிய உணவு அளிக்கமுடிவதில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அது முற்றிலும் தவறு என்று நேற்றும், இன்றும் இந்துபத்திரிக்கையில் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் பற்றி ஏ.கே சிவக்குமார் என்பவர் விபரமாக எழுதியிருந்ததைப் படித்தவுடன் தெரிந்தது..
Why are levels of child malnutrition high?
Why are child malnutrition levels not improving?
குழந்தைகள் ஊட்டச்சத்தின்மைக்கு நான்கு காரணங்களைச் சொல்கிறார்,
1. கருவில் இருக்கும்போதே தாயின் மூலம் குழந்தைகள் பெறும் ஊட்டச்சத்தின்மை.இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 20% லிருந்து 30% குழந்தைகள் 2500 கிராமிற்கும் குறைவான எடையுடனே பிறக்கின்றனர்.
2. பொதுசுகாதார மைய வசதி இல்லாமை மற்றும் அவைகளின் செய்திகள் பெற்றோர்களைச் சென்று சேராமை. இதில் அவர் கூறும் மற்றொரு புள்ளிவிவரம் கவலையளிக்கிறது..2005-06ல் இந்தியாவில் பிறந்த குழந்தைகளில் 48% குழந்தைகளின் பிரசவங்கள் மட்டுமே Ttrained birth attendant(which includes a doctor, nurse, woman health worker, auxiliary nurse midwife, and other health personnel)
உதவியுடன் நடந்தததாம்.(இனிமேல் இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சியடைந்தது,9% வளர்ச்சியடைந்தது என்று யாரவது பெருமைப் பட்டால் இந்த புள்ளிவிவரத்தை அவர்களிடம் சொல்லலாம் என்றிருக்கிறேன்).
3. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகள்.
4.பெண் கல்வி,அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் விழிப்புணர்வு.
இதைப் படித்தவுடன் எனக்கு நிஜமாகவே பயமாக இருக்கிறது.. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கானும் அதே நேரத்தில் இந்தியாவை வல்லரசாக மாற்றப் போகும் தலைமுறையின் உடல் நலத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
Posted by Gopalan Ramasubbu at 8:06 PM 3 comments
Sunday, March 04, 2007
உய்யுமோ... உயர்கல்வி?
ஒரு நாட்டின் வளர்ச்சியின்மைக்குப் பல காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றின் கூட்டுவிளைவால் வளர்ச்சிப் பாதையிலிருந்து பின்னோக்கி இழுக்கப்படுகிறது நமது நாடு. குறிப்பாக, கல்வியின்மையின் அளவு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது (35 சதவீதம்) கவலைக்குரியது. இதுவே வளர்ந்த நாடுகளில் 5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி 6 - 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்க வேண்டியதன் பெரும்பகுதி வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. அதிலும் 3 - 6 வயதுடைய குழந்தைகள் சுமார் 7 கோடிக்கு மேல் இருப்பினும், அவர்களுக்கு கல்வியறிவை அளிக்காமல் இருப்பது நமது நாட்டுக்குப் பெருத்த இழப்பைத்தான் ஏற்படுத்தும்.
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் உழைப்பதற்குத் தயார் நிலையிலுள்ள உழைப்பாளிகளை போதிய பயிற்சியின்மை மற்றும் கல்வித் தகுதியின்மை என்ற நிலைகளில் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இது நமது நாட்டைப் பொறுத்தவரை கண்கூடு. மனித வளர்ச்சிக் குறியீட்டில் உலகின் 174 நாடுகளின் தர வரிசையில் 124-வது இடத்தைப் பிடித்துள்ள (2004-ஆம் ஆண்டு கணிப்பு) நாம், மேலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்படும் அவலம் உள்ளது. எனவே 14-23 வயதிற்குட்பட்ட பெரும்பாலானோர்க்கு உரிய தொழிற்பயிற்சி அல்லது உயர்கல்வி தரப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்.
சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் கடும் போட்டியால் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க, நம் நாட்டில் உயர்கல்வியைத் திட்டமிட்டு உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது! 112 கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 105 லட்சம் மாணவர்களே உயர்கல்வியை எட்டுவதும், 1.4 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வதும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய மக்கள்தொகைப் பெருக்க நெருக்கடியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
உயர்கல்வி முற்றிலுமாகத் தனியாருக்கே தாரை வார்க்கப்படுகிற நிலை; 8 சதவீதமாக உள்ள உயர்கல்விக்கான மாணவர் விகிதம் கட்டாயமாக உயர்ந்தே ஆக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் கடைபரப்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அணிவகுப்பு; உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் முறைகேடுகள்; பல்கலைக்கழக ஆட்சிமுறை நிர்வாக கோணல்கள்; அரசுகளின் பாரா முகம் போன்ற பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்திருக்கும் நமது உயர்கல்வி, வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு ஆருடம் தேவையில்லை!
1.நால்வரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கும் கீழே உழன்று கொண்டு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இல்லாத நிலையில், அனைவருக்கும் கல்வியை அளிக்கப் போகிறோமா?
2.உரிய வயதில் உள்ள ஐவரில் ஒருவருக்காவது உயர்கல்வியைச் சுவைக்கும் வாய்ப்பை அளிக்கப் போகிறோமா?
3.கல்விக்கான செலவினம் நாட்டின் வருங்காலத்திற்கான முதலீடு என்ற உணர்வுடன் 2020-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதார வல்லரசாக உயரப் போகிறோமா?
இத்தகைய எண்ணற்ற வினாக்களுக்கு விரைவில் விடை காணத்தானே வேண்டும் நாம்!
நன்றி-தினமணி
Posted by Gopalan Ramasubbu at 3:13 PM 9 comments
Labels: 2007, உயர்கல்வி.